(Translated by https://www.hiragana.jp/)
அப்காசியா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

அப்காசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்காசியா குடியரசு
Аҧсны / அப்ஸ்னி (அப்காஸ்)
Абхазия / அப்ஹாசியா (ரஷ்யம்)
கொடி of அப்காசியா
கொடி
தேசிய சின்னம் of அப்காசியா
தேசிய சின்னம்
நாட்டுப்பண்: "ஐயாயிரா"
("வெற்றி")
அப்காசியா (மஞ்சள்), ஜோர்ஜியா (pink), ரஷ்யா (இளம் மஞ்சள்)
அப்காசியா (மஞ்சள்), ஜோர்ஜியா (pink), ரஷ்யா (இளம் மஞ்சள்)
அப்காசியாவின் அமைவிடம் (கடும் பச்சை, வட்டமிடப்பட்டது) , ஜோர்ஜியா (இளம் பச்சை)
அப்காசியாவின் அமைவிடம் (கடும் பச்சை, வட்டமிடப்பட்டது)
, ஜோர்ஜியா (இளம் பச்சை)
தலைநகரம்சுகுமி
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அப்காஸ், ரஷ்ய மொழி1
மக்கள்அப்காஸ்
அரசாங்கம்தன்னுரிமைக் குடியரசு
• அதிபர்
செர்கே பகாப்ஷ்
• பிரதமர்
அலெக்சாண்டர் ஆங்க்வாப்
ஜோர்ஜியாவிடம் இருந்து நடப்பின்படி மெய்யான (de facto) விடுதலை
• விடுதலை அறிவிப்பு
சூலை 23, 1992
• அரசியலமைப்பு
அக்டோபர் 2, 1999
• அங்கீகாரம் (ரஷ்யாவினால்)
ஆகத்து 26, 2008
பரப்பு
• மொத்தம்
8,432 km2 (3,256 sq mi)
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
157,000 முதல் 190,0001
177,0003
• 2003 கணக்கெடுப்பு
216,000 (கேள்விக்குரியது)
• அடர்த்தி
29/km2 (75.1/sq mi)
நாணயம்ரஷ்ய ரூபிள் (RUB)
நேர வலயம்ஒ.அ.நே+3 (MSK)
  1. Russian has co-official status and widespread use by government and other institutions.
  2. மெகிரேலிய மொழி கலி மாவட்டத்தில் அதிகளவில் பேசப்படுகிறது.
  3. பிரித்தானிக்கா
Abkhazia

அப்காசியா (Abkhazia) என்பது கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை[1] குடியரசாகும். இது ஜோர்ஜியாவின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். ரஷ்யா ஆகத்து 26, 2008 இல் இக்குடியரசையும், தெற்கு ஒசேத்தியாவையும் தனிநாடுகளாக அங்கீகரித்து அறிவித்தது. ஐநாவின் வேறு எந்த உறுப்பு நடுகளும் இதுவரையில் இதனை அங்கீகரிக்கவில்லை.

அப்காசியா கருங் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் ரஷ்யா உள்ளது. இதன் தலைநகர் சுகுமி.

அப்காசிய மக்களின் பிரிவினைவாதிகள் 1992 ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவிடம் இருந்து தம்மை தனிநாடாக அறிவித்தனர். இதனை அடுத்து 1992 முதல் 1993 வரை இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜியா தோல்வியடைந்தது. அப்காசியாவில் இருந்து அனைத்து ஜோர்ஜிய மக்களும் வெளியேற்றப்பட்டனர். 1994 இல் ஐநாவின் ஆதரவில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. ஐநாவின் கண்காணிப்பில், ரஷ்யா தலைமையிலான அமைதிப் படையினர் அங்கு நிலை கொண்டனர். எனினும் இதன் உரிமை தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தது. சூலை 2006 இல் ஜோர்ஜியா அப்காசியாவின் "கடோரி கோர்ஜ்" பகுதியில் வெற்றிகரமான இராணுவத் தாக்குதலை நடத்தியிருந்தது. ஆகத்து 2008 இல் அப்காசியப் படைகள் கடோரி ஏரியின் பெரும் பகுதிகளை மீளக் கைப்பற்றியது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Abkhazia: ten years on. பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம் By Rachel Clogg, Conciliation Resources, 2001
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-08-18. பார்க்கப்பட்ட நாள் 2008-08-27.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்காசியா&oldid=3541035" இலிருந்து மீள்விக்கப்பட்டது