பஜனைகள்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
பஜனை என்பது பகிர்வு[1] எனப் பொருள்படும். ஒரு பிராந்திய மொழியில்,[1] சமய கருத்துகள் அல்லது ஆன்மீக சிந்தனையுடன் பாடும் பாடல்களை இச்சொல் குறிக்கிறது. பஜனை என்பது இசை[2] மற்றும் கலைகளின் ஒரு வகையாகும்.இதனைப் பாடுவதற்கு எவ்விதமான விதிமுறைகளும் இல்லை. இந்து சமயத்தில் குறிப்பாக வைணவத்தில் பக்தியை வளர்ப்பதற்காகப் பாடும் இசையாகும்.[1]
புனித நூல்கள், புகழ்பெற்ற இதிகாசங்கள், மகான்களின் போதனைகள், கடவுள் ஆகியவை பஜனையின் பொதுவான அம்சங்களாகும்.[2] இது பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடகர்கள், இசையுடனும், சில நேரங்களில் நடனத்துடனும்[3] ஆலயங்களிலோ, ஒரு மரத்தின் கீழோ, ஆற்றங்கரையிலோ அல்லது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலோ பாடப்படுவதாகும். [2][3]
தென்னிந்திய பக்தி முன்னோடிகளோடு தொடங்கி, பலவிதமான "பஜனைகள்" பக்தி இயக்கத்தில் உள்ள மகான்களால் பாடப்பட்டன. ஆனால் பக்தர்கள் பரவலாக அநாமதேயமாகவும் இசை மற்றும் நாட்டியக் கலை வழியாகவும் பங்களித்தனர். நிர்குனி, கோரகனதி, வல்லபபந்தி, அஷ்டாசாப், மதுர-பக்தி ஆகியவை பஜனைகளின் வகைப்பாடாகும். 'சம்ப்ரதாய பஜனை' முறையை தென்னிந்தியர்கள் வழக்கமாக செய்கிறார்கள்.[4]
பெயற்காரணம்
[தொகு]சமஸ்கிருத வார்த்தையான "பஜன்" அல்லது "பஜனா" என்பது "பஜ்" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது "பஜன் என்பது பிரிக்க, பங்கு அல்லது பங்கேற்க என்னும் பொருள்படும்.[5][6][7] பஜனை என்கிற வார்த்தை "ஆன்மீக, மத கோட்பாடு ,ஒன்றுகூடுவது, இணைத்தல், பக்தி, அன்பு, கடவுளிடம் நம்பிக்கை என்பதையும் குறிக்கிறது.[8]
இந்து சமய பஜனை
[தொகு]இந்து சமயத்தில் "பஜனை" என்பது பிராந்திய மொழியில் எவ்வித விதிமுறைகளும் இன்றி இசையுடன் பாடப்படும் தெய்வீக பாடல்களாகும்.[1][2] இது இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பாடப்படுகின்றது. குறிப்பாக வைணவ சமூகத்தில் விஷ்ணுவின் அவதாரங்களான ராமர், கிருஷ்ணர், விட்டல் மற்றும் நாராயணன் மீது அதிகமான பாடல்கள் உள்ளன.[1][9] தென்னிந்தியாவில் 'தக்ஷிண பாரத சம்பிராதய பஜனை' முறையை பின்பற்றுகின்றனர். இது பாடல்கள், கீர்த்தனைகள் மற்றும் நாமாவளிகள் அடங்கியதாகும். இப்பாடல்கள் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களால் பல இந்திய மொழிகளில் பல நாடுகளிலும் இசைக்கப்படுகின்றன. [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Denise Cush; Catherine Robinson; Michael York (2012). Encyclopedia of Hinduism. Routledge. pp. 87–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-18979-2.
- ↑ 3.0 3.1 Arnold P. Kaminsky; Roger D. Long (2011). India Today: An Encyclopedia of Life in the Republic. ABC-CLIO. pp. 484–485. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-37463-0.
- ↑ Amaresh Datta (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo. Sahitya Akademi. pp. 430–431. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
- ↑ Cutler, Norman (1987). Songs of Experience. Indiana University Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-35334-4.
- ↑ Pechilis Prentiss, Karen (1999). The Embodiment of Bhakti. US: Oxford University Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512813-0.
- ↑ Werner, Karel (1993). Love Divine: studies in bhakti and devotional mysticism. Routledge. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-0235-0.
- ↑ Monier Monier-Williams (1872). A Sanskrit-English Dictionary. Oxford University Press. p. 695.
- ↑ 9.0 9.1 Guy Beck (1998). Bruno Nettl; et al. (eds.). The Garland Encyclopedia of World Music: South Asia, the Indian subcontinent. Routledge. pp. 251–254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-4946-1.
{{cite book}}
: Explicit use of et al. in:|editor=
(help)