(Translated by https://www.hiragana.jp/)
புத்துருசு புத்துருசு காலீ - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

புத்துருசு புத்துருசு காலீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்துருசு புத்துருசு காலீ
6 ஆவது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்
பதவியில்
1992 யனவரி 1 – 1996 திசெம்பர் 31
முன்னையவர்கேவியர் பேரெசு த குவெல்லர்
பின்னவர்கொபி அன்னான்
1 ஆவது பிராங்கோபோன் செயலாளர் நாயகம்
பதவியில்
1997 நவம்பர் 16 – 2002 திசெம்பர் 31
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்அப்து தியுப்
வெளிவிவகார அமைச்சர்
பதில்
பதவியில்
1978 செப்தெம்பர் 17 – 1979 பெப்பிரவரி 17
பிரதமர்மம்துகு சலீம்
முஸ்தபா கலீல்
முன்னையவர்முகம்மது இபுறாகீம் காமில்
பின்னவர்முஸ்தபா கலீல்
பதவியில்
1977 நவம்பர் 17 – 1977 திசெம்பர் 15
பிரதமர்மம்துகு சலீம்
முன்னையவர்இசுமாஈல் பகுமி
பின்னவர்முகம்மது இபுறாகீம் காமில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-11-14)14 நவம்பர் 1922
காகிறா, எகிப்து
இறப்பு16 பெப்ரவரி 2016(2016-02-16) (அகவை 93)
காகிறா, எகிப்து
அரசியல் கட்சிஅரபு சோசலிசவாதி (1978 இற்கு முன்)
தேசிய சனநாயகக் கட்சி (1978–2011)
சுயாதீனம் (2011–2016)
துணைவர்லெய்யா மரியா புத்துருசு காலீ
முன்னாள் கல்லூரிகாகிறா பல்கலைக்கழகம்
பாந்தெயொன் சொர்போன் பல்கலைக்கழகம்
அரசியற் கற்கை நிறுவனம், பாரிசு

புத்துருசு புத்துருசு காலீ (بطرس بطرس غالى புத்ருசு புத்ருசு காலீ , Egyptian Arabic pronunciation: [ˈbotɾos ˈɣæːli]; 1922 நவம்பர் 14 – 2016 பெப்பிரவரி 16) ஒரு எகிப்திய அரசியல்வாதியும் 1992 யனவரி முதல் 1996 திசெம்பர் வரை ஐக்கிய நாடுகள் அவையின் ஆறாவது பொதுச் செயலாளராகவிருந்த இராசதந்திரியும் ஆவார். ஒரு கல்வியியலாளராகவும் எகிப்தின் முன்னாள் பதில் வெளிவிவகார அமைச்சராகவுமிருந்த புத்துருசு புத்துருசு காலீ யூகோசுலாவியா பிரிவினை, றுவாண்டா இனப்படுகொலை என்பன உட்பட உலகின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைப் பற்றிக் கவனஞ் செலுத்தினார். அதன் பின்னர் 1997 நவம்பர் முதல் 2002 திசெம்பர் வரை அவர் முதலாவது பிராங்கோபோன் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றினார்.