(Translated by https://www.hiragana.jp/)
கெடா சுல்தான் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கெடா சுல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெடா சுல்தானகம்
Sultanate of Kedah
Kesultanan Kedah
330–1136 (கெடா துவா)
1136–1941
1945–1946
1948–இன்று வரையில்
கொடி of kedaa
கொடி
சின்னம் of kedaa
சின்னம்
மலேசியாவில் கெடா
மலேசியாவில் கெடா
நிலைகெடா துவா
(330–1136)
சுயாட்சி சுல்தானகம்
(1136–1821)
இரத்தனகோசின் இராச்சியம் (1821–1909)
ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு
(1909–1941; 1945–1946)
தலைநகரம்அலோர் ஸ்டார்
பேசப்படும் மொழிகள்
சமயம்
சன்னி இசுலாம்
சுல்தான் 
• 1136–1179
முசபர் ஷா I (first)
• 2017–இன்று வரையில்
சாலேவுதீன்
ஆலோசகர் 
• 1909–1915; 1918–1919
ஜார்ஜ் மெக்சுவல்
வரலாற்று சகாப்தம்தொடக்க நவீன காலம்
• இசுலாமிற்கு மாற்றம்
1136; 888 ஆண்டுகளுக்கு முன்னர் (1136)
• பொற்காலம்
1735
நவம்பர் 1821
9 சூலை 1909
16 பிப்ரவரி 1942
• சிபுரி (சயாம்)
18 அக்டோபர் 1943
• சப்பான் சரணடைதல்
14 ஆகஸ்டு 1945
31 மார்ச் 1946
நாணயம்பூர்வீகத் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்
நீரிணை டாலர் (1939 வரையில்)
மலாயா டாலர் (1953 வரையில்)
முந்தையது
பின்னையது
கெடா வரலாறு
ஸ்ரீ விஜயம்
சிபுரி
மலாயா ஒன்றியம்
கெடா
இரத்தனகோசின் இராச்சியம்
தற்போதைய பகுதிகள்மலேசியா

கெடா சுல்தானகம் அல்லது கெடா சுல்தான் (மலாய் மொழி: Kesultanan Kedah; ஆங்கிலம்: Sultanate of Kedah ஜாவி: كسلطانن قدح) என்பது தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் அரசு ஆகும். முதலில் இது ஒரு சுதந்திர இராச்சியமாக இருந்தது, பின்னர் 1909-ஆம் ஆண்டில் பிரித்தானிய பாதுகாப்பு இராச்சியமாக (British Protectorate) மாறியது.

மலாயா ஒன்றியத்தில் (Malayan Union) சேர்க்கப்பட்ட பிறகு அதன் முடியாட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் பின்னர், மலாயா ஒன்றியத்தின் வாரிசான மலாயா கூட்டமைப்பில் (Federation of Malaya) இணைக்கப்பட்டு முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டது.

இந்த சுல்தானகத்தின் உருவாக்கம் மற்றும் அதன் உருவாக்கத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வரலாறு பற்றிய தகவல் கெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் (Kedah Annals) இருந்து வருகிறது.

பொது

[தொகு]

கெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் மேரோங் மகாவங்சா வரலாறு (ஆங்கிலம்: Kedah Annals; மலாய்: Hikayat Merong Mahawangsa ஜாவி: حكاية مروڠ مهاوڠسا) எனும் ஒரு காப்பியம் உள்ளது. இந்தக் காப்பியம் தான், கெடா வரலாற்றை மேற்கோள் காட்டும் வரலாற்றுப் பதிவாக அமைகின்றது.

அந்தக் காப்பியத்தில் மாறன் மகாவம்சன்; (மேரோங் மகாவங்சா) (Merong Mahawangsa) எனும் இந்து மன்னர், கெடா சுல்தானகத்தைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.[1]

கெடா இராச்சியம் (Kedah Kingdom) தோன்றிய காலத்தில் இருந்து, ஓர் ஆயிரம் ஆண்டு கால வரலாறு கெடா வரலாற்றுப் பதிவேடுகளில் பதியப்பட்டு உள்ளன. இந்தப் பதிவேடு 18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

கெடாவின் முதல் ராஜா

[தொகு]

ஒரு புராண காலத்து இராட்சச மிருகத்தின் தாக்குதலினால் கெடாவின் முதல் ராஜா கெடாவின் கரைகளுக்கு வந்ததாகக் கெடா வரலாற்றுப் பதிவேடுகள் விவரிக்கின்றன. மகா அலெக்சாண்டரின் சந்ததியினரால்தான் கெடா இராச்சியம் நிறுவப்பட்டது என்றும் கூறுகின்றன.

இருப்பினும், தாய்லாந்து வரலாற்று குறிப்புகள் வேறு மாதிரியாகச் சொல்கின்றன.

கெடா என்பது நாகோன் சி தம்மரத் (Nakhon Si Thammarat) போன்ற ஒரு தாய்லாந்து நாட்டு நகரம் என்றும்; கெடா சுல்தானகம் சயாமிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும்; பின்னர் முஸ்லீம் அரசுகளின் படையெடுப்பிற்குப் பிறகு அது ஒரு மலாய் மாநிலமாக மாறியது என்றும்; தாய்லாந்து வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது.[2]

நம்பத் தகாத தகவல்கள்

[தொகு]

கெடா வரலாற்றுப் பதிவேடுகள், கெடாவின் சுல்தான்களைப் பற்றி நம்பத் தகாத தகவல்களை வழங்குகின்றன. 1136-இல் கெடாவின் முதல் சுல்தான்; சுல்தான் முசபர் ஷா I (Sultan Mudzafar Shah I) என்று பதிவு செய்து உள்ளன.[3] இந்த ஆண்டு கணக்குகள் ஒவ்வொரு வரலாற்றுப் பதிவேட்டிலும் முரண்பாடுகளாக உள்ளன.

ஆனால் 1474-ஆம் ஆண்டில் தான், கெடா சுல்தானகம் இசுலாம் மதத்திற்கு மாறியதாக அச்சே வரலாற்றுப் பதிவேடுகள் கூறுகின்றன. ஏனெனில் அந்தப் கெடா வரலாற்றுப் பதிவு; திராங்கானு கல்வெட்டு (Terengganu Inscription Stone) காலத்திற்கும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தைப் பதிவு செய்துள்ளன. அந்தப் பதிவில் 1136-ஆம் ஆண்டு என்பது சாத்தியமே இல்லை.

பௌத்த சமயத்தைச் சார்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு கெடாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் பதிவு செய்து உள்ளன. அத்துடன் ஸ்ரீவிஜயப் பேரரசை சுல்தான் முசபர் ஷா I மதம் மாற்றினார் எனும் பதிவுகளும் முற்றாக முரண்படுகின்றன.[4]

15-ஆம் நூற்றாண்டு வரை கெடா இராச்சியம் ஓர் இந்து - பௌத்த இராச்சியமாக இருந்து இருக்கலாம். சான்றுகள் உள்ளன.[5]

கெடா மாநில ஆட்சியாளர்கள்

[தொகு]

மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா இராச்சியத்தை உருவாக்கியவர் என்று கெடா வரலாற்றுப் பதிவேட்டில் சொல்லப் படுகிறது. அந்த வகையில் கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தொடங்குகிறது.

கெடா இராச்சியம் மதம் மாற்றம் அடைந்த பின்னர் கெடா சுல்தானகம் என பெயர் பெற்றது. 1920-களில் அல்-தாரிக் சலாசிலா நெகிரி கெடா தாருல் அமான் (Al-Tarikh Genealogy) அல்லது கெடா மரபியல் (Kedah Genealogy) எனும் ஓர் அரச வம்சாவளி தொகுக்கப்பட்டது.[6]

மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த இந்து சமய அரசர்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீ பாதுகா மகாராஜா (Sri Paduka Maharaja) என்ற இந்துப் பட்டத்தைப் பயன்படுத்தினர்.

இந்து காலகட்டம்

[தொகு]
  1. தர்பார் ராஜா I - Durbar Raja I (கி.பி. 0330 - 0390)
  2. ராஜா புத்ரா - Raja Putra (கி.பி. 0390 - 0440)
  3. மகா தேவா I - Maha Dewa I (கி.பி. 0440 - 0465)
  4. கர்ண ராஜா - Karna Diraja (கி.பி. 0465 - 0512)
  5. கர்மா - Karma (கி.பி. 0512 - 0580)
  6. மகா தேவா II - Maha Dewa II (கி.பி. 0580 - 0620)
  7. மகா தேவா III- Maha Dewa III (கி.பி. 0620 - 0660)
  8. ராஜா புத்ரா II - Raja Putra II (கி.பி. 0660 - 0712)
  9. தர்ம ராஜா - Darma Raja (கி.பி. 0712 - 0788)
  10. மகா ஜீவா - Maha Jiwa (கி.பி. 0788 - 0832)
  11. கர்மா II - Karma II (கி.பி. 0832 - 0880)
  12. தர்ம ராஜா II - Darma Raja II (கி.பி. 0880 - 0956)
  13. தர்பார் ராஜா II - Durbar Raja II (கி.பி. 0956 - 1136)

இசுலாமிய காலகட்டம்

[தொகு]

இதன் பின்னர் கெடா சுல்தானகம் உருவானது. அந்தச் சுல்தானகத்தில் வரும் சுல்தான்களின் பெயர்களின் பட்டியல்:[6]

  1. முசபர் ஷா I - Mudzaffar Shah I (கி.பி. 1136–1179)
  2. முவட்சாம் ஷா - Mu'adzam Shah (கி.பி. 1179–1201
  3. முகமட் ஷா - Muhammad Shah (கி.பி. 1201–1236)
  4. முசபர் ஷா II - Mudzaffar Shah II (கி.பி. 1236–1280)
  5. முகமட் ஷா II - Mahmud Shah I (கி.பி. 1280– 1321)
  6. இப்ராகிம் ஷா - Ibrahim Shah (கி.பி. 1321– 1373)
  7. சுலைமான் ஷா I - Sulaiman Shah I (கி.பி. 1373–1422)
  8. அதுல்லா முகமட் ஷா I - Ataullah Muhammad Shah I (கி.பி. 1422–1472)
  9. முகமட் ஜீவா ஜைனல் ஷா I - Muhammad Jiwa Shah I (கி.பி. 1472–1506)
  10. முகமட் ஷா II - Mahmud Shah II (கி.பி. 1506–1546)
  11. முசபர் ஷா II - Mudzaffar Shah III (கி.பி. 1546–1602)
  12. சுலைமான் ஷா II - Sulaiman Shah II (கி.பி. 1602–1625)
  13. ரிஜாலிடின் ஷா - Rijaluddin Muhammad Shah (கி.பி. 1625–1651)
  14. முகயிடின் மன்சூர் ஷா - Muhyiddin Mansur Shah (கி.பி. 1651–1661)
  15. சியாடின் முகாராம் ஷா I - Dziaddin Mukarram Shah I (கி.பி. 1661–1687)
  16. அதுல்லா முகமட் ஷா II - Ataullah Muhammad Shah II (கி.பி. 1687–1698)
  17. அப்துல்லா முவட்ஷாம் ஷா - Abdullah Mu'adzam Shah (கி.பி. 1698–1706)
  18. அகம்ட் தாஜுடின் ஹாலிம் ஷா I - Ahmad Tajuddin Halim Shah I (கி.பி. 1706–1709)
  19. முகமட் ஜீவா ஜைனல் ஷா II - Muhammad Jiwa Zainal Shah II (கி.பி. 1710–1778)
  20. அப்துல்லா முகாராம் ஷா - Abdullah Mukarram Shah (கி.பி. 1778–1797)
  21. சியாடின் முகாராம் ஷா II - Dziaddin Mukarram Shah II (கி.பி. 1797–1803)
  22. அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா II - Ahmad Tajuddin Halim Shah II (கி.பி. 1803–1843)
  23. சைனல் ரசீட் அல்முவட்ஷாம் ஷா I - Zainal Rashid Al-Mu'adzam Shah I (கி.பி. 1843–1854)
  24. அகம்ட் தாஜுடின் முகாராம் ஷா - Ahmad Tajuddin Mukarram Shah (கி.பி. 1854–1879)
  25. சைனல் ரசீட் முவட்சாம் ஷா II - Zainal Rashid Mu'adzam Shah II (கி.பி. 1879–1881)
  26. அப்துல் ஆமீட் அலிம் சா - Abdul Hamid Halim Shah (கி.பி. 1881–1943)
  27. பாட்லிசா - Badlishah (கி.பி. 1943–1958)
  28. அப்துல் ஆலிம் முவட்சாம் சா - Abdul Halim Mu'adzam Shah (கி.பி. 1958 - 2017)
  29. சுல்தான் சாலேவுடின் பாட்லி சா - Al Aminul Karim Sultan Sallehuddin ibni Almarhum Sultan Badlishah (2017 தொடங்கி இன்று வரையில்)
  • (Source for the list of sultans is the Muzium Negeri Kedah, Alor Setar, Malaysia. "The Sultans of Kedah".)

சயாமியர் ஆட்சி

[தொகு]

1821-ஆம் ஆண்டில் இருந்து 1909-ஆம் ஆண்டு வரை 87 ஆண்டுகளுக்கு சயாமியர்கள் கெடாவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். சயாமியர்கள் கெடாவின் மீது படை எடுத்து வந்த போது அகமட் தாஜுடின் ஆலிம் ஷா என்பவர் கெடாவின் அரசராக இருந்தார். இவர் பினாங்கிற்குத் தப்பிச் சென்றார்.

சயாமியர்கள் கெடாவை நான்கு பாகங்களாகப் பிரித்தார்கள்.

  1. கெடா
  2. செத்தூல்
  3. பெர்லிஸ்
  4. குபாங் பாசு

1821-ஆம் ஆண்டில் கெடாவின் மக்கள் தொகை 180,000. இந்த எண்ணிக்கை ஆறே ஆண்டுகளில் 6000-ஆக குறைந்து போனது. பினாங்கிற்குச் சென்ற கெடா சுல்தான் அகமட் தாஜுடின் ஆலிம் ஷா 1831-ஆம் ஆண்டில் மலாக்காவில் தஞ்சம் அடைந்தார்.

மலாக்காவில் கெடா சுல்தான்

[தொகு]

அப்போது மலாக்கா மாநிலம் பிரித்தானியர்களின் வசம் இருந்தது. மலாக்காவின் பொறுப்புகள் சர் எட்வர்ட் ஜான் காம்பியர் (Sir Edward John Gambier) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

1836-ஆம் ஆண்டு சுல்தான் அகமட் தாஜுடின் ஆலிம் ஷா இந்தோனேசியாவின் கிழக்கு தீமோருக்குச் செல்வதாகச் சொல்லி பிரித்தானியர்களிடம் அனுமதி கேட்டார். அனுமதி வழங்கப் பட்டது.

கெடா அரியணை

[தொகு]

ஆனால் அவர் கிழக்கு தீமோருக்குப் போகவில்லை. மாறாக பேராக், புருவாஸ் நகருக்குச் சென்று கெடாவை மீட்டு எடுக்க படை திரட்டினார். இதை அறிந்த பிரித்தானியர்கள் அவரைப் பினாங்கிற்கு கொண்டு போய் அமைதி படுத்தினார்கள். ஏழு ஆண்டுகள் அவர் பினாங்கில் இருந்தார்.

1843-ஆம் ஆண்டு சயாமியர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் படி சுல்தான் அகமட் தாஜுடின் ஆலிம் ஷாவிற்கு கெடா அரியணை மீண்டும் வழங்கப் பட்டது.

வரலாறு

[தொகு]

1136-ஆம் ஆண்டில் கெடா, புக்கிட் மெரியாம் (Bukit Meriam) மலைப் பகுதியில் இருந்த மகா ராஜா தர்பார் ராஜா II-வின் (Durbar Raja II) அரண்மனைக்கு யெமன் நாட்டைச் சேர்ந்த சேக் அப்துல்லா பின் ஜாபர் குவாமிரி (Sheikh Abdullah bin Ja'afar Quamiri) என்ற முசுலீம் அறிஞர் வருகை புரிந்தார்.

முசுலீம் அறிஞரின் வருகைக்குப் பின்னர் மகா ராஜா தர்பார் ராஜா II, இசுலாத்திற்கு மதமாற்றம் அடைந்தார். அவர் முசபர் ஷா (Mudzaffar Shah) எனும் பெயரை ஏற்றுக் கொண்டு கெடாவின் சுல்தானகத்தை நிறுவினார். அதன் பின்னர் கெடாவில் சுல்தான் எனும் பட்டப் பெயர் பயன்படுத்தப்பட்டது.[3]

பிரித்தானிய கெடா

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society 17 (2): 31–35. 
  2. Rajanubhab, Damrong. "The royal chronicle in Rama II of Rattanakosin era". Vajirayana Digital Library. https://vajirayana.org/%E0%B8%9E%E0%B8%A3%E0%B8%B0%E0%B8%A3%E0%B8%B2%E0%B8%8A%E0%B8%9E%E0%B8%87%E0%B8%A9%E0%B8%B2%E0%B8%A7%E0%B8%94%E0%B8%B2%E0%B8%A3-%E0%B8%81%E0%B8%A3%E0%B8%B8%E0%B8%87%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%95%E0%B8%99%E0%B9%82%E0%B8%81%E0%B8%AA%E0%B8%B4%E0%B8%99%E0%B8%97%E0%B8%A3-%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%8A%E0%B8%81%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%97%E0%B8%B5%E0%B9%88-%E0%B9%92/%E0%B9%96%E0%B9%98-%E0%B9%80%E0%B8%A3%E0%B8%B7%E0%B9%88%E0%B8%AD%E0%B8%87%E0%B8%95%E0%B8%B5%E0%B9%80%E0%B8%A1%E0%B8%B7%E0%B8%AD%E0%B8%87%E0%B9%84%E0%B8%97%E0%B8%A3%E0%B8%9A%E0%B8%B8%E0%B8%A3%E0%B8%B5. 
  3. 3.0 3.1 "Kedah: Intro and Background". Go2Travelmalaysia.com. Capslock Sdn Bhd. Archived from the original on 5 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011.
  4. "The Development of Kedah's Early History Based on Archeological Finds". MyKedah. Archived from the original on 2015-01-09. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
  5. Dokras, Dr Uday. "The spread of Hindu Culture and Religion by Trade routes to far East (Not including Cambodia, Indonesia or Thailand" (in en). Indo Nordic Author's Collective. https://www.academia.edu/44155611/The_spread_of_Hindu_Culture_and_Religion_by_Trade_routes_to_far_East_Not_including_Cambodia_Indonesia_or_Thailand. 
  6. 6.0 6.1 Jelani Harun. "Al-Tarikh Genealogy of the State of Kedah Darul Aman" (PDF). Archived from the original (PDF) on 2021-09-30. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடா_சுல்தான்&oldid=4087444" இலிருந்து மீள்விக்கப்பட்டது