அலன் டொனால்ட்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அலன் டொனால்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 238) | ஏப்ரல் 18 1992 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | பிப்ரவரி 24 2002 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 2) | நவம்பர் 10 1991 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | பிப்ரவரி 27 2003 எ. கனடா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 4 2009 |
அலன் அந்தோனி டொனால்ட் (Allan Anthony Donald, பிறப்பு: அக்டோபர் 20 1966)[1], தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். தற்போது இவர் துடுப்பாட்டப் பயிற்சியாளராக உள்ளார். இவர் பெரும்பானமையான நேரங்களில் ஒயிட் லைட்னிங் எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார். இவர் 72 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 164 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 316 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 458 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2002 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1998 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 895 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் அதே ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் சக நாட்டவர் ஷான் பொலொக்கிற்கு அடுத்து 794 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தனது ஓய்விற்குப் பிறகு பல நாடுகளின் துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கவுண்டி மாகாண துடுப்பாட்ட அணியின் உதவிப் பயிர்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]ஏப்ரல் 18, 1992 இல் பார்படோசுவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] இதன் முதலாவது ஆட்டப்பகுதியில் 20 ஓவர்கள் வீசி 67 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 21 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை. பின் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 77 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து பிறயன் லாறா உட்பட 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2] இவர் ஓய்வு பெறும்போது 330 இலக்குகளைக் கைப்பற்றி இருந்தார். இவரின் சராசரி 22.25 ஆகும். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்திருந்தார்.
நவம்பர் 10,1991 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொல்கத்தா, ஈடன் கார்டனில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து ரவி சாஸ்திரி, நவ்ஜோத் சிங் சித்து, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரவின் ஆம்ரே ஆகிய 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.[3] இருந்தபோதிலும் இந்திய அணி 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதினை சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெற்றார்.[4] இவர் மொத்தம் 272 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். இவரின் சராசரி 21.78 ஆகும்.
இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளையும் ஷான் பொலொக் முறியடித்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Allan Donald", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
- ↑ "Only Test, South Africa tour of West Indies at Bridgetown, Apr 18-23 1992 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
- ↑ "1st ODI, South Africa tour of India at Kolkata, Nov 10 1991 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
- ↑ "1st ODI, South Africa tour of India at Kolkata, Nov 10 1991 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
வெளியிணைப்புகள்
[தொகு]கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அலன் டொனால்ட்