(Translated by https://www.hiragana.jp/)
‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / விளையாட்டு / கிரிக்கெட் / ‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து

‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்திய அணி தனது சூப்பர் 8 சுற்றில் வரும் 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

  • 1-MIN READ News18 Tamil Tamil Nadu
  • Last Updated :

இந்திய அணியில் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 20 அணிகள் மோதின.

லீக் சுற்றின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

விளம்பரம்

இந்த தொடரில் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆடும் 11 வீரர்கள் அணியில் விளையாட வாய்ப்பு தரப்படவில்லை. இருப்பினும், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டதன் மூலம் 1 புள்ளியை பெற்றுக் கொண்டது.

இருப்பினும், லீக் சுற்றில் இந்திய வீரர்கள் அதிரடியாக ரன்கள் சேர்க்காதது ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆடும் 11 பேர் அணியில் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்று ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறியுள்ளார்.

விளம்பரம்

சுழற்பந்து வீச்சை யஷஸ்வி நன்றாக அடித்து ஆடுவார் என்பதால், இந்த விஷயத்தில் இந்திய அணியின் கேப்டன் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணி தனது சூப்பர் 8 சுற்றில் வரும் 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து 22 ஆம் தேதி வங்கதேசத்துடனும், 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி- ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ்.

விளம்பரம்
.
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்