தீரன் அதிகாரம் ஒன்று
தீரன் அதிகாரம் ஒன்று, டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த வினோத் இயக்கத்தில், தமிழில் உருவான பரபரப்புடன், எதிர்பார்ப்பூட்டும் திரைப்படமாகும். பவாரியா நடவடிக்கை வழக்கிலிருந்து உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது கொள்ளையர்களின் கொடூர நடவடிக்கையையும், தமிழ்நாடு காவல் துறையினரின் தீரமான நடவடிக்கை தொடர்புடைய படமாகும். கார்த்திக் சிவகுமார் மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர் இந்த படத்தில் முன்னணி நடிகர்களாக உள்ளனர், அபிமன்யு சிங் முதன்மை எதிரியாக நடித்தார். "காக்கி - தி பவர் ஆஃப் போலிஸ்" என்ற தெலுங்கு மொழி மாற்றுத் திரைப்படத்தோடு இணைந்து இத்திரைப்படம் நவம்பர் 17, 2017 இல் வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள்
[தொகு]- கார்த்தி- தீரன் திருமாறன் டிஎஸ்பி
- ரகுல் பிரீத் சிங் - பிரியா தீரன்
- மனோபாலா- பிரியாவின் தந்தை
- சத்யன்- தீரனின் நண்பன்
- போஸ் வெங்கட்-சத்யா
- வர்கீஸ் மேத்யூ - ஐ. ஜி. பி. விஜய் ரத்தோர்
- அபிமன்யு சிங் - ஓம்வீர் ("ஓமா")
- ரோஹித் பதக் - பனே சிங்
- நர ஸ்ரீனிவாஸ் - மதுர்
- சுரேந்தர் தாகூர் - காளி
- பிரயாஸ் மான் - போஹ்ரா
- கிஷோர் கதம் - ஹரம் சிங்
- ஜமீல் கான் - பண்டிட்
- ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்சன் - ஒரு நடன கலைஞர்
- கல்யாணி நடராஜன் - பிரியாவின் அம்மா
- சோனியா - சத்யாவின் மனைவி
- பிரவீணா - தீரனின் தாய்
- அபிராமி - தீரனின் சகோதரி
- ஆர். என். ஆர். மனோகர் - அமைச்சர்
உண்மை சம்பவங்கள்
[தொகு]தமிழ்நாடு காவல் துறையின் திட்டமிட்ட நடவடிக்கைகளை படம்பிடித்த படம் இது. உத்தரப்பிரதேசத்திலிருந்து பவாரியா எனும் கொடுங்கோல் இனத்தவரின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் 2000 ஆம் ஆண்டில் மற்றவர்களின் கைதுகள் தான் இக்கதை.
1990 களின் பிற்பகுதியிலும், 2000 களின் பிற்பகுதியிலும், தமிழ்நாட்டிலும், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயுதமேந்திய வட இந்தியாவின் பவாரியா இனத்தினர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. கும்மிடிப்பூண்டி எம். எல். ஏ. சுதர்சனம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஜனவரி 2005 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை(பவாரியா நடவடிக்கை) எடுத்தது.காவல்துறையின் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் எஸ். ஆர். ஜான்கித் தலைமையிலான சிறப்புக் குழு, உத்தரப்பிரதேச பொலிஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த பணியில் ஈடுபட்டு, தேவையான குற்றவாளிகளான ஓமா பவாரியா, பிசுரா பவாரியா, விஜய் பவாரியா ஆகியோரைக் கைது செய்ய முடிவெடுத்தனர்.
ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய இடங்களில் தொலைதூர இடங்களில் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு,இக்குழுக்கள் பல வாரங்களாக வேலை செய்து பிசுரா பவாரியா, விஜய் பவாரியா ஆகியோரை என்கவுன்ட்டரில் கொன்றனர். மற்ற பிரதான சந்தேக நபர்களான ஓமா பவாரியா மற்றும் கே. லக்ஷ்மன் என்ற அசோக் பவாரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்கியது.[2]
இக்கைது மற்றும் என்கவுன்ட்டரில் பெரும் பங்கு வகித்த காவல் துறையினருக்கு இந்தப் படம் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு எந்தவொரு கௌரவ விருதுகளையும் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உயர் பதவிகளோ சலுகைகளோ அரசாங்கத்தால் அளிக்கப்படவில்லை.இந்த திரைப்படத்தை தயாரிப்பதில் படத்தின் தயாரிப்பாளர்கள், எஸ். எஸ். ஜங்கித் மற்றும் பிற காவல்துறையினர்களோடு மிகவும் நெருக்கமாக பணிபுரிந்தனர்.படத்தின் வெளியீட்டிற்குப் பின்னர், எஸ். எஸ். ஜங்கித் அவர்கள் படத்தில் நடந்த உண்மையானவற்றை அழகாக சித்தரித்தற்காக இந்த படக்குழுவினை பாராட்டியதோடு படத்தின் இயக்குனரையும் புகழ்ந்தார்.
இசை மற்றும் பாடல்கள்
[தொகு]இந்த திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவு கிரிபரனால் இயற்றப்பட்டது. இந்த ஆல்பம் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் ஆதித்யா மியூசிக்கில் வெளியிடப்பட்டது.
Track Listing | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | ||||||
1. | "செவத்த புள்ள" | கிப்ரான் & ரஞ்சித் | ரஞ்சித் | 03:54 | ||||||
2. | "ஒரு வீட்டில்" | தாமரை | இன்னோ கங்கா , ஷாஷா திருப்பதி | 04:03 | ||||||
3. | "ஓ சதியே" | உமா தேவி | அர்மான் மாலிக் | 03:56 | ||||||
4. | "லாலி லாலி" | ராஜு முருகன் | சத்யப்பிரகாஷ் , பிரகதி குருப்பிரசாத் | 03:51 | ||||||
5. | "தீரன் டா" | விவேக் | அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ் | 03:16 | ||||||
6. | "டிங்கா டிங்கா" | உதய் குமார் | பத்மலதா | 03:16 | ||||||
7. | "டிங்கா டிங்கா (தமிழ்)" | க. சவுந்தரராஜன் | நமிதா பாபு | 03:17 | ||||||
மொத்த நீளம்: |
25:31 |
வெளியீட்டு
[தொகு]இந்த படம் நவம்பர் 17, 2017 அன்று வெளியிடப்பட்டது.[3] இந்த செயற்கைக்கோள் உரிமைகள் ஸ்டார் விஜய்க்கு விற்கப்பட்டன. அமேசான், டிஜிட்டல் உரிமைகளை வாங்கியது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-24. பார்க்கப்பட்ட நாள் 2018-03-03.
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/operation-bawariaon-silver-screen-now/article20493784.ece
- ↑ http://www.behindwoods.com/tamil-movies/dheeran-athigaram-ondru/index.html
- ↑ https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijay-tv-acquires-satellite-rights-of-karthis-theeran-adhigaram-ondru.html