கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேங்
கேங்கில் இணைக்கப்பட்ட ஒரு மனிதன், சாங்காய், ஜான் தாம்சன் எடுத்த ஒரு புகைப்படம் அண். 1870. இதில் பொதுவாக பெயர், விலாசம், மற்றும் தண்டனையின் விவரம் ஆகியவை எழுதப்பட்டிருக்கும். பிணைக்கப்பட்டவர் உணவுக்காக வழியில் செல்வோரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
கேங் என்பது ஒரு கருவி ஆகும். இது பொது இடத்தில் அவமானப்படுத்தவும், உடல் ரீதியான தண்டனைக்கும் இருபதாம் நூற்றாண்டு வரை கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், சீனாவில்[1][2] பயன்படுத்தப்பட்டது. இது சிலநேரங்களில் சித்திரவதைக்காகவும், சித்திரவதையின்போதும் பயன்படுத்தப்பட்டது. இது மனிதன் நடமாடுவதைத் தடைசெய்தது. இதனால் இதை அணிந்த மக்கள் பொதுவாக பட்டினியால் இறந்தனர். ஏனெனில் அவர்களால் நடந்து எதையும் எடுக்க முடியாது.
"கேங்" என்பது பிரெஞ்சு வார்த்தை ஆகும். இது போர்த்துகீசிய வார்த்தையான "கன்கா"வில் இருந்து தோன்றியது. இதன் பொருள் நுகத்தடி ஆகும். இக்கருவியும் அதே விளைவுக்குப் பயன்படுத்தப்பட்டது. இரு கைகளும் நுகத்தடியின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டன. இதே கருவி ஐரோப்பாவிலும் பில்லோரி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. ஒரே வேறுபாடு கேங்கில் பலகையானது தரையுடன் இணைக்கப்பட்டிருக்காது, கைதி பலகையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்.[1]