ஆன்மிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
G. R. Krishnamurthy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:19, 4 மார்ச்சு 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். ஆன்மிகத்தினைப் பின்பற்றுதல் பயனுள்ள ஒரு செயற்பாடு ஆகும். [1] இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும். ஆன்மிக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஓர் உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகவும், ஐம்புலன்கள் கடந்ததாகவும் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, உடல், ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் மனம்-உடல் இருமைத் தன்மையையும் உணர்த்துகிறது. இதனால், ஆன்மிகம் என்பது, பொருள் சார்ந்த உலகியல் விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவது ஆன்மிகம் ஆகும். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Snyder 2007.
  2. http://au.reachout.com/what-is-spirituality What is spirituality?
  3. http://isha.sadhguru.org/blog/yoga-meditation/demystifying-yoga/what-is-spirituality/ what-is-spirituality

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்மிகம்&oldid=3397816" இலிருந்து மீள்விக்கப்பட்டது