1527
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1527 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1527 MDXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1558 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2280 |
அர்மீனிய நாட்காட்டி | 976 ԹՎ ՋՀԶ |
சீன நாட்காட்டி | 4223-4224 |
எபிரேய நாட்காட்டி | 5286-5287 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1582-1583 1449-1450 4628-4629 |
இரானிய நாட்காட்டி | 905-906 |
இசுலாமிய நாட்காட்டி | 933 – 934 |
சப்பானிய நாட்காட்டி | Daiei 7 ( |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1777 |
யூலியன் நாட்காட்டி | 1527 MDXXVII |
கொரிய நாட்காட்டி | 3860 |
ஆண்டு 1527 (MDXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே 6 - எசுப்பானியாவும், செருமானியப் படைகளும் இணைந்து போர்போன் இளவரசர் தலைமையில் உரோமைத் தாக்கி வெற்றி கொண்டனர். திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசுவுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.
- சூன் 17 - கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் சுவீடனில் ஆரம்பமானது.
- சூன் 22 - ஜகார்த்தா நகரம் ஜெயகர்த்தா என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
- ஆகத்து 3 - வட அமெரிக்காவில் இருந்து முதலாவது கடிதம் ஜோன் ரட் என்பவரால் நியூபின்லாந்து, செயிண்ட் யான்சு நகரில் இருந்து அனுப்பப்பட்டது.
- ஆகத்து 20 - டென்மார்க் மன்னர் முதலாம் பிரெடெரிக் லூதரனியத்தை அனுமதித்தார். பாதிரியார்கள் திருமணம் புரிவதற்கு அனுமதித்தார். திருச்சபை நியமனங்களை வழங்குவதற்கு திருத்தந்தையின் முன்னனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் தளர்த்தினார்.[1][2]
- செப்டம்பர் 27 - முதலாம் பெர்டினாண்டு அங்கேரியின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான்.
- எசுப்பானியர் குவாத்தமாலாவைக் கைப்பற்றினர். முதலாவது குவாத்தமாலா நகரம் அமைக்கப்பட்டது.
- எசுப்பானியர் பிரான்சிசுக்கோ டெ மொன்டேசோ யுகட்டானை ஊடுருவினான்.
பிறப்புகள்
[தொகு]- மே 21 - எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் (இ. 1598)
- அமீதா பானு பேகம், முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவி, பேரரசர் அக்பரின் தாய் (இ. 1604)
இறப்புகள்
[தொகு]- சூன் 21 - நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய மெய்யியலாளர் (பி. 1469)