(Translated by https://www.hiragana.jp/)
சமூகவுடைமை - விக்கிமேற்கோள் உள்ளடக்கத்துக்குச் செல்

சமூகவுடைமை

விக்கிமேற்கோள் இலிருந்து

சமூகவுடைமை, நிகரமை, சமவுடைமை (Socialism, சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடைமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  • உலகம் முழுவதிலும் மனித சமுதாய அமைப்பில் சோஷலிஸத் தத்துவம் படிப்படியாக ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை எவ்வளவு வேகத்தில் அடையலாம் என்பதிலும், முன்னேறிச் செல்வதற்குரிய வழி முறைகள் என்ன என்பதிலுமே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. - ஜவஹர்லால் நேரு[1]
  • முதலாளித்துவ அமைப்பு முழுவதும் ஏதாவது ஒருவகையான செல்வம் ஈட்டும் ஆர்வமுள்ள சமூகத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோஷலிஸ சமுதாயம் செல்வம் சேர்க்கும் இந்த ஆர்வத்தைக் கைவிட முயற்சி செய்ய வேண்டும். இதற்குப் பதிலாகக் கூட்டுறவை மேற்கொள்ள வேண்டும். - ஜவஹர்லால் நேரு[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 202-203. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சமூகவுடைமை&oldid=21635" இலிருந்து மீள்விக்கப்பட்டது