(Translated by https://www.hiragana.jp/)
நுண்ணுறுப்பு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

நுண்ணுறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதிரி விலங்கு உயிரணுவின் நுண் உறுப்புகள்:
(1) கருவின்கரு அல்லது புன்கரு
(2) உயிரணுக் கரு
(3) இரைபோசோம்
(4) சுரப்பு புடகம் (Vesicle)
(5) அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
(6) கொல்கி உபகரணம்
(7) கலமென்சவ்வு
(8) அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை
(9) இழைமணி
(10) புன்வெற்றிடம் (Vacuole)
(11) குழியமுதலுரு (Cytosol)
(12) இலைசோசோம்
(13) புன்மையத்தி (Centriole)

நுண் உறுப்புகள் அல்லது உயிரணுவின் உள்ளுறுப்புகள் (organelle) (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு உயிரணுவின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன.

மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கள் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. நிலைக்கருவிலிகளிடம் இவை இல்லை என முன்னர் கருதப்பட்டாலும், தற்போது உண்டு என ஆராயப்பட்டுள்ளது.[1] நுண்ணுறுப்புகள் அனைத்தும் நுண்நோக்கி கொண்டே அவதானிக்க முடியும். ஒரு உயிரணுவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நுண்ணுறுப்பு அதன் கரு ஆகும்.

மெய்க்கருவுயிரிகளின் நுண்ணுறுப்புகள்

[தொகு]

இவை கொழுப்பினாலான மென்சவ்வைக் கொண்டுள்ளன. கரு, புன்வெற்றிடம் போன்ற தோற்றத்தில் பெரிய நுண்ணுறுப்புகள் ஒளி நுண்ணோக்கியின் உதவியுடன் இலகுவில் அவதானிக்கலாம். அனைத்து நுண்ணுறுப்புகளும் அனைத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவதில்லை, ஒரு சில மெய்க்கருவுயிரிகளில் உள்ள நுண்ணுறுப்பு வேறு சிலவற்றில் இல்லாமல் இருக்கக்கூடும். நுண்ணுறுப்புகளைச் சூழப்பட்டிருக்கும் மென்சவ்வு ஒன்று தொடக்கம் மூன்று வரையான படலத்தைக் கொண்டிருக்கலாம், இது நுண்ணுறுப்புகளைப் பொறுத்து மாறுபடுகின்றது.

பெரிய நுண்ணுறுப்புகள்

[தொகு]
மெய்க்கருவுயிரிகளின் பெரிய நுண்ணுறுப்புகள்
நுண்ணுறுப்பு பிரதான தொழில் அமைப்பு உயிரினம் குறிப்பு
பச்சையவுருமணி ஒளித்தொகுப்பு, சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெறல் இரட்டை மென்சவ்வு தாவரம், அதிநுண்ணுயிரிகள் சில மரபணுக்களைக் கொண்டது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது (அக ஒன்றியவாழ்வு)
அகக்கலவுருச் சிறுவலை புதிய புரதங்களின் குறிபெயர்ப்பிலும் மடிப்பிலும் (அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை), கொழுப்பு உருவாக்கத்திலும் ( அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை) ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள் அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை இரைபோசொம்களை கொண்டுள்ளது.
கொல்கிச் சிக்கல் புரதத்தைப் பொதியிட்டு வகைப்படுத்தல் ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள்
இழைமணி அடினோசின் மூப்பொசுபேற்றுக்கள் உருவாக்கம் மூலம் உயிரணுவிற்குச் சக்தியை வழங்கல் இரட்டை மென்சவ்வு பெரும்பாலான மெய்க்கருவுயிரிகள் டி.என்.ஏ கொண்டுள்ளது; பண்டைய மெய்க்கருவுயிரிக் கலங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது (அக ஒன்றியவாழ்வு)
புன்வெற்றிடம் சேமிப்பு, கழிவகற்றல், உயிரணுச் சமநிலையைப் பேணுதல் ஒற்றை மென்சவ்வு மெய்க்கருவுயிரிகள்
கரு டி.என்.ஏ மூலம் மரபுத் தகவலைப் பேணுதல், உயிரணுவின் அனைத்து தொழிற்பாட்டையும் கட்டுப்படுத்தல், புரதத்தொகுப்பு இரட்டை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள் மரபணு அலகுகள் கொண்டுள்ளவை

சிறிய நுண்ணுறுப்புகள்

[தொகு]
சிறிய மெய்க்கருவுயிரி நுண் உறுப்புகளும் உயிரணு உள்ளடக்கங்களும்
நுண் உறுப்புகள்/பெருமூலக்கூறுகள் பிரதான தொழில் அமைப்பு உயிரினம்
உச்சிமூர்த்தம் விந்தணு முட்டையுடன் இணைவதற்கு உதவுகின்றது ஒற்றை மென்சவ்வு பெரும்பாலான விலங்குகள்
தன்னிச்சை தின்னுடல் (autophagosome) நுண் உறுப்புக்களை அழிக்கும் செயன்முறை இரட்டை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரி
புன்மையத்தி உயிரணுச் சட்டக அமைப்புக்குத் தேவையானது, கலப்பிரிவின் போது கதிர் நார்களை உருவாக்குவதில் பங்கு நுண்குழற் புரதம் விலங்குகள்
பிசிர் அசைவு நுண்குழற் புரதம் விலங்குகள், அதி நுண்ணுயிரி சில தாவரங்கள்
கண்வடுவப் புள்ளி உபகரணம் ஒளியைக் கண்டறிதல் பச்சைப் பாசிகள் மற்றும் ஒளிதொகுப்புச் செய்யும் இயுகிளினிட்டுகள் (euglenids) போன்ற வேறு ஒருகல உயிர்கள்
சர்க்கரையுடல் சர்க்கரைப் பகுப்பை நிறைவேற்ற உதவுகிறது ஒற்றை மென்சவ்வு சில முதலுயிரிகள்
ஐதரசன் உடல்கள் சக்தி மற்றும் ஐதரசன் உருவாக்கம் இரட்டை மென்சவ்வு மிகச்சில ஒருகல மெய்க்கருவுயிரிகள்
இலைசோசோம் பெரும் மூலக்கூறுகளை உடைப்பது (புரதங்கள் + பல்சக்கரைட்டுக்கள்) ஒற்றை மென்சவ்வு பெரும்பான்மை மெய்க்கருவுயிரிகள்
மெலனோசொம் நிறப்பொருள் சேமிப்பு ஒற்றை மென்சவ்வு விலங்குகள்
தசைச் சிறுநார்கள் தசைச் சுருக்கம் கற்றையான நார்கள் விலங்குகள்
புன்கரு இரைபோசோம் உற்பத்தி புரதம்-டி.என்.ஏ-ஆர்.என்.ஏ பெரும்பாலான மெய்க்கருவுயிரிகள்
பெறோக்சிசோம் ஐதரசன் பேரோட்சைட்டை உடைத்தல் ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள்
இரைபோசோம் புரதமாக ஆர்.என்.ஏ குறிபெயர்ப்பு ஆர்.என்.ஏ-புரதம் மெய்க்கருவுயிரி, நிலைக்கருவிலி
நுண் குமிழி(vesicle) பொருட்களைக் கடத்துதல் ஒற்றை மென்சவ்வு அனைத்து மெய்க்கருவுயிரிகள்

நிலைக்கருவிலிகளின் நுண்ணுறுப்புகள்

[தொகு]

நிலைக்கருவிலிகள் மெய்க்கருவுயிரிகள் போன்று சிக்கல் நிறைந்தவை அல்ல. முன்னர் நிலைக்கருவிலிகளுக்குள் கொழுப்பு மென்சவ்வால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை என்று நம்பப்பட்டது, ஆனால் இன்று அவற்றுள் உள்ள நுண் உறுப்புகள் அறியப்பட்டுள்ளது. 1970களில் பாக்டீரியா மேசோசோம் என்னும் நுண் உறுப்பைக் கொண்டுள்ளது என்று அவதானிக்கப்பட்டது, ஆனால் அவை இலத்திரன் நுண் நோக்கியில் பாக்டீரியாவைப் பார்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட வேதிப்போருட்களின் விளைவால் ஏற்பட்ட போலி உருவம் எனத் தெரியவந்தது. [2] ஆராய்வுகளின் பெறுபேறாக நிலைக்கருவிலிகளின் நுண் உறுப்புகள் கண்டறியப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kerfeld, Ca; Sawaya, Mr; Tanaka, S; Nguyen, Cv; Phillips, M; Beeby, M; Yeates, To (August 2005). "Protein structures forming the shell of primitive bacterial organelles.". Science 309 (5736): 936–8. doi:10.1126/science.1113397. பப்மெட்:16081736. 
  2. Ryter A (1988). "Contribution of new cryomethods to a better knowledge of bacterial anatomy". Ann. Inst. Pasteur Microbiol. 139 (1): 33–44. doi:10.1016/0769-2609(88)90095-6. பப்மெட்:3289587. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Organelles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுறுப்பு&oldid=2760470" இலிருந்து மீள்விக்கப்பட்டது