(Translated by https://www.hiragana.jp/)
சிலுவை அடையாளம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சிலுவை அடையாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலுவை அடையாளம் வரைதல்.

சிலுவை அடையாளம் என்பது, கிறிஸ்தவர்கள் மூவொரு இறைவன் (தந்தை, மகன், தூய ஆவியார்) பெயரால் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டே வழிபடும் ஒரு பிராத்தனை ஆகும். இது, கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

பிராத்தனை

[தொகு]
பழைய தமிழ் வடிவம் புதிய தமிழ் வடிவம்
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென். தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

வழிபடும் முறை

[தொகு]

முதலில் கைகளைக் குவித்தவாறு பிராத்தனையை தொடங்க வேண்டும். பின்பு இடக்கையை நெஞ்சில் வைத்தவாறே, வலக்கையை நெற்றியில் வைத்து 'தந்தை' என்றும், பின்பு நெஞ்சுக்கு இறக்கி 'மகன்' என்றும், பிறகு இடப்பக்கத் தோளில் வைத்து 'தூய' என்றும், பின்னர் வலப்பக்கத் தோளுக்கு கொண்டு சென்று 'ஆவியின்' என்றும், அதன்பின் கைகளைக் குவித்து 'பெயராலே' என்றும், இறுதியாக தலை வணங்கி 'ஆமென்' என்றும் கூறவேண்டும்.

பொருள்

[தொகு]

தந்தையாம் கடவுள், தன் ஒரே அன்பு மகன் இயேசு கிறிஸ்துவை, கன்னி மரியாவின் வயிற்றில் தூய ஆவியாரின் வல்லமையால் கருவாக உருவாகச் செய்து, மனிதராக உலகை மீட்க அனுப்பினார் என்பதே சிலுவை அடையாளத்தின் பொருள். நெற்றி தந்தையின் விண்ணக மேன்மையையும், நெஞ்சம் இயேசுவின் அன்பையும், தோள்கள் தூய ஆவியாரின் வல்லமையையும் குறிக்கின்றன.

பயன்பாடு

[தொகு]

பின்வரும் தருணங்களில் சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது:

  • திருப்பலி வழிபாட்டின் தொடக்கத்திலும், முடிவிலும்.
  • சில ஆராதனை முறைகளின் தொடக்கத்திலும், முடிவிலும்.
  • செபமாலை, சிலுவைப்பாதை உள்ளிட்ட பக்தி முயற்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
கத்தோலிக்க திருச்சபை
மரபுவழி திருச்சபை
சீர்திருத்த திருச்சபை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Prayer of the Veil" (in ஆங்கிலம்). Encyclopedia Coptica. 2011. pp. 16–17. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
  2. Hippolytus. "Apostolic Tradition" (PDF) (in ஆங்கிலம்). St. John's Episcopal Church. pp. 8, 16, 17. Archived from the original (PDF) on 4 February 2019. பார்க்கப்பட்ட நாள் 5 September 2020.
  3. Seymour, William Wood (1898). The Cross in Tradition, History, and Art (in ஆங்கிலம்). G.P. Putnam's Sons. p. 419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவை_அடையாளம்&oldid=4098880" இலிருந்து மீள்விக்கப்பட்டது