(Translated by https://www.hiragana.jp/)
புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்

ஆள்கூறுகள்: 58°31′18″N 31°16′34″E / 58.52167°N 31.27611°E / 58.52167; 31.27611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சோபியா பேராலயம்
Софийский собор (உருசிய மொழியில்)
தென்கிழக்கிலிருந்து புனித சோபியா பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்நொவ்கொரொட், உருசியா
புவியியல் ஆள்கூறுகள்58°31′18″N 31°16′34″E / 58.52167°N 31.27611°E / 58.52167; 31.27611
சமயம்உருசிய மரபுவழித் திருச்சபை
மாகாணம்நொவ்கொரொட்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1050 அல்லது 1052

புனித சோபியா பேராலயம் (The Cathedral of St. Sophia) என்பது நொவ்கொரொட் பேராயரின் பேராலயக் கோவிலும் நொவ்கொரொட் திருச்சபையின் தாய்க் கோவிலும் ஆகும்.

வரலாறு

[தொகு]

38 மீட்டர் உயரம், ஐந்து குவிமாடங்கள் கொண்ட கல்லாலான பேராலயம் நொவ்கொரொட்டின் விளாடிமிரினார் 1045 இற்கும் 1050 இற்கும் இடைப்பட்ட காலத்தில், பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருவாலி மரத்தால் கட்டப்பட்ட பேராலயத்திற்குப் பதிலாகக் கட்டப்பட்டது.[1] இது ஆயர் லூகா சிடியாடாவினால் (1035–1060) 1050 அல்லது 1052 செப்டம்பர் 14 அன்று சிலுவைத் திருவிழா அன்று அர்ப்பணிக்கப்பட்டது. இங்குள்ள சுவரோவியம் புனித கொன்ஸ்டான்டைனையும், நான்காம் நூற்றாண்டில் உண்மையான சிலுவையைக் கண்டுபிடித்த புனித கெலனையும் சித்தரிக்கிறது. இவ்வோவியம் பேராலயத்தில் உள்ள பழைய சித்திர வேலைப்பாடுகளில் ஒன்றாகவுள்ளது.[2] பொதுவாகப் புனித சோபியா என அறியப்பட்டாலும், இப்பெயர் பெண் புனிதர்களான உரோமின் சோபியாவையோ அல்லது இரத்தசாட்சி சோபியாவையோ குறிக்காமல், ஞானம் என்பதைக் குறிக்கும் (Σしぐまoφふぁいíαあるふぁ, மெய்யியல் என்பதில் உள்ள "philosophia" அல்லது மெய்யியல்—"ஞானத்தின் அன்பு") கிரேக்கச் சொல்லாகும். கொன்தாந்திநோபிளின் பேராலயம் ஹேகியா சோபியா போன்று, நொவ்கொரொட்டின் பேராலயம் கடவுளின் பரிசுத்த ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது நொவ்கொரொட்டின் முதலாவது ஆயர் இயோக்கிம் கொர்சுனியனினால் சுமார் 989 இல் கட்டப்பட்ட மிகப் பழைய மரத்தாலான 13 குவிமாடக் கோயில்களுடன் மாற்றியமைக்கப்பட்டது. பிரதான பொன் தூபிமாடம் 1409 இல் பேராயர் இயோனால் (1388–1415) பொன் முலாம் பூசப்பட்டது. ஆறாவது (பெரியதுமான) குவிமாடம் கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டு, அது மேல் பேச்சு மேடைகளுக்குச் செல்வதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில், நொவ்கொரொட்டியர்களின் செல்வத்தைக் கொண்டிருந்ததாகவும், அங்கு வாசகசாலை ஒன்று காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 1859 இல் வாசகசாலை புனித பீட்டர்ஸ்பேர்க் ஆன்மீகக் கல்விக்கூடத்திற்கு நகர்த்தப்பட்டபோது, அங்கு 1,500 இற்கும் மேற்பட்ட, சில 13 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய தொகுதி நூல்கள் இருந்தன. தற்போதைய பேராயர் லெவ்,[3] பண்டைய பாரம்பரியத்தை வைத்திருப்பதற்காக அங்கு மீண்டும் வாசகசாலையை உருவாக்கினார். 2004 இல், அங்கு 5,000 தொகுதி நூல்கள் இருந்தன.[4] மறைக்கல்வியும் அப்பகுதியில்தான் நடைபெறுகிறது.[5]

பேராலயம் தீயில் ஏற்பட்ட சேதத்தைப் புனரமைத்தபோது 1150 இல், தூபிமாடங்கள் தலைக்கவசம் போன்ற வடிவத்தைப் பெற்றன. உட்பகுதி 1108 இல் ஆயர் நிக்கிட்டா (1096–1108) உத்தரவுப்படி நிறந்தீட்டப்படது. ஆயினும் அவரது மரணத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. பேராயர் நிபொன்ட் (1130–1156) வெளிப்பக்கத்திற்கு வெள்ளையடிக்கச் செய்ததோடு, கட்டடத் தலைவாயிலையும் நிறந் தீட்டச் செய்தார். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் அந்தச் சுவரோவியங்களை இப்போது பார்ப்பது கடினமாகவுள்ளது. 1860 களில், கட்டட உட்பகுதிகள் மீண்டும் நிறந்தீட்டப்பட்டன. இப்போதுள்ள சுவரோவியங்கள் பல 1890 காலத்துக்குரியவை.[6] ஐந்து இடைவெளிகளில் உள்ள வெள்ளைக் கல் மணிக்கோபுரம் பேராயர் இரண்டாம் எவ்பிமியால் (1429–1458) கட்டப்பட்டது. அவருடைய காலத்தில் ஆரம்பக் கட்டமாக முடிக்கப்பட்ட மணிக்கோபுரம், 17 ஆம் நூற்றாண்டில் வீழ்ந்து பின்பு 1673 இல் மீளக் கட்டப்பட்டது.

சுவரில் உள்ள 11 ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம்

12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டுவரை, பேராலயம் பால்டிக் கடல் முதல் உரால் மலைகள் வரையான பகுதியில் காணப்பட்ட நொவ்கொரொட் குடியரசின் சமய வழிபாட்டிடமாகவும் ஆன்மீக நிலையமாகவும் காணப்பட்டது. நொவ்கொரொட்டியர்கள் தங்கள் கோயில்மட்டில் மிகுந்த பெருமை கொண்டிருந்ததோடு, "பரிசுத்த ஞானத்திற்கு தலை வணங்கவும்" அல்லது "பரிசுத்த ஞானத்திற்கான நேர்மையாய் உயிர் விடவும்" அவர்கள் தற்புகழ்ச்சி காணப்பட்டது.[7] அவர்கள்மீது இளவரசர் ஒருவர் கோபம் கொண்டபோது, அவர்கள் "எங்களுக்கு இளவரசர் இல்லை, ஆனால் கடவுளுவும் உண்மையும் பரிசுத்த ஞானமும் உள்ளன எனப் பதில் அளித்தனர்.[8] இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர்கள் பேராலயத்தை நகரத்தின் சின்னமாக மாற்றி, "பரிசுத்த ஞானம் எங்கேயோ அங்கேயே நொவ்கொரொட் உள்ளது" என்றனர்.[9]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. A. N. Nasonov, ed., Novgorodskaia Pervaia Letopis Starshego i mladshego izvodov (Moscow and Leningrad: AN SSSR, 1950), 16,181.
  2. T. Iu. (Tatiana Iur’evna) Tsarevskaia, St. Sofia’s Cathedral in Novgorod, D. G. Fedosov, trans. (Moscow: Severnyi Palomnik, 2005). This is an English translation of Sofiiskii sobor v Novgorode. 2nd ed. (Moscow: Severnyi palomnik, 2005). The Sofia First Chronicle dates the consecration to 1050, the Novgorodian Third Chronicle to 1052. See Sofiiskii Sobor v Velikom Novgorode: Arkhitektura i istoriia, online at http://www.russiancity.ru/text/nov01.htm
  3. See his biography online at http://www.velikiynovgorod.ru/personals/print/?id=203&nid=12 பரணிடப்பட்டது 2007-03-13 at Archive.today
  4. N. Savushkina, “Biblioteka Sofiiskogo Sobora,” Sofia, No. 1 (2004).
  5. Tsarevskaia, St. Sofia’s Cathedral in Novgorod.
  6. Tsarevskaia, St. Sofia’s Cathedral in Novgorod.
  7. Nasonov, ed. Novgorodskaia Pervaia Letopis, 82, 310
  8. Nasonov, ed. Novgorodskaia Pervaia Letopis, 89, 320-21; Michael C. Paul, “The Iaroslavichi and the Novgorodian Veche,” Russian History/ Histoire Russe 31, No. 1-2 (Spring-Summer 2004):53.
  9. Sofiiskaia Pervaia Letopis, Volume 6 of Polnoe Sobranie Russkikh Letopisei, p. 251.