பாகை (அலகு)
Appearance
(பாகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும். இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும்.
பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல.
பொதுவான சில கோணங்களின் மாறுதல் வகை
[தொகு]அலகுகள் | மதிப்புகள் | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுழற்சிகள் | 0 | 124 | 112 | 110 | 18 | 16 | 15 | 14 | 13 | 25 | 12 | 34 | 1 |
ஆரையங்கள் | 0 | 2 |
2 |
4 |
3 |
2 | |||||||
பாகைகள் | 0° | 15° | 30° | 36° | 45° | 60° | 72° | 90° | 120° | 144° | 180° | 270° | 360° |
மெட்ரிக் பாகைகள் | 0g | 1623g | 3313g | 40g | 50g | 6623g | 80g | 100g | 13313g | 160g | 200g | 300g | 400g |
அளக்கும் கருவி
[தொகு]பாகையை அளக்கப் பாகைமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியமிக்க பல பாகைமானிகள் பயன்பாட்டில் உள்ளன.