(Translated by https://www.hiragana.jp/)
குட்டிக்கண்ணன் (விடுதலைப் புலி உறுப்பினர்) - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டிக்கண்ணன் (விடுதலைப் புலி உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் கண்ணன் (கப்டன் சிலம்பரசன்) குறிப்பிடத்தக்க ஒரு பாடகர். வீதி நாடக நடிகர். விடுதலைப் புலிகளின் போராட்டக்கலைஞர். விடுதலைப்புலிகளின் போராளி. இவர் பாடிய ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி பாடல்[1] தனித்துவமாய் அமைந்து இவருக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் நிலாவெளி, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைத்தீவு சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு அடைந்தார்.

இவரது குரலில் தமிழீழத்தில் ஒலித்த முதல் பாடல்

ஐந்தடி கூட்டுக்குள்ளே
ஐம்பது பேரை போட்டடைத்தான்
அம்மா என்று சத்தமிட்டால்
அடியும் உதையும் தாராதவன்[2]

இவர் பாடிய பாடல்களில் சில

  • ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி[3]
  • அன்பிற்கு அர்த்தமாய் அண்ணா நீ என்னைக்கும் நிகரே அண்ணா
  • டப்பாங்கூத்து பாட்டுத்தான் காதிலை கொஞ்சம் போட்டுப் பாரு
  • எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருணாகரன்
  • குக்கூ குக்கூ குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா
  • பாரதி போல மீசை வைச்ச அப்பாவே
  • சிட்டுக் குருவி மெட்டுப் போட்டு பாட்டுப் பாடுது
  • சிறகு விரிக்கும் பறவைக்கிங்கே சின்னச் சின்னக் கூடு
  • தர்மம் ஒரு நாள் ஒரு நாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்

நடித்த தெருவழி நாடகங்கள்

  • இரும்புத்திரை
  • ஒளி பிறந்தது
  • கூடுகலைந்த குருவிகள்
  • வீரம் விளையும் பூமி

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-28. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.
  2. https://www.eelamview.com/2015/02/15/singer-kuddikannan/
  3. http://pulikalinkuralradio.com/archives/album/kutti-kannan-songs

வெளி இணைப்புகள்