புரூசு லீ
Appearance
புரூசு லீ (ஆங்கிலம்:Bruce Lee) என்று அறியப்பட்ட புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- தமிழல்லா மேற்கோள்கள்.
- மொழிபெயர்ப்பு: சீனத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு
- சுதந்திரமாக உன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேற்றைய நீ மடிய வேண்டும். பழமையிலிருந்து நீ பாதுகாப்பைப் பெறுகிறாய்; புதுமையின் மூலம் நீ பெருக்கெடுத்து இயங்குவாய்.
- குழந்தையின் அழுகையை நிறுத்தும் பொருட்டு மஞ்சள் இலைகள் தங்கக் காசுகள் ஆகலாம்; அது போல, ஒளிமறை இயக்கங்களும் முறுக்கிய தோற்றமைவுகளும் விசயமறியாத வீரக்கலை ஆர்வலர்களைத்தான் திருப்தி செய்யும்.
- இது என்ன வாழ்க்கை! ஜெயில் வாழ்க்கை போல் இருக்கிறது. மிருகக்காட்சி சாலையிலுள்ள குரங்கைப் போன்ற நிலையில் நான் இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பார்க்கும் பார்வையை எண்ணும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. நான் எளிமையாக வாழ விரும்புகிறேன். எல்லோருடனும் தமாஷாகச் சிரித்துப் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் அது முடிவதில்லை. புகழ் என்னைத் தேடி வந்திருக்கிறது. இதனால் எளிமையாகவும், எண்ணம் போலவும் வாழ முடியாது போல் இருக்கிறது.[1]
நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]- ----
வெளியிணைப்புக்கள்
[தொகு]
- TIME 100: Bruce Lee
- Bruce Lee profile
- Bruce Lee Foundation (link changes window size)
- Bruce Lee at the Internet Movie Database
- Bruce Lee - The Lost Interview
- Bruce Lee Information
சான்றுகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.