(Translated by https://www.hiragana.jp/)
ஐபீரிய சிவிங்கிப் பூனை - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

ஐபீரிய சிவிங்கிப் பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
ஐபீரிய சிவிங்கிப் பூனை
Iberian lynx
புதைப்படிவ காலம்:
தொடக்க பிலிசுடோசின்[1] - Recent 1–0 Ma
CITES Appendix I (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பூனைக் குடும்பம்
பேரினம்:
இனம்:
L. pardinus
இருசொற் பெயரீடு
Lynx pardinus
(தெமிங்கு, 1827)
ஐபீரிய சிவிங்கியின் பரவல், 2015
ஒரு ஐபீரிய லின்க்ஸ் பூனை, டோனனா தேசியப் பூங்கா

ஐபீரிய சிவிங்கிப் பூனை (Iberian lynx, உயிரியல் பெயர்: Lynx pardinus) என்பது நடுத்தர-அளவிலான காட்டுப் பூனை இனமான சிவிங்கிப் பூனை வகைகளில் உள்ள நான்கு சிற்றினங்களில் ஒன்றாகும். இது தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஐபீரிய மூவலந்தீவில் மட்டுமே காணப்படும் ஓர் அகணிய உயிரி ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாக இனங்காணப்பட்டுள்ளது.[3] 20-ஆம் நூற்றாண்டில், அதிக வேட்டையாடுதல், வாழ்விடங்களின் துண்டாடுதல், ஐரோப்பியக் குழிமுயல் (ஓரிக்டோலாகசு குனிகுலசு) என்னும் இதன் முக்கிய இரை இனத்தின் மைக்ஸோமாடோசிஸ் மற்றும் முயல் ரத்தக்கசிவு நோயினால் ஏற்பட்ட இனக்குறைப்பு காரணமாக ஐபீரிய சிவிங்கிப் பூனையின் எண்ணிக்கை குறைந்துள்ளது.[4][5][6]

ஏறத்தாழ ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, தொடக்க கால பிலிசுடோசினின் முடிவிலிருந்து இந்தப் பூனை இப்பகுதியில் இருந்ததாகத் தொல்லுயிர் எச்சங்கள் தெரிவிக்கின்றன.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐபீரிய சிவிங்கிப் பூனை அழிவின் விளிம்பில் இருந்தது. 2002ஆம் ஆண்டில் அந்தாலூசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு துணை இனத்தொகைகளில் 94 பூனைகள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. இதன் பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இதில் வாழ்விடத்தை மேம்படுத்துதல், முயல்களை மீட்டெடுத்தல், இடமாற்றம் செய்தல், மற்றும் ஐபீரிய சிவிங்கிப் பூனைகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல், கண்காணித்தல் போன்றவை அடங்கும். இதனால் 2012இல், இவற்றின் தொகை 326 ஆகவும்,[7] 2020 இல் 855 ஆகவும்,[8] 2021-இல் 1,111 ஆகவும்,[9] 2023-இல் 1,668 ஆகவும்,[10] 2024-இல் 2,021 ஆகவும் அதிகரித்து, இதனை மறுவகைப்படுத்தலுக்கு வழிவகுத்தது.[11] இது ஒரு ஒற்றை வகை இனமாகும். இது இசியோடோரென்சீசு-இலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.

மரபியல் ஆராய்ச்சி[தொகு]

ஐபீரியன் சிவிங்கிப் பூனையின் மரபணு வேறுபாடு, பிற பூனைக்க்குடும்ப மரபணுவினை ஒப்பிடும் போது முந்தியதாக உள்ளது. இதன் வாழிடத் துண்டாக்கம், இடையூறு மற்றும் தனிமைப்படுத்தலின் விளைவாக ஏற்பட்டதாகும்[12]டோனானா மற்றும் அண்டுஜாரில் உள்ள ஐபீரியன் சிவிங்கிப் பூனை நுண்கோள டி. என். ஏ. குறிப்பான்களில் மரபணு ரீதியாக வேறுபடுகின்றன. இந்த அலகு நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டதால், டோனானாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அதிக அளவு அகஇனப்பெருக்கத்தை வெளிப்படுத்தின.[12]

கலாச்சாரப் பதிவு[தொகு]

போர்த்துகீசிய தெருக் கலைஞர் இரண்டாம் போர்டலோ, அதிகப்படியான நுகர்வை முன்னிலைப்படுத்த குப்பைகளால் செய்யப்பட்ட மாதிரிகளை உருவாக்குபவர் ஆவார். இவரது விலங்குகளை உள்ளடக்கிய படைப்புகள் மனிதர்களால் ஏற்படும் கழிவுகளால் உயிரினங்களின் அழிவை எடுத்துக்காட்டுவதற்காக உருவாக்கப்பட்டவை.[13] இவரது பொதுவன படைப்புகளில் ஒன்று போர்ச்சுகலின் லிசுபனில் உள்ள பார்க் தாசு நாசாசில் உள்ள ஒரு பெரிய ஐபீரியன் சிவிங்கிப் பூனை ஆகும். இது 2019-இல் இளைஞர் நல அமைச்சர்களின் உலக மாநாட்டிற்காகவும், இளைஞர் மன்றம் லிசுபோவா+21 க்காகவும் உருவாக்கப்பட்டது.[14]

குப்பைகளால் லிஸ்பனில் நிறுவப்பட்ட ஐபீரிய சிவிங்கிப் பூனை

மேற்கோள்கள்[தொகு]

  1. Boscaini, A.; Alba, D.M.; Beltrán, J.F.; Moya-Sola, S.; Madurell-Malapeira, J. (2016). "Latest Early Pleistocene remains of Lynx pardinus (Carnivora, Felidae) from the Iberian Peninsula: taxonomy and evolutionary implications". Quaternary Science Reviews 143: 96–106. doi:10.1016/j.quascirev.2016.05.015. Bibcode: 2016QSRv..143...96B. 
  2. 2.0 2.1 Rodríguez, A.; Calzada, J. (2020). "Lynx pardinus". IUCN Red List of Threatened Species 2015: e.T12520A174111773. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T12520A174111773.en. https://www.iucnredlist.org/species/12520/174111773. பார்த்த நாள்: 16 January 2022. 
  3. 3.0 3.1 "Iberian lynx rebounding thanks to conservation action – IUCN Red List – Press release | IUCN". Archived from the original on 20 June 2024. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
  4. Simón, M.A. (2012). Ten years conserving the Iberian lynx. Seville: Consejería de Agricultura, Pesca y Medio Ambiente. Junta de Andalusía. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-92807-80-2. Archived from the original on 21 June 2024. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
  5. Rodríguez-Hidalgo, A.; Lloveras, L.; Moreno-García, M.; Saladié, P.; Canals, A.; Nadal, J. (2013). "Feeding behaviour and taphonomic characterization of non-ingested rabbit remains produced by the Iberian lynx (Lynx pardinus)". Journal of Archaeological Science 40 (7): 3031–3045. doi:10.1016/j.jas.2013.03.006. Bibcode: 2013JArSc..40.3031R. https://www.researchgate.net/publication/236208653. பார்த்த நாள்: 29 January 2019. 
  6. Fordham, D.A.; Akçakaya, H.R.; Brook, B.W.; Rodríguez, A.; Alves, P.C.; Civantos, E.; Trivino, M.; Watts, M.J. et al. (2013). "Adapted conservation measures are required to save the Iberian lynx in a changing climate". Nature Climate Change 3 (10): 899–903. doi:10.1038/nclimate1954. Bibcode: 2013NatCC...3..899F. http://digital.csic.es/bitstream/10261/84387/1/Fordham_Nat%20Clim%20Change_13.pdf. பார்த்த நாள்: 2 January 2017. 
  7. Lopez, G.; Lopez, M.; Fernandez, L.; Ruiz, G.; Arenas, R.; Del Rey, T.; Gil, J.M.; Garrote, G. et al. (2012). "Population development of the Iberian lynx since 2002". Cat News 57: 34. 
  8. Jones, S. (2020). "The lynx effect: Iberian cat claws its way back from brink of extinction". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 25 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201025104603/https://www.theguardian.com/environment/2020/oct/25/the-lynx-effect-iberian-cat-claws-its-way-back-from-brink-of-extinction. 
  9. Lusa (2021). "Pela primeira vez em 20 anos, há mais de 1000 linces-ibéricos". Público (Portugal) இம் மூலத்தில் இருந்து 28 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210528173947/https://www.publico.pt/2021/05/28/p3/noticia/primeira-20-anos-ha-1000-lincesibericos-1964416. 
  10. "La población de linces ibéricos alcanza su máximo histórico: 1.668 ejemplares". www.miteco.gob.es. Archived from the original on 7 June 2023. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
  11. Jones, Sam (20 June 2024). "Iberian lynx no longer endangered after numbers improve in Spain and Portugal". The Guardian இம் மூலத்தில் இருந்து 21 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240621145125/https://www.theguardian.com/environment/article/2024/jun/20/iberian-lynx-vulnerable-not-endangered-after-numbers-improve-in-spain-and-portugal-aoe. 
  12. 12.0 12.1 Casas-Marce, M.; Soriano, L.; López-Bao, J. V.; Godoy, J. A. (2013). "Genetics at the verge of extinction: insights from the Iberian lynx". Molecular Ecology 22 (22): 5503–5515. doi:10.1111/mec.12498. பப்மெட்:24128177. Bibcode: 2013MolEc..22.5503C. 
  13. "Bordalo II" (video (1 min.) + text). Street Art Bio. 5 April 2022. Archived from the original on 29 July 2023. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
  14. Ahmmed, Roman (19 July 2021). "A huge cat sculpture at Park of Nations in Lisbon, Portugal". Local Guides Connect. Archived from the original on 30 July 2023. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபீரிய_சிவிங்கிப்_பூனை&oldid=4021320" இலிருந்து மீள்விக்கப்பட்டது