(Translated by https://www.hiragana.jp/)
கோயில்களின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் புரிந்துகொள்ளவில்லை - மோடி – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / இந்தியா / ’கோயில்களின் முக்கியத்துவம் காங்கிரஸுக்கு புரியவில்லை- அசாமில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

’கோயில்களின் முக்கியத்துவம் காங்கிரஸுக்கு புரியவில்லை- அசாமில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மோடி

மோடி

வடகிழக்கு மாநில இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதே தனது லட்சியம் - பிரதமர் நரேந்திர மோடி

  • 1-MIN READ News18 Tamil Chennai,Tamil Nadu
  • Last Updated :

சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்கள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை அம்மாநில தலைநகர் கவுகாத்திக்கு சென்றார். தொடர்ந்து கவுகாத்தியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் காமாக்யா கோயில் வழித்தடம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதேபோன்று 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

விளம்பரம்

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோயிலில் 12 நாட்களில் 24 லட்சம் பக்தர்கள் வழிபாடு நடத்தியிருப்பதாகக் கூறினார். காமாக்யா கோயில் திட்டப் பணி பயன்பாட்டிற்கு வரும்போது அசாம் மாநிலத்திலும் சுற்றுலாத்துறை மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வட கிழக்கு மாநிலங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே, விமான போக்குவரத்து சேவை மிக மோசமாக இருந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சி காலத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் தற்போது அமைதி திரும்பியுள்ளதாகவும், பல மாவட்டங்களில் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க:   " என் நெஞ்சில் குடியிருக்கும்…" - வாழ்த்திய அனைவருக்கும் அறிக்கையில் நன்றி சொன்னார் விஜய்..

வடகிழக்கு மாநில இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதே தனது லட்சியம் என்றும் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்கள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் இருந்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக தங்கள் சொந்த கலாச்சாரத்தைப் பற்றி வெட்கப்படும் போக்கை உருவாக்கியதாகவும் பிரதமர் மோடி சாடினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்...
Tags: Assam , PM Modi
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்