(Translated by https://www.hiragana.jp/)
Paytm-க்கு விதிக்கப்பட்ட தடை… பிப்.29க்குப் பிறகு ஆப் செயல்படுமா? - சந்தேகங்களும் விளக்கமும் – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / வணிகம் / Paytm பேமன்ட் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை… பிப்.29க்குப் பிறகு ஆப் செயல்படுமா? - சந்தேகங்களும் விளக்கமும்

Paytm பேமன்ட் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை… பிப்.29க்குப் பிறகு ஆப் செயல்படுமா? - சந்தேகங்களும் விளக்கமும்

மாதிரி படம்

மாதிரி படம்

பிப்ரவரி 29க்குப் பிறகு பேடிஎம் வாலட் பேலன்ஸ்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் டாப் அப் செய்து மாற்றலாம். இருப்பினும், இதை இனி Paytm Payments வங்கி மூலம் செய்ய முடியாது.

  • 1-MIN READ News18 Tamil Tamil Nadu
  • Last Updated :

பிரபல டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான பே-டிஎம்மின் பேமன்ட் வங்கிக்கு பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் தடை விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பல்வேறு பில்கள், மொபைல் ரீசார்ஜ், ரயில் முதல் சினிமா டிக்கெட் புக்கிங் என பல சேவைகளுக்கு பொதுமக்கள் பே-டிஎம் செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சொந்தமாக பே டிஎம் பேமன்ட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மீது எழுந்த புகார்களை தொடர்ந்து ரிசர்வ் வங்கி அதனை தணிக்கை செய்தது.

விளம்பரம்

இதில் பேடிஎம் பேமன்ட் வங்கியில் விதிகள் சில மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேடிஎம் பேமன்ட் வங்கியில் மேலும் பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு வரும் 29 ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இருப்பினும் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியில் பணத்தை சேமித்து வைத்திருந்தால் அதனை எடுத்துக் கொள்ளலாம்.  ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை தொடர்பாக பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.  அதுபற்றி பார்க்கலாம்.

பிப்ரவரி 29க்குப் பிறகு Paytm ஆப் வேலை செய்யுமா?

விளம்பரம்

இந்த கேள்விக்கு Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா வெள்ளிக்கிழமை பதில் அளித்தார். அதாவது, இம்மாதம் 29 க்குப் பிறகும் பே-டிஎம் “வழக்கம் போல்” செயல்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பே-டிம் செயலியானது அதன் பேமென்ட் வங்கியுடன் மற்ற சில வங்கிகளுடன் இணைந்து செயல்படுகிறது. அதன்படி பேமென்ட் வங்கியுடனான சேவையை தவிர்த்து மற்ற வங்கிகளின் சேவைகளை பேடிஎம் தொடர்ந்து வழங்கும்.

பிப்ரவரி 29க்குப் பிறகு PayTM Wallet ஐப் பயன்படுத்தலாமா?

பிப்ரவரி 29க்குப் பிறகு பேடிஎம் வாலட் பேலன்ஸ்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் டாப் அப் செய்து மாற்றலாம். இருப்பினும், இதை இனி Paytm Payments வங்கி மூலம் செய்ய முடியாது.

விளம்பரம்

Paytm UPI வசதி செயல்படுமா?

பயனரின் UPI முகவரி Paytm Payments வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தால், பிப்ரவரி 29க்குப் பிறகு பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்படும். இருப்பினும், பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்ட UPI முகவரிகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 29க்குப் பிறகு பரிவர்த்தனைகளைத் தொடரலாம்.

இதையும் படிங்க - தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன்.. மத்திய அரசின் அசத்தலான திட்டம்

Paytm FASTag வேலை செய்யுமா?

FASTag போன்ற சில தயாரிப்புகள் ஏற்கனவே பிற வங்கிகளால் விநியோகிக்கப்பட்டுள்ளன. பே-டிஎம் பேமன்ட் வங்கி தவிர்த்து மற்றவற்றுடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக் வழக்கம் போல் செயல்படும்.

விளம்பரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்...
Tags: paytm
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்