(Translated by https://www.hiragana.jp/)
வானூர்தி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:10, 25 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி இணைப்பு: fy:Fleantúch)
விமானம்
படிமம்:Chc bell 206.jpg
உலங்கு வானூர்தி

விமானம் அல்லது வானூர்தி என்பது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கும் ஒரு ஊர்தி. இவ்வகை பறக்கும் இயந்திரங்களாகிய வானூர்திகள் சுமார் 300-500 மக்களையும் பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக தரையில் இருந்து 9000-14000 மீட்டர் உயரத்திலே பறந்து எடுத்துச் செல்ல வல்ல போக்குவரத்து ஊர்திகள்.

வரலாறு

முதல் வானூர்திரைட் சகோதரர்கள், டிசம்பர் 17, 1903

சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட் (Orville Wright) மற்றும் வில்பர் ரைட் (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் படைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள வட கேரோலைனா (North Carolina NC) என்னும் மாநிலத்தில் உள்ள கிட்டி ஃஆக் (Kitty Hawk) என்னும் இடத்தில் இப்புரட்சிகரமான நிகழ்வு நடந்தது. இந்த புகழ் மிக்க வானூர்தியின் வரலாறு மிகவும் விரிவானது.

வானுர்தி பறப்பது எப்படி

நான்கு விசைகள் வானுர்தியை பறக்க வைக்கிறது அவை, 1. ஏற்றம் 2. எடை 3. உந்து விசை 4. இழுவை

உயர்த்தி, வானுர்தியை மேலே உயர்த்துகிறது. காற்று வானுர்தியின் இறக்கைகள் வழியாக நகரும் விதம் மற்றும் இறக்கைகள் வடிவமைப்பு வானுர்தியை மேலே உயர்த்துகிறது. எடை, வானுர்தியை, பூமியை நோக்கி இழுக்கிறது. வானுர்தியின் எடை சீராக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இது வானுர்தியை சமநிலையில் வைத்திருக்கிறது.

அமுக்கம், வானுர்தியை முன்னோக்கி செலுத்துகிறது. இவ்வமுக்கத்தை உண்டாக்க பொறி பயண்படுத்தப்படுகிறது.

தடைவிசை, வானுர்தியின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. பலமான காற்று வீசும் பொழுது அதனை எதிர்த்து நடந்தால் தடைவிசையினை உணரலாம். காற்று வானுர்தியை தான்டிச்செல்லுமாறும் அதனால் உண்டாகும் தடைவிசை குறைவாக இருக்குமாறும் வானுர்தி வடிவமைக்கப்படுகிறது.

இந்நான்கு விசைகளும் ஒன்றினைந்து செயல்படும் பொழுது வானுர்தி பறக்கிறது.

வகைகள்

இவ்வகை ஊர்திகளில் பன்னூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன.

  1. செங்குத்தாக எழுந்து பறக்க வல்ல உலங்கு வானூர்திகள் (helicopters).
  2. பயணிகளை சுமந்து செல்லும் வானூர்திகள்.
  3. ஒலியின் வேகத்தையும் கடந்து செல்லும் வல்லமை படைத்த வானூர்தி.
  4. மீயொலி விரைவானூர்திகள் supersonic.
  5. பல்வகை திறம்படைத்த போர் வானூர்திகள்.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானூர்தி&oldid=1094331" இலிருந்து மீள்விக்கப்பட்டது