(Translated by https://www.hiragana.jp/)
சிர்க்கோனைல் அசிட்டேட்டு - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்க்கோனைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
5153-24-2 Y
20645-04-9 (κかっぱO,κかっぱO') Y
2077962-98-0 (Zr6O4(OH)4(O2CCH3)12) Y
UNII L1889K3G5J Y
பண்புகள்
C24H40O32Zr6
வாய்ப்பாட்டு எடை 1,387.90 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சிர்க்கோனைல் அசிட்டேட்டு (Zirconyl acetate) C24H40O32Zr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது சிர்கோனைல் குளோரைடை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக சிர்க்கோனைல் அசிட்டேட்டு காணப்படுகிறது. உலோக-கரிம கட்டமைப்பு வடிவங்களுக்கு முன்னோடியாக இந்த சேர்மம் கவனத்தை ஈர்த்துள்ளது. விரிவாக்கப்பட்ட எக்சுகதிர் உறிஞ்சுதல் நுண்ணிய அமைப்பு, 8.5 நீரேற்றின் கட்டமைப்பை உறுதிப்படுத்துகிறது. கட்டமைப்பின் உள்ளகம் ஆக்சைடு முகமைய்ய Zr6 எண்கோணத்துடனும் ஐதராக்சைடு ஈந்தணைவிகளுடனும் காணப்படும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hennig, Christoph; Weiss, Stephan; Kraus, Werner; Kretzschmar, Jerome; Scheinost, Andreas C. (2017). "Solution Species and Crystal Structure of Zr(IV) Acetate". Inorganic Chemistry 56 (5): 2473–2480. doi:10.1021/acs.inorgchem.6b01624. பப்மெட்:28199091.