(Translated by https://www.hiragana.jp/)
பலகேசீர் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

பலகேசீர் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலகேசீர் மாகாணம்
Balıkesir ili
துருக்கியின் மாகாணம்
Location of Balıkesir Province in Turkey
Location of Balıkesir Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்மேற்கு மர்மரா
SubregionBalıkesir
அரசு
 • தேர்தலுக்குரிய மாவட்டம்Balıkesir
பரப்பளவு
 • மொத்தம்12,496 km2 (4,825 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்12,26,575
 • அடர்த்தி98/km2 (250/sq mi)
இடக் குறியீடு00266*******
வாகனப் பதிவு10
பலேகேசிர் மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆம் நூற்றாண்டு காகசியன் கிளிம்.
அய்வாலக் தீவுகள் இயற்கை பூங்கா

பலகேசீர் மாகாணம் (Balıkesir Province, துருக்கியம்: Balıkesir ili ) என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது மர்மரா கடல் மற்றும் ஏஜியன் கடல் ஆகிய இரண்டு கடற்கரையோரப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் அருகிலுள்ள மாகாணங்களாக மேற்கில் அனக்கலே, தென்மேற்கில் இஸ்மிர், தெற்கே மனிசா, தென்கிழக்கில் கட்டாஹ்யா மற்றும் கிழக்கில் புர்சா ஆகியவை உள்ளன. மாகாண தலைநகரமாக பாலகேசீர் உள்ளது. இந்த மாகாணத்தின் பிகாடிஸ் எட்ரெமிட், கெப்சுட், அவ்ரிண்டி, சவாஸ்டெப் மற்றும் சாண்டர்கே மாவட்டங்களின் தெற்குப் பகுதிகள் மற்றும் ஏஜியன் பிராந்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ள அய்வாலக், புர்ஹானியே, துர்சுன்பே, கோமே மற்றும் ஹவ்ரான் ஆகிய பகுதிகளைத் தவிர மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் மர்மாரா பிராந்தியத்துக்கு உட்பட்டுள்ளது.

காஸ் டாஸ் (ஒலிப்பு [kaz daːɯ]), மவுண்ட் ஐடா என்றும் அழைக்கப்படும் மலைப் பகுதியானது, இந்த மாகாணத்தில் அமைந்துள்ளது.

பால்கேசிர் மாகாணமானது இங்கு உள்ள ஆலிவ், வெந்நீரூற்று மற்றும் சுத்தமான கடற்கரைகளுக்கு புகழ் பெற்றது. இதனால் இது ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக திகழ்கிறது. மாகாணத்தில் திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன, மாகாணத்தில் வெண்களிமண் மற்றும் வெண்காரம் ஆகிய கனிமங்கள் ஏராளமாக உள்ளன. காஸ் மலைகளில் சயனைடைப் பயன்படுத்தி தங்கச் சுரங்கத்தை விரிவுபடுத்துவதால் இந்த மலைப்பகுதியானது அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகிறது. இது கிராம மக்களின் வாழ்க்கை, விவசாய பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

காணக்கூடிய தளங்கள்

[தொகு]

இ்ந்த மாகாணமானது பல இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக பால்கேசிர் குஸ் சென்னெட்டி (பறவைகள் சரணாலயம்) தேசிய பூங்கா, எர்டெக், பந்தர்ம, மற்றும் எட்ரெமிட் விரிகுடாக்கள்; அய்வாலக்கின் கடற்கரைகள்; ஷெய்டன் சோஃப்ராஸ், மர்மாரா தீவுகள், அலிபே (குண்டா) தீவு; எர்டெக் மற்றும் கோனென் திறந்தவெளி அருங்காட்சியகங்கள்; பாமுகு-பெங்கி, பால்யா டாஸ், ஹிசார், ஹிசர்கி (அசார்கி), கராசாக் (யுயூஸ்), கெபெக்லர் வெந்நீர் ஊற்றுகள், டட்லூகா கிராம கனிம நீரூற்றுகள் மற்றும் ஜெய்டின்லி அடா வெந்நீரூற்றுகள் மற்றும் கனிம நீரூற்றுகள் போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்க்கூடிய பகுதிகளாகும் .

பலகேசீர் மகாணத்தின் கலாச்சாரத்தை காட்டும் சைசியசின் இடிபாடுகள், பால்கேசீரின் யெல்டிரோம் பள்ளிவாசல் (எஸ்கி காமி), ஜானானோஸ் பாஷா பள்ளிவாசல் வளாகம், கடிகார தேவாலய பள்ளிவாசல் மற்றும் அய்வாலக்கில் ஒட்டோமான் கட்டிடக்கலை மற்றும் அலிபே பள்ளிவாசல் (Çınarlı Cami) போன்றவை உள்ளன.

பலேகேசீரில் ஒரு நகர அருங்காட்சியகம் மற்றும் ஒரு நுண்கலை மையமும் உள்ளன. மேலும், எர்டெக், அல்டோனோலுக், அகாய், கோரே மற்றும் அரேன் ஆகிய இடங்களில் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.

அருங்காட்சியகங்கள் மற்றும் வரலாற்றுத் தளங்கள்

[தொகு]
  • பலகேசீர் குவாய் மில்லியே அருங்காட்சியகம்
  • பந்தர்ம தொல்பொருள் அருங்காட்சியகம்
  • எட்ரெமிட் ஆயி சாடகா எர்கே எத்னோகிராபி அருங்காட்சியகம்
  • பாலகேசீர் தேசிய புகைப்பட அருங்காட்சியகம்
  • எட்ரெமிட் தஹ்தாகுலர் எத்னோகிராபி அருங்காட்சியகம்
  • கோனென் மொசைக் அருங்காட்சியகம்
  • பாலகேசீர் நகராட்சியின் டெவ்ரிம் எர்பில் நவீன கலை அருங்காட்சியகம்
  • பிகாடிஸ் அருங்காட்சியக இல்லம்
  • மர்மாரா மாவட்ட அரண்மனைகள் திறந்தவெளி அருங்காட்சியகம்
  • அல்தானோலுக் அண்டார்டோஸ் திறந்தவெளி அருங்காட்சியகம்
  • எர்டெக் பெல்கேஸ் இடிபாடுகள் திறந்தவெளி அருங்காட்சியகம்
  • டாஸ்கிலியன் இடிபாடுகள்
  • புரோகோனெசோஸ் இடிபாடுகள்
  • அடிராமிட்டியன் இடிபாடுகள்
  • யோர்டன் இடிபாடுகள்

தேசிய பூங்காக்கள்

[தொகு]

எர்டெக் கபாடாஸ் பகுதி காஸ் டாஸ் தேசிய பூங்கா குஸ் சென்னெட்டி தேசிய பூங்கா அலகம் மலைகள் அய்வாலக் தீவுகள் இயற்கை பூங்கா மெட்ரா மலைகள்

பாலகேசீரில் கல்வி

[தொகு]

பாலகேசீர் பல்கலைக்கழகம்

[தொகு]

2010 ஆம் ஆண்டில் தனது 18 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய, பால்கேசீர் பல்கலைக்கழகம் (பிஏயு) கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு மாகாணத்தின் உயர்கல்விக்கு தனது சேவையை அதிகரித்து வருகிறது. புதிய யுகத்தை எதிர்கொள்ள ஏற்கனவே தீர்மானித்து, தகவல் யுகத்தில், 5 பீடங்கள், 4 அப்ளைடு பள்ளிகள், 11 தொழிற்கல்வி பள்ளிகள் 2 ஆண்டுகளாக தொழில் பயிற்சி அளிக்கின்றன, 2 பட்டதாரி பள்ளிகள், 2 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 9 ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை நவீன கல்வி சேவைகளை வழங்குகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகேசீர்_மாகாணம்&oldid=3003142" இலிருந்து மீள்விக்கப்பட்டது