திருத்தக் கட்டுப்பாடு
பதிப்புக் கட்டுப்பாடு (revision control அல்லது version control) என்பது ஒரே மூலத்துக்கு பல திருத்தங்களை மேற்கொள்வதை மேலாண்மை செய்வதாகும். இது பொறியியலிலும் மென்பொருள் ஆக்கத்திலும் முதன்மையாக பயன்படும் ஏற்பாடு ஆகும். குறிப்பாக ஒரு குழு சேர்ந்து ஒரு மூல ஆக்கத்தை ஆக்கும் பொழுது, ஒவ்வொருவரும் செய்யும் மாற்றங்களை நிகழ் நேரத்தில் மேலாண்மை செய்ய திருத்தக் கட்டுப்பாடு ஏதுவாக்குகிறது. எடுத்துக்காட்டாக விக்கியில் ஒவ்வொரு பயனர்கள் ஒவ்வொரு பக்கத்தில் செய்யும் மாற்றங்களும் பதிவு செய்யப்படுகின்றன. திருத்தங்கள் சரியில்லை என்றால் விக்கியின் திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருளால் முன்னைய நிலையை மீள் செய்துவிடலாம். ஒரு கட்டுரையை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் மாற்றினால் மென் பொருள் அதை பயனருக்கு அறிவிக்கும், இயலுமென்றால் ஒன்றாக்கும்.[1][2][3]
பதிப்புக் கட்டுப்பாட்டு மென்பொருள்
[தொகு]மூல மென்பொருள் கோப்புகளை இலகுவாக கிளைபடுத, மாற்றங்களை இன்றைப்படுத்த, தேவைப்படும் பொழுது ஒன்றாக்க திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் விருத்தியின் ஒரு நிலையைக் குறித்து (Tag) அந்த நிலைக்கு மீள முடியும். இப்படி பல Features திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்கள் கொண்டிருக்கின்றன.
கட்டற்றவை
[தொகு]வணிகம்
[தொகு]கலைச்சொற்கள்
[தொகு]- களஞ்சியம் - Repository
- வேலைப் பிரதி - Working copy
- மாற்றம் - Change
- மாற்றக் கணம் - Change set
- எடுத்தல் - Check out
- கோப்பைப் பூட்டுதல் - File locking
- இடுதல் - Check in
- உறுதி - Commit
- Atomic Commit
- தலை - Head
- முரண் - Conflict
- பதிப்பு/திருத்தம் - Revision
- கிளைத்தல்
- ஒன்றாக்கல்
- குறியீடு - Label/Tag
மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Sullivan, Bryan (2009). Mercurial: the Definitive Guide. Sebastopol: O'Reilly Media, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-596-55547-4. Archived from the original on 8 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
- ↑ "Google Docs", See what's changed in a file, Google Inc., archived from the original on 2022-10-06, பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ Scott, Chacon; Straub, Ben (2014). Pro Git Second Edition (in ஆங்கிலம்). United States: Apress. p. 14. Archived from the original on 2015-12-25. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.