(Translated by https://www.hiragana.jp/)
கோயம்பேட்டிலிருந்து சிறப்பு பேருந்து... பயணிகளுக்கு மகிழ்ச்சி தந்த அறிவிப்பு... – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / சென்னை / கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து... பயணிகளுக்கு மகிழ்ச்சி தந்த அறிவிப்பு...

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து... பயணிகளுக்கு மகிழ்ச்சி தந்த அறிவிப்பு...

கோயம்பேடு பேருந்து நிலையம் 

கோயம்பேடு பேருந்து நிலையம் 

Koyambedu | கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து இயக்கப்பட உள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • 1-MIN READ News18 Tamil Chennai,Tamil Nadu
  • Last Updated :

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து இயக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் திருவண்ணாமலை செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வார இறுதி நாட்கள் மற்றும் பௌர்ணமி போன்ற விஷேச நாட்களில் அதிகளவு மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குத் தரிசனத்திற்காகச் செல்வது வழக்கம். அந்தவகையில் சென்னையிலிருந்தும் அதிகளவு மக்கள் திருவண்ணாமலை செல்கின்றனர்.

விளம்பரம்

இதையும் படிங்க: Ooty Flower show: ஊட்டி மலர் கண்காட்சி தேதி நீட்டிப்பு… உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்…

சென்னையிலிருந்து பெருமளவு பயணிகள் திருவண்ணாமலைக்குச் செல்வதால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோர் திருவண்ணாமலைக்கு எளிதில் செல்லும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள், முக்கியமான பண்டிகை நாட்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த புதிய திட்டம் மூலம், பெரும்பாலான பயணிகள் குறைந்த நேரத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எளிதில் அடைய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

மேலும், இந்த சிறப்பு பேருந்து சேவை கூட்ட நெரிசல் ஏற்படாமல் பயணம் மேற்கொள்ளப் பயணிகளுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த திட்டப்படி வரும் 24ஆம் தேதி முதல்,  ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனி ஆகிய வார இறுதி நாள்கள் மற்றும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினங்களிலும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

.
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்