(Translated by https://www.hiragana.jp/)
பயனர் பேச்சு:Gunathamizh - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Gunathamizh

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:54, 31 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (கட்டுரை முற்பதிவு அறிவிப்பு)

வாருங்கள், Gunathamizh!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Terrance \பேச்சு 12:56, 21 ஏப்ரல் 2008 (UTC)

மகிழ்ச்சி

உங்களைப் போன்ற தமிழறிவு பெற்றவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வந்துள்ளது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள "ஒலிக்கூறுகள்" யாப்பிலக்கணக் கூறுகளாகிய அசை, சீர், தளை, அடி போன்றவையா? வெண்பா தொடர்பில் நான் செய்த சிறு ஆய்வினால் எனக்கு இவற்றில் ஆர்வமுண்டு. இதுபற்றி நீங்கள் சில கட்டுரைகளை எழுதினால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 07:59, 16 மார்ச் 2009 (UTC)

வணக்கம்

வணக்கம் முனைவர் குணசிலன் அவர்களே! உங்களை போன்ற துறை வல்லுனர்கள் பங்களிக்க வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நானும் கே.எஸ. ஆர் கல்லூரியின் முன்னால் மாணவன் :) நீங்கள் ஒலிக்கூறுகள் தொடர்பான கட்டுரையை தொடங்க வேண்டுகிறேன். நீங்கள் தமிழ் இலக்கணம் குறித்த கட்டுரைகளை தொடங்கி பங்களிக்க வேண்டுகிறேன். நீஙகள் தமிழ் விக்கிக்கு பங்களிப்பது தொடர்பாக ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் தொடர்புகொள்ளவும்.--கார்த்திக் 07:07, 24 மார்ச் 2009 (UTC)

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
தமிழ் குறித்து பங்களிக்கும் உங்கள் ஆர்வம் எனக்குப் பிடித்துள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். உங்களுக்கு இச்சிறப்புப் பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன்!!! :) சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:44, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மகிழ்ச்சி

நன்றி நண்பா.இப்போது தான் சின்னச் சின்ன நுட்பங்களாக அறிந்துகொண்டு வருகிறேன். விக்கியில் உரையாடுவது எப்படி நண்பா..?

பங்களிப்பு வேண்டுகோள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:13, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Gunathamizh,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011


Hi Gunathamizh,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:53, 21 மார்ச் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:09, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:54, 31 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gunathamizh&oldid=2297068" இலிருந்து மீள்விக்கப்பட்டது