(Translated by https://www.hiragana.jp/)
திண்டுக்கல் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

திண்டுக்கல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல்
மாவட்டம்

பூம்பாறை, கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் திண்டுக்கல்
பகுதி பாண்டிய நாடு
ஆட்சியர்

காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. ஸ்ரீநிவாசன், இ.கா.ப.
மாநகராட்சி 1
நகராட்சிகள் 3
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 10
பேரூராட்சிகள் 23
ஊராட்சி ஒன்றியங்கள் 14
ஊராட்சிகள் 306
வருவாய் கிராமங்கள் 361
சட்டமன்றத் தொகுதிகள் 7
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 6266.64 ச.கி.மீ.
மக்கள் தொகை
21,59,775 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
624 xxx
தொலைபேசிக் குறியீடு
0451
வாகனப் பதிவு
TN-57, TN-94
பாலின விகிதம்
998 /
கல்வியறிவு
76.26%
இணையதளம் dindigul

திண்டுக்கல் மாவட்டம் (Dindigul district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திண்டுக்கல் ஆகும். இம்மாவட்டம் பூட்டு மற்று தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது. இந்த மாவட்டம் 6,266.64 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், திண்டுக்கல், கொடைக்கானல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன. 1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பலகாலம், மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும். திண்டுக்கல் தொன்று தொட்டு சேரர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில் தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால், இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை, குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[சான்று தேவை]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 10 வருவாய் வட்டங்களாகவும்[1] மற்றும் 361 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

வருவாய் வட்டங்கள்

[தொகு]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

[தொகு]

உள்ளாட்சி அமைப்புகள்

[தொகு]

இம்மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி[3] மற்றும் பழனி [4], ஒட்டன்சத்திரம்[5] & கொடைக்கானல்[6] என 3 நகராட்சிகளும் மற்றும் 23 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.[7]

  1. திண்டுக்கல்
  1. பழனி
  2. கோடைக்கானல்
  3. ஒட்டன்சத்திரம்

அகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயக்குடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு  · வேடசந்தூர் ·

ஊராட்சி அமைப்புகள்

[தொகு]

இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[8] கொண்டது. அவைகள்;

  1. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
  2. நத்தம் ஊராட்சி ஒன்றியம்
  3. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
  4. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்
  5. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
  6. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
  7. பழனி ஊராட்சி ஒன்றியம்
  8. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்
  9. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
  10. சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம்
  11. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
  12. தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
  13. வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
  14. வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்

மக்கள் வகைப்பாடு

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19017,14,098—    
19117,80,440+0.89%
19218,13,581+0.42%
19318,59,809+0.55%
19419,74,794+1.26%
195110,83,964+1.07%
196111,78,363+0.84%
197113,98,023+1.72%
198115,64,448+1.13%
199117,60,601+1.19%
200119,23,014+0.89%
201121,59,775+1.17%
சான்று:[9]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 21,59,775 மக்கள் வசிக்கின்றார்கள்.[10] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 76.26% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84.23%, பெண்களின் கல்வியறிவு 68.33% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10.03% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[11]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]
  1. திண்டுக்கல்
  2. பழநி
  3. ஒட்டன்சத்திரம்
  4. ஆத்தூர்
  5. நிலக்கோட்டை
  6. நத்தம்
  7. வேடசந்தூர்

எல்லைகள்

[தொகு]

வடக்கில் திருப்பூர், கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை, தென்மேற்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

[தொகு]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒட்டன்சத்திரம் ஆகும். தமிழ்நாட்டிலேயே கோயம்பேடுக்கு, அடுத்ததாக கருதப்படும் மிக பெரிய காய்கறி சந்தை இங்கு அமைந்துள்ளது.[சான்று தேவை] இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுமேயாகும். இந்த சந்தை பகுதியில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

ஆன்மிக & சுற்றுலாத் தலங்கள்

[தொகு]
பழனி மலை

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_மாவட்டம்&oldid=4043161" இலிருந்து மீள்விக்கப்பட்டது