கோர்தோபா, அர்கெந்தீனா
கோர்தோபா | |
---|---|
நகரம் | |
சியுடாடு டெ கோரதோபா | |
ஆள்கூறுகள்: 31°25′S 64°11′W / 31.417°S 64.183°W | |
நாடு | அர்கெந்தீனா |
மாகாணம் | கோர்தோபா |
மாவட்டம் (டிபார்ட்மென்ட்) | தலைநகர மாவட்டம் |
நிறுவப்பட்டது | 1573 |
பெயர்ச்சூட்டு | கோர்தோபா, எசுப்பானியா |
அரசு | |
• நகரத்தந்தை | ரேமன் யாவியர் மெஸ்த்ரே (UCR) |
பரப்பளவு | |
• நிலம் | 576 km2 (222 sq mi) |
ஏற்றம் | 352 முதல் 544வரை m (1,154.86 முதல் 1,784.78 வரை ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• அடர்த்தி | 2,273.5/km2 (5,888.46/sq mi) |
• நகர்ப்புறம் | 13,17,298 |
• பெருநகர் | 15,28,000 (மதிப்பீடு) |
[1] | |
நேர வலயம் | ஒசநே−3 (அர்கெந்தீனா நேரம்) |
கோர்தோபா (Córdoba, எசுப்பானிய ஒலிப்பு: [ˈkorðo
இதனை 1573ஆம் ஆண்டு சூலை 6ஆம் நாள் ஒரோனிமோ லூயி டெ கபேரா நிறுவினார்; அவர் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபாவை ஒட்டி இதற்கு அதே பெயரை இட்டார். அர்கெந்தீனா என இன்று அறியப்படும் பகுதியில் (அக்காலகட்டத்தில் இப்பகுதி சான்டியேகோ டெல் எஸ்டெரோ என அழைக்கப்பட்டது) அமைந்த முதல் எசுப்பானிய குடியேற்றத் தலைநகரங்களில் ஒன்றாக இது இருந்தது. இங்குள்ள கோர்தோபா தேசிய பல்கலைக்கழகமே நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்; எசுப்பானிய அமெரிக்காவின் ஏழாவதாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகமுமாகும். இதனை இயேசு சபையினர் 1613இல் நிறுவினர். இப்பல்கலைகழக இருப்பால் கோர்தோபா லா டாக்டா (அண்மித்த தமிழாக்கம், "அறிவார்ந்த ஒன்று") என அழைக்கப்பட்டது.
கோர்தோபாவில் பல எசுப்பானிய குடியேற்ற ஆட்சிக்கால வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை கட்டிடங்களைக் காணலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இயேசு சபை வளாகம் (எசுப்பானியம்: மன்சானா எசூட்டிகா), 2000 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[2] இந்த வளாகத்திலுள்ள கட்டிடங்கள் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவற்றில் மொன்செராட் தேசியக் கல்லூரி, குடியேற்ற பல்கலைக்கழக வளாகம் ஆகியவையும் அடங்கும். இந்த பல்கலைக்கழக வளாகம் தற்போது கோர்தோபா தேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக உள்ளது. கோர்தோபா பல்கலைக்கழகம் 20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமாக (முதலாவது புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகம்) விளங்குகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "INDEC: estimaciones de población" (PDF). Archived from the original (PDF) on 9 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
- ↑ UNESCO World Heritage Centre (2000-11-30). "UNESCO". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.