(Translated by https://www.hiragana.jp/)
அப்னர் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

அப்னர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்னர் கோட்டை

அப்னர் கோட்டை (Upnor Castle) இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தின் மெட்வே பகுதியில் முதலாம் எலிசபத்து இராணியின் கட்டளையால் கி.பி. 1559 இல் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். 1623 இல் இந்தக் கோட்டையில் பல்வேறு அளவுகளில், 23 வகையான துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்தன. 1667 டச்சுத் தாக்குதலை இந்தக் கோட்டையிலிருந்து சமாளிக்க முடியாமல் பல போர்க்கப்பல்கள் சேதமாகின. டச்சுக்காரர்கள் அரச சார்லசு என்ற கப்பலை சிறைப்பிடித்து ஒல்லாந்து நாட்டிற்கு எடுத்து சென்றனர். டச்சுத் தோல்வியை அடுத்து, கோட்டையைப் பலப்படுத்த அதே ஆண்டில் அரச உத்தரவு பிறப்பித்தது. டச்சு ஆதிக்கத்திற்குப் பிறகு 1668 இல், நூற்றுக்கணக்கான பீப்பாய்களில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கும் கிடங்காக இந்த கோட்டை மாற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Holden, Clive (12 May 2015). "Sheerness to Rochester". River Medway. Amberley Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1445637921. {{cite book}}: |access-date= requires |url= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. இங்கிலாந்து பரம்பரைச்சொத்துக்கள் தளம் - அப்னர் கோட்டை
  2. அதிகாரப்பூர்வ மெட்வே சுற்றுலாத்தளம் பரணிடப்பட்டது 2016-05-04 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்னர்_கோட்டை&oldid=3231591" இலிருந்து மீள்விக்கப்பட்டது