(Translated by https://www.hiragana.jp/)
பக்கிரிசாமி சந்திரசேகரன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கிரிசாமி சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்கிரிசாமி சந்திரசேகரன்
பிறப்பு(1934-04-15)15 ஏப்ரல் 1934
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, நாகப்பட்டினம்
இறப்பு11 சூலை 2017(2017-07-11) (அகவை 83)
பணிதடயவியல் நிபுணர்
அறியப்படுவதுராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் புலனாய்வு செய்தவர்
விருதுகள்பத்ம பூசண் (2000)

பக்கிரிசாமி சந்திரசேகரன் (15 எப்பிரல் 1934) இந்தியாவைச் சேர்ந்த தடயவியல் துறை நிபுணர் ஆவார் [1] இராசிவ் காந்தி கொல்லப் பட்டபோது பெல்ட் பாம் கொண்டு அவர் கொல்லபட்டார் என்பதைக் கண்டறிந்து அறிவித்தார்.[2]

வாழ்க்கைக்குறிப்பு

[தொகு]

தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் பிறந்த சந்திரசேகரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் மற்றும் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழ் நாட்டில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறையைப் பிரித்து தனித் துறையாக ஆனபிறகு அதன் இயக்குநராக அமர்த்தப்பட்டார். 1965 முதல் ஆறு ஆண்டுகாலம் உதவி இயக்குநராகவும், அதன்பிறகு 22 ஆண்டு காலம் தடைய அறிவியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். பன்னாட்டுத் தடயவியல் நிறுவனத் தலைவராக இருந்தார். தடயவியல் துறை தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார். இவர் எழுதிய  'உலகின் முதல் மனித வெடிகுண்டு' என்னும் நூல் பல நாடுகளில் காவல் துறையில் பாடப் புத்தகங்களாக உள்ளது.[3] மேலும் இவர் கல்கி இதழில் தடய அறிவியல் துறையில் தன் அனுபவரங்களை கிரிமினல்கள் ஜாக்கிரதை என்ற பெயரில் 2000 ஆண்டு தொடராக எழுதினார். இது பின்னர் நூலாகவும் வெளிவந்தது.

இவர் எம். ஜி. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு, பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு, எம். வி. சிதம்பரம் கப்பல் தீவிபத்து உள்ளிட்ட பல வழக்குகளில் தடயவியல் ஆய்வு செய்து உண்மைகளை வெளிக்கொண்டுவந்தார்.

ஜெய்ப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். 2000 ஆம் ஆண்டில் இந்திய நடுவணரசு இவருக்குப் பத்மபூசண் விருது வழங்கி கௌரவித்தது.

சந்திர சேகரன் 11 சூலை 2017 அன்று உடல்நலக்குறைவால் இறந்தார்.[4]

மேற்கோள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Ravi Visvesvaraya Prasad (2016). "Indira Gandhi I knew". The Herald of India. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.