1559
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1559 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1559 MDLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1590 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2312 |
அர்மீனிய நாட்காட்டி | 1008 ԹՎ ՌԸ |
சீன நாட்காட்டி | 4255-4256 |
எபிரேய நாட்காட்டி | 5318-5319 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1614-1615 1481-1482 4660-4661 |
இரானிய நாட்காட்டி | 937-938 |
இசுலாமிய நாட்காட்டி | 966 – 967 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 2 ( |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1809 |
யூலியன் நாட்காட்டி | 1559 MDLIX |
கொரிய நாட்காட்டி | 3892 |
ஆண்டு 1559 (MDLIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி – எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு 14 வயதான வலோயிசின் எலிசபெத் என்பவரை மூன்றாவது மனைவியாகத் திருமணம் புரிந்தார்.
- சனவரி 15 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் வெஸ்ட்பின்சுடர் மடத்தில் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
- பெப்ரவரி 27 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் இங்கிலாந்து திருச்சபையை நிறுவினார்.
- சூலை 10 – [[பிரான்சின் இரண்டாம் என்றி விபத்து ஒன்றில் இறந்ததை அடுத்து அவரது மகன் இரண்டாம் பிரான்சிசு பிரான்சின் மன்னனானான்.
- ஆகஸ்டு 15 – 1,500 ஆண்களைக் கொண்ட 13 கப்பல்களில் எசுப்பானிய மதப்பரப்புனர்கள் வேராகுரூசு நகரில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு வந்து சேர்ந்தனர்.
- செப்டம்பர் 19 – புளோரிடாவில் வந்திறங்கிய சில் வாரங்களில் எசுப்பானிய மதப்பரப்புனர்கள் அங்கு இடம்பெற்ற சூறாவழியினால் பெரும் அழிவைச் சந்தித்தனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஐந்து கப்பல்கள் அழிந்தன. மேலும் பட்டினியாலும், தாக்குதல்களினாலும் பெரும் அழிவைச் சந்தித்த அவர்கள் தமது திட்டத்தை 1561 இல் கைவிட்டனர்.
- செப்டம்பர் 21 – 15-வயது இரண்டாம் பிரான்சிசு பிரான்சின் அரசனாக அதிகாரபூர்வமாக முடிசூடினான்.[1]
- போர்த்துகலுக்கான பிரெஞ்சுத் தூதுவர் சீன் நிக்கொட் மூக்குப்பொடியை பிரான்சில் அறிமுகப்படுத்தி, புகையிலையின் மருத்துவ குணங்களை விளக்கினார்.[2]
பிறப்புகள்
[தொகு]- சூலை 22 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Guy, John, My Heart is my Own, London, Fourth Estate, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841157538
- ↑ Austin, Gregory. "Chronology of Psychoactive Substance Use". Drugs & Society. Comitas Institute for Anthropological Study. Archived from the original on 2011-08-09. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.