(Translated by https://www.hiragana.jp/)
பயனர் பேச்சு:மணி.கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:மணி.கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 114: வரிசை 114:
::புரிந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுப்பதற்கு நன்றி [[பயனர்:மணி.கணேசன்|மணி.கணேசன்]]! நீங்கள் [[மா சே துங்]] கட்டுரையில் ஒரு மேற்கோள் கொடுத்திருந்தீர்கள். அது தவறாக இணைக்கப்பட்டிருந்தது. திருத்தியிருக்கிறேன். செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களை வரலாற்றில் சென்று பார்த்தீர்கள் என்றால் புரிந்துகொள்வீர்கள். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D&diff=2294010&oldid=2293987 இங்கு] செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தைப் பாருங்கள். நீங்கள் கொடுக்கும் இணைப்புக்களைச் சரியான பக்கத்திற்குச் செல்லுமாறு இணையுங்கள். எ.கா. koodal.com ஐ இணைத்தீர்களென்றால், ஒருவரால் மா.சே.துங் இன் பக்கத்திற்குப் போக முடியாது. எனவே koodal.com இலுள்ள சரியான பக்கத்திற்கு இணைப்பைக் கொடுங்கள். மேற்கோள்களை இணைக்க இன்னொரு இலகுவான வழி புரூவ் இட் பயன்படுத்தல். [[விக்கிப்பீடியா:புரூவ் இட்|இங்கு]] அதற்கான இணைப்பு உள்ளது. பாருங்கள். புரியாவிட்டால் கேளுங்கள். மேலும் மா.சே.துங் கட்டுரைக்கு 1000பைட்டுக்களுக்கு மேல் இணைத்துவிட்டீர்கள் என்றால், அதனை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளலாம். நன்றி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 15:15, 25 மே 2017 (UTC)
::புரிந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுப்பதற்கு நன்றி [[பயனர்:மணி.கணேசன்|மணி.கணேசன்]]! நீங்கள் [[மா சே துங்]] கட்டுரையில் ஒரு மேற்கோள் கொடுத்திருந்தீர்கள். அது தவறாக இணைக்கப்பட்டிருந்தது. திருத்தியிருக்கிறேன். செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களை வரலாற்றில் சென்று பார்த்தீர்கள் என்றால் புரிந்துகொள்வீர்கள். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D&diff=2294010&oldid=2293987 இங்கு] செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தைப் பாருங்கள். நீங்கள் கொடுக்கும் இணைப்புக்களைச் சரியான பக்கத்திற்குச் செல்லுமாறு இணையுங்கள். எ.கா. koodal.com ஐ இணைத்தீர்களென்றால், ஒருவரால் மா.சே.துங் இன் பக்கத்திற்குப் போக முடியாது. எனவே koodal.com இலுள்ள சரியான பக்கத்திற்கு இணைப்பைக் கொடுங்கள். மேற்கோள்களை இணைக்க இன்னொரு இலகுவான வழி புரூவ் இட் பயன்படுத்தல். [[விக்கிப்பீடியா:புரூவ் இட்|இங்கு]] அதற்கான இணைப்பு உள்ளது. பாருங்கள். புரியாவிட்டால் கேளுங்கள். மேலும் மா.சே.துங் கட்டுரைக்கு 1000பைட்டுக்களுக்கு மேல் இணைத்துவிட்டீர்கள் என்றால், அதனை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளலாம். நன்றி. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 15:15, 25 மே 2017 (UTC)
:::[[பயனர்:மணி.கணேசன்|மணி.கணேசன்]]! உடனடியாக மா.சே.துங் கட்டுரையை விரிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள். வசனங்கள், மற்றும் வார்த்தைகளுக்கிடையில் இடைவெளி விடுவதற்கு இன்னும் கொஞ்சம் கவனமெடுத்தால் நன்று. [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D&diff=2294094&oldid=2294056 இங்கே] சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். அத்துடன் நீங்கள் கொடுத்த மேற்கோளையும் எவ்வாறு மாற்றியுள்ளேன் என்று [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D&diff=next&oldid=2294094 இங்கே] பார்த்து, கட்டுரையில், மேற்கோள் பகுதியில் எவ்வாறு உள்ளதென ஒப்பிட்டுப் பாருங்கள். அதன்மூலம் மேற்கோள்கள் இணைப்பதைப் புரிந்துகொள்வீர்கள். நான் [[விக்கிப்பீடியா:புரூவ் இட்|புரூவ் இட்]] பயன்படுத்தும்போது, சில நிரல்கள் தாமாகவே இணைக்கப்படும்போது வேறுபாடுகள் இருக்கும்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:53, 25 மே 2017 (UTC)
:::[[பயனர்:மணி.கணேசன்|மணி.கணேசன்]]! உடனடியாக மா.சே.துங் கட்டுரையை விரிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள். வசனங்கள், மற்றும் வார்த்தைகளுக்கிடையில் இடைவெளி விடுவதற்கு இன்னும் கொஞ்சம் கவனமெடுத்தால் நன்று. [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D&diff=2294094&oldid=2294056 இங்கே] சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். அத்துடன் நீங்கள் கொடுத்த மேற்கோளையும் எவ்வாறு மாற்றியுள்ளேன் என்று [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D&diff=next&oldid=2294094 இங்கே] பார்த்து, கட்டுரையில், மேற்கோள் பகுதியில் எவ்வாறு உள்ளதென ஒப்பிட்டுப் பாருங்கள். அதன்மூலம் மேற்கோள்கள் இணைப்பதைப் புரிந்துகொள்வீர்கள். நான் [[விக்கிப்பீடியா:புரூவ் இட்|புரூவ் இட்]] பயன்படுத்தும்போது, சில நிரல்கள் தாமாகவே இணைக்கப்படும்போது வேறுபாடுகள் இருக்கும்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 16:53, 25 மே 2017 (UTC)

== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 16:59, 31 மே 2017 (UTC)

16:59, 31 மே 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், மணி.கணேசன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நற்கீரன் (பேச்சு) 15:01, 18 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வணக்கம், மணி.கணேசன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 15:44, 18 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கவனிக்க

மூன்று வரிகளுக்கு குறைவானக் கட்டுரைகள் நம் விக்கிபீடியா விதிகளின்படி உடனடியாக நீக்கப்பட்டுவிடும். நீண்ட கட்டுரைகளை எழுத வேண்டுகிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 06:25, 24 ஏப்ரல் 2017 (UTC)

April 2017

தகவற் படவுரு வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO 02:20, 26 ஏப்ரல் 2017 (UTC)

மேற்கோள் முறையாக, நம்பத்தகுந்த இடத்தில் இருந்து சுட்டப்படல் வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்--AntanO 02:31, 26 ஏப்ரல் 2017 (UTC)

Information icon Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. ~AntanO4task (பேச்சு) 02:37, 26 ஏப்ரல் 2017 (UTC)

கவனிக்க

தமிழிலோ அல்லது எந்த மொழியில் எழுதும் போதும் இரு சொற்களிடையே ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என்பது இலக்கண விதி. உங்கள் கட்டுரைகளில் இந்த விதி பல இடங்களில் மீறப்பட்டுள்ளது. உ+ம்: நீங்கள் எழுதியது: //எழுத்து இதழை1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சி.சு.செல்லப்பா தோற்றுவித்தார்.புதுக் கவிதை வளர்ச்சிக்கு எழுத்து இதழ் துணைபுரிந்தது.இவ்விதழில் ந.பிச்சமூர்த்தி,க.நா.சுப்ரமணியன்,தி.சோ.வேணுகோபாலன்,டி.கே.துரைஸ்வாமி,பசுவய்யா,எஸ்.வைத்தீஸ்வரன், தருமுசிவராமு,சி.மணி போன்றோர் புதுக்கவிதைகள் எழுதிப் பங்களித்தனர்.1962ஆம் ஆண்டு 24கவிஞர்களின் 63கவிதைகளைத் தொகுத்து,புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை சி.சு.செல்லப்பா வெளியிட்டார்.119 வது இதழோடு எழுத்து நின்றுபோனது.எழுத்து இயக்கக் காலமாக 1950-70 காலக்கட்டம் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.// இங்கு இவ்விதி குறைந்தது 27 தடவைகள் மீறப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 08:23, 26 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம். //பிறகு,எட்வர்ட் மைபிரிட்ஷ்// இந்த வரிகளில் உள்ள இலக்கணப் பிழை எதுவெனக் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 10:56, 5 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)

பகுப்புகள் சேர்க்க

வணக்கம், புதுக் கட்டுரைகள் எழுதுவதற்குப் பாராட்டுக்கள். பொதுவாக மேற்கோள்களும், பகுப்பும் விக்கிக்க ட்டுரைக்கு முக்கியமானதாகும். மேற்கோள் மூலமே நீங்கள் எழுதிய தகவலின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கமுடியும். பகுப்பு மூலமே பிற இக்கட்டுரையைக் கண்டு, படிக்க முடியும். உதாரணம் புல்லங்காடனார் - இரண்டு சதுர அடைப்புக்குறியுடன் தொடங்கி பகுப்பு:சங்கப் புலவர்கள் என்று எழுதி மீண்டும் இரண்டு சதுர அடைப்புக்குறியுடன் மூடிவிடுங்கள் இதுவே பகுப்பு இடுவதற்கான வழி. பகுப்பு:தாய்ப் பகுப்பு இதில் உள்ள அனைத்துப் பகுப்புகளையும் ஒருமுறைப் பார்த்தால் உங்களுக்கு சரியான பகுப்பைத் தேர்வு செய்ய உதவும். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் மேற்கோள் இடுதல் தொடர்பாக இது உங்களுக்கு உதவும்.--நீச்சல்காரன் (பேச்சு) 06:19, 1 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கிக்கொண்டிருக்கும் கட்டுரையான திரைப்படம் எனும் கட்டுரையை அருள்கூர்ந்து 29,000 பைட்டுக்கும் மேலாக விரிவாக்குங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:44, 5 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு

  • 👌 - வாழ்த்துக்கள்! நீங்கள் விரிவாக்கிய திரைப்படம் எனும் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்குக! இது போல் பல கட்டுரைகளையும் விரிவாக்கி போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! தற்போது நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை - 01

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:18, 6 மே 2017 (UTC)[பதிலளி]

26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:40, 6 மே 2017 (UTC)[பதிலளி]

கட்டுரை அளவை அறிந்து கொள்ள

கட்டுரை ஒன்றின் அளவை அறிந்து கொள்ள கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தை திறந்தால் பைட்டு அளவுகள் எவ்வாறு ஒவ்வொரு தொகுப்பிலும் மாற்றம் அடைகின்றன என்பதைக் காட்டும். உதாரணமாக: இங்கு பாருங்கள். இக்கட்டுரையின் இப்போதுள்ள பைட்டு அளவு 38,532 பைட்டுகள் ஆகும். உங்கள் சந்தேகங்களை விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 08:11, 9 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

நீங்கள் போட்டிக்காக விரிவாக்குகின்ற மொழிபெயர்ப்பு எனும் கட்டுரையைத் தற்போது சமர்ப்பிக்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:53, 9 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மணி.கணேசன்! நீங்கள் போட்டிக்காக ஒரு கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது, தயவுசெய்து அக்கட்டுரை ஏற்கனவே ஒருவரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்துவிட்டு விரிவாக்கத் தொடங்குங்கள். நீங்கள் விரிவாக்கி, சமர்ப்பித்துள்ள கௌதம புத்தர் கட்டுரை ஏற்கனவே நந்தினி கந்தசாமி அவர்களால் முற்பதிவு செய்யப்பட்டிருந்தது. @Shriheeran:--கலை (பேச்சு) 18:37, 9 மே 2017 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும்.நடந்த தவறுக்கு வருந்துகிறேன்.இனி இது நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.பயனர்:மணி.கணேசன்

அப்படியே ஆகுக! அத்துடன் நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளின் உள்ளடக்கங்கள்ளுக்கு மேற்கோள்கள் இடுவது குறைவோல தெரிகின்றது. விரிவாக்கும் போது கூடவே மேற்கோளையும் சேர்த்து இடுங்கள். ஆங்கிலவிக்கியிலுள்ள மேற்கோளையும் இடலாம். அல்லது சுயமாகவும் மேற்கோளை உருவாக்கி இடலாம். நன்றி, போட்டியில் முனைப்போடு பங்குபற்றி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:41, 10 மே 2017 (UTC)[பதிலளி]
புரிந்துகொண்டமைக்கு நன்றி மணி.கணேசன். . ஒருவர் முற்பதிவு செய்வதை ஏனைய பயனர்கள் தொக்குக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனாலும், ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் இதனைத் தவிர்க்கலாம் என்பதே நோக்கம். மேலும் கட்டுரை முற்பதிவு பக்கத்தின் முதற்பத்தியில் கூறியுள்ளபடி, ஒரு தடவையில் 12 கட்டுரைகளை மட்டுமே முற்பதிவு செய்யுங்கள். நீங்கள் விரிவாக்கி முடிக்கும் கட்டுரை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், வேறொரு கட்டுரையை முற்பதிவு செய்துகொள்ளலாம். நன்றி.--கலை (பேச்சு) 17:04, 10 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மணி.கணேசன்! நீங்கள் போட்டிக்காக ஒரு கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது, தயவுசெய்து முக்கிய தகவல்களுக்கான மேற்கோள்களை கட்டுரையின் நடுநடுவே கொடுங்கள். நீங்கள் தகவல்களைப் பெறும் இடத்தை உசாத்துணையாகக் கொடுக்கிறீர்கள் என்று தெரிகிறது. அது ஒரு பொதுவான தகவல் சேர்ப்பாகவே இருக்கும். அதே நேரம் நீங்கள் பெறும் குறிப்பிடும்படியான, முக்கியமான ஒரு தகவல் எந்த நூலில், எந்தப் பக்கத்தில் இருக்கிறது அல்லது எந்த இணையத்தளத்தில் பெற்றுக்கொண்டீர்கள், அதன் இணைப்பு என்பவற்றை மேற்கோளாகக் கட்டுரையின் நடுநடுவே கொடுத்தல் சிறப்பு. ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கிறீர்கள் எனில், அங்கேயே மேற்கோள்கள் கிடைக்கும். அவற்றையே இணைக்கலாம். உதவி தேவையெனில் இங்கே பாருங்கள். அல்லது கேளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 09:02, 14 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மணி.கணேசன்! நீங்கள் கட்டுரையாக்கத்திற்கு ஏதாவது மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில், தயவுசெய்து, நீங்கள் பதிவு செய்யும் உரைகளை மீண்டும் ஒருமுறை வாசித்து, சரியாகத் திருத்திவிட்டுப் பின்னர் விக்கியில் பதியுங்கள். காரணம் பல வசனங்கள் தமிழில் சரியாக அமையவில்லை. அத்துடன் சில வசனங்கள் சரியான அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை. மொழிபெயர்ப்புக் கருவிகள் சரியாக மொழிபெயர்க்கத் தவறுகின்றன. எனவே தயவுசெய்து ஆங்கில உரையுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டுப் பதிவு செய்யுங்கள். எ.கா.
  • அவருடைய எழுத்துக்கள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகள், குறுகிய,நகைச்சுவை மிக்க ஓவியங்கள் மற்றும் கடிகாரங்கள் குறித்து எழுதினார்.பலர் "அன்டோஷா செக்கோன்ட்" (அன்டோஷே செகன்டே) மற்றும் "மேன் அன்ட் எ பிளட் ஸ்லென்" (Человек без селезенки) போன்ற போலி வாழ்க்கைச்சூழல் பற்றிய அவரது வெளியீடுகள் படிப்படியாக அவரை ரஷ்ய தெரு வாழ்க்கையின் வஞ்சகத்தைப் பதிவுசெய்யும் வரலாற்று ஆசிரியராக்கியது.1882 ஆம் ஆண்டில்,அவர் நிக்கோலாய் லெய்க்கின் சொந்தமான ஓஸ்கோல்கி (தெறிப்புகள்)க்கு எழுதியிருந்தார்.அந்தக் காலக்கட்டத்தில் முன்னணி வெளியீட்டாளர்களில் ஒருவரான நிகோலாய் லேய்க்கின் இருந்தவர் ஆவார்.இந்தக் காலக்கட்டத்தில் செக்கோவ் எழுத்துத் தொனியில் முதிர்ச்சியும் செறிவும் காணப்பட்டன.
  • அப்போது அங்கிருந்த புல்வெளி அழகானது அவரை வெகுவாக ஈர்த்தது.
வாசித்தால் உங்களுக்கே புரியும் என நினைக்கிறேன். தற்போது அந்தக் கட்டுரையில் திருத்தங்கள் செய்துள்ளேன். --கலை (பேச்சு) 18:27, 20 மே 2017 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரைகள்

முழுக்க முழுக்க ஆங்கில உள்ளடக்கத்தையும், வெறுமனே தலைப்பைத் தமிழிலும் கொண்டிருக்கும் நவீன கவிதை, ஆடன் கவிதைகள் போன்ர கட்டுரைகளை உருவாக்காதீர்கள். அருள்கூர்ந்து அவற்றை மொழிபெயருங்கள். அத்துடன் உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள். வந்த ஒரு சில மாதங்களில் விக்கிப்பீடியாவை புரிந்துகொள்ளும் வேகத்துக்கு பாராட்டுகள். இவ்வாலோசனையை மனதில் நிறுத்தி அடுத்த பங்களிப்பை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:57, 11 மே 2017 (UTC)[பதிலளி]

மொழிபெயர்க்கும் முறைகள் தகவல் தெரிவிக்கவும்.பயனர்:மணி.கணேசன்
ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழிபெயர்ப்பது தானே. எடுத்துக்காட்டாக "It is a modern way of writing articles" என்பதை கட்டுரைகள் எழுதுவதற்கான நவீன வழி இதுவாகும். என மொழிபெயர்க்கலாம். போட்டிக்காக விரிவாக்கும் கட்டுரைகளையும் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்த்து விரிவாக்கலாம். இதில் கூகுள் மொழிபெயர்ப்புக்கருவி கொண்டு மொழிபெயர்காதீர்கள்! அது தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைக்குப் புறம்பானது.. ஆலோசனைகளை செவிமடுப்பதற்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:12, 11 மே 2017 (UTC)--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:12, 11 மே 2017 (UTC)[பதிலளி]

நாளிதழ்

நாளிதழ் கட்டுரையை இன்னும் கொஞ்சம் விக்கிப்படுத்தினால் போட்டிக்காக ஏற்றுக்கொள்ளலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:01, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தாங்கள் விரும்பியவாறு அதிகப்படுத்தியிருக்கிறேன்.மேலும் தேவை ஏற்படின் தெரியப்படுத்தவும்.நன்றி.பயனர்:மணி.கணேசன்

விக்கிப்படுத்த வேண்டும், பார்க்க வார்ப்புரு:விக்கியாக்கம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:02, 13 மே 2017 (UTC)[பதிலளி]
இப்பயனரால் சேர்க்கப்பட்ட தொகுப்புக்கள் பல இணைத்தளங்களில் இருந்த பிரதி செய்யப்பட்டுள்ளன. நாளிதழ் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். @Shriheeran: கவனியுங்கள். --AntanO 09:44, 14 மே 2017 (UTC)[பதிலளி]

மணி.கணேசன் அவர்களே, தாங்கள் போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்குவதையிட்டு மிக்க மகிழ்ச்சி! ஆயினும் அருள்கூர்ந்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை விக்கிப்பீடியாவிற்குள் சேர்க்காதீர்கள். மேலதிக விபரத்திற்கு இங்கு பருங்கள். ஆங்கில விக்கியிலிருந்தே மொழிபெயர்த்து விரிவாக்கலாம். உதவி தேவையானால் கேளுங்கள். போட்டியில் முனைபோடு பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:17, 14 மே 2017 (UTC)[பதிலளி]

மேற்கோள்களை முறையாகவும் சரியாகவும் எவ்வாறு இணைப்பது என்று சற்று விளக்கிக் கூற வேண்டுகிறேன்.விக்கியில் வழிகாட்டப்பட்டிருக்கும் தகவல்கள் முழுமையான புரிதல்களைத் தருவதாக இல்லை. நன்றி!பயனர்:மணி.கணேசன்

இங்கு செல்லுங்கள். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:53, 15 மே 2017 (UTC)[பதிலளி]

தானியங்கி மொழிபெயர்ப்பு

வணக்கம், தானியங்கியால் மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகள் உடனடியாகவே நீக்கப்படும். தானியங்கி கொண்டு பகுதி பகுதியாக மொழிபெயர்க்க விரும்பினால், முதலில் உங்கள் மணல் தொட்டியில் கட்டுரையைத் தொகுத்து, பின்னர் பொதுவெளிக்கு மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:12, 19 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:11, 21 மே 2017 (UTC)[பதிலளி]

ஆங்கில, தமிழ் விக்கிப்பீயாக் கட்டுரைகளை மேற்கோள்களாக் குறிப்பிட முடியாது. --AntanO 15:50, 24 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டிக் கட்டுரை விரிவாக்கத்திற்குச் சில ஆலோசனைகள்

மணி.கணேசன்! முதலில், போட்டிக்காகக் கட்டுரைகளை விரிவாக்கி வருவதற்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். நீங்கள் கட்டுரை விரிவாக்கம் செய்யும்போது சில விடயங்களைக் கவனிக்க வேண்டுகிறேன்.

  1. நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளில், சொற்களுக்கிடையில், மற்றும் வசனங்களுக்கிடையில் இடைவெளிகள் இல்லாமல் உள்ளன. அவற்றை எழுதும்போதே இடைவெளியுடன் எழுதிவிட்டீர்கள் என்றால் இலகுவாகவும், நன்றாகவும் இருக்கும். இன்னொருவர் அதை சரிபார்க்கும்போது திருத்துவதாயின் அவசியமற்றதாகவும், நீண்ட நேரம் எடுப்பதாகவும் இருக்கிறது. அவற்றைத் தவிர்ப்பதற்காக, தயவுசெய்து கட்டுரையாக்கத் தொகுப்பின்போதே இதனையும் கவனித்துச் செய்யுங்கள்.
  2. மேலும் விக்கிப்பீடியாவிலிருந்தே, விக்கிப்பீடியாவிற்கு மேற்கோள்கள் கொடுக்க முடியாது என்பதனால், வேறு இணையத் தளங்களில் தேடிக் கொடுக்கலாம். நான் பொதுவாக கூகிளில் இட்டுத் தேடி, மிகவும் பொருத்தமான மேற்கோளைத் தெரிவுசெய்து, அதனை இணைப்பேன். ஆனால் வெட்டி, ஒட்டுதலைத் தவிர்ப்பதுடன். அங்குள்ளவாறு அதே உரைநடை வராமல், உங்கள் எழுத்துக்களில் எழுதி, மேற்கோளாக அந்தப் பக்கங்களைக் கொடுங்கள். மேற்கோள் எவ்வாறு கொடுப்பது என அறிந்துகொள்ள, இங்கே பாருங்கள். ஏதாவது மேலதிக உதவி தேவைப்படின் ஏனைய விக்கிப்பீடியர்களிடம் கேட்கலாம்.
  3. கட்டுரை விதிகளின்படி, உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டும், மொத்த பைட்டுக்களின் அளவு 26000 ஐத் தாண்டிய பின்னரும் மட்டுமே கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். இங்கே இது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களால் மா சே துங் கட்டுரைக்கு 6000 பைட்டுக்கள் சேர்க்கப்படவில்லை.

நன்றி.--கலை (பேச்சு) 11:08, 25 மே 2017 (UTC)[பதிலளி]

தங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி. முயன்று தவறிக் கற்று எழுதி வரும் எனக்கு உங்களின் மதிப்புமிகு ஆலோசனைகள் உற்சாகத்தைத் தருகிறது. போதுமான பைட்டுகளை விரைவில் சேர்த்து சமர்பித்து விடுகிறேன்.பயனர்:மணி.கணேசன்
புரிந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுப்பதற்கு நன்றி மணி.கணேசன்! நீங்கள் மா சே துங் கட்டுரையில் ஒரு மேற்கோள் கொடுத்திருந்தீர்கள். அது தவறாக இணைக்கப்பட்டிருந்தது. திருத்தியிருக்கிறேன். செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களை வரலாற்றில் சென்று பார்த்தீர்கள் என்றால் புரிந்துகொள்வீர்கள். இங்கு செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தைப் பாருங்கள். நீங்கள் கொடுக்கும் இணைப்புக்களைச் சரியான பக்கத்திற்குச் செல்லுமாறு இணையுங்கள். எ.கா. koodal.com ஐ இணைத்தீர்களென்றால், ஒருவரால் மா.சே.துங் இன் பக்கத்திற்குப் போக முடியாது. எனவே koodal.com இலுள்ள சரியான பக்கத்திற்கு இணைப்பைக் கொடுங்கள். மேற்கோள்களை இணைக்க இன்னொரு இலகுவான வழி புரூவ் இட் பயன்படுத்தல். இங்கு அதற்கான இணைப்பு உள்ளது. பாருங்கள். புரியாவிட்டால் கேளுங்கள். மேலும் மா.சே.துங் கட்டுரைக்கு 1000பைட்டுக்களுக்கு மேல் இணைத்துவிட்டீர்கள் என்றால், அதனை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளலாம். நன்றி. --கலை (பேச்சு) 15:15, 25 மே 2017 (UTC)[பதிலளி]
மணி.கணேசன்! உடனடியாக மா.சே.துங் கட்டுரையை விரிவாக்கியமைக்கு வாழ்த்துக்கள். வசனங்கள், மற்றும் வார்த்தைகளுக்கிடையில் இடைவெளி விடுவதற்கு இன்னும் கொஞ்சம் கவனமெடுத்தால் நன்று. இங்கே சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். அத்துடன் நீங்கள் கொடுத்த மேற்கோளையும் எவ்வாறு மாற்றியுள்ளேன் என்று இங்கே பார்த்து, கட்டுரையில், மேற்கோள் பகுதியில் எவ்வாறு உள்ளதென ஒப்பிட்டுப் பாருங்கள். அதன்மூலம் மேற்கோள்கள் இணைப்பதைப் புரிந்துகொள்வீர்கள். நான் புரூவ் இட் பயன்படுத்தும்போது, சில நிரல்கள் தாமாகவே இணைக்கப்படும்போது வேறுபாடுகள் இருக்கும்.--கலை (பேச்சு) 16:53, 25 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:59, 31 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:மணி.கணேசன்&oldid=2297081" இலிருந்து மீள்விக்கப்பட்டது