(Translated by https://www.hiragana.jp/)
கீதா சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கீதா சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா சந்திரன்
Geeta Chandran
பிறப்புபுதுதில்லி, இந்தியா
அறியப்படுவதுநடனம் - பரதநாட்டியம்
விருதுகள்பத்மசிறீ

கீதா சந்திரன் (Geeta Chandran) இந்தியாவின்[1] புது தில்லியைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். கர்நாடக இசை, தொலைக்காட்சி, நாடகம், ஆடற்கலை மற்றும் நடனக் கல்வி போன்ற பல பல்வேறு கலைத்துறைகளில் பணியாற்றியுள்ளார். நாட்டிய-விரிக்சா என்ற நடனப்பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவருமாவார். நாட்டின் நான்காவது உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு 2007 ஆம் ஆண்டில், கலைத்துறையில் இவரது பங்களிப்புகளுக்காக வழங்கி கௌரவித்தது[2]

தொழில்

[தொகு]

பாரம்பரியக் கலைகளில் தனது எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக, நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், நாடக ஆளுமைகள், கல்வியாளர்கள், தத்துவவாதிகள், மொழியியலாளர்கள் மற்றும் ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து கீதா சந்திரன் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The flow of tradition" (in en-IN). The Hindu. 2015-12-24. http://www.thehindu.com/features/friday-review/dance/geeta-chandrans-performance-the-flow-of-tradition/article8025917.ece. 
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.

.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_சந்திரன்&oldid=3774549" இலிருந்து மீள்விக்கப்பட்டது