(Translated by https://www.hiragana.jp/)
உலகின் முதல் பறவைக் காய்ச்சல் மரணம் மெக்சிகோவில் உறுதி... அறிகுறிகள் இவைதான்! – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / உலகம் / உலகின் முதல் பறவைக் காய்ச்சல் மரணம் மெக்சிகோவில் உறுதி... அறிகுறிகள் இவைதான்!

உலகின் முதல் பறவைக் காய்ச்சல் மரணம் மெக்சிகோவில் உறுதி... அறிகுறிகள் இவைதான்!

உலகின் முதல் பறவைக் காய்ச்சல் மரணம் மெக்சிகோவில் உறுதி... அறிகுறிகள் இவைதான்!

உலகின் முதல் பறவைக் காய்ச்சல் மரணம் மெக்சிகோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • 1-MIN READ News18 Tamil Tamil Nadu
  • Last Updated :

உலக சுகாதார அமைப்பு (WHO) பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மனித இறப்பை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், மெக்சிகோவில் வசிப்பவர், ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A (H5N2) அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதிபடுத்தப்பட்டார். இந்த சம்பவம் தற்போது உலக சுகாதார நிறுவனத்தை எட்டியுள்ளது.

உலகின் முதல் பறவைக் காய்ச்சல் மரணம் மெக்சிகோவில் உறுதி:

மெக்சிகன் சுகாதார அதிகாரிகளின் அறிக்கையின்படி, WHO-ல் இது உறுதிப்படுத்தப்பட்டது. 59 வயதான இவர், “காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் மற்ற உடல் அசௌகரியம்” போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்திய பின்னர் இறந்ததாகக் கூறப்படுகிறது. “உலகளாவிய ரீதியில் இன்ஃப்ளூயன்ஸா A(H5N2) வைரஸால் பாதிக்கப்பட்ட மெக்சிகோவில் பதிவாகிய நபரின் முதல் பறவை H5 வைரஸ் தொற்று” என WHO தெரிவித்துள்ளது.

விளம்பரம்

நிலைமையை விவரிக்கும் உலகளாவிய சுகாதார அமைப்பு, மே 23 அன்று இதுகுறித்த தகவல் முதலில் கிடைத்தது என்று கூறியது. பாதிக்கப்பட்டவருக்கு கோழி அல்லது பிற விலங்குகளுடன் எந்த முன் தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்கு முன்பே இருக்கும் பல மருத்துவ நிலைகளும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அவை ஏற்கனவே மோசமான நிலைமைக்கு பங்களித்திருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, 59 வயதுடைய நபர் பறவைக் காய்ச்சலின் கடுமையான அறிகுறிகளை அனுபவிப்பதற்கு முன் மூன்று வாரங்கள் படுக்கையில் இருந்தார் எனவும், கொரோனா வைரஸை விட 100 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டு, பறவைக் காய்ச்சலின் அதிகரித்து வரும் எண்ணிக்கை குறித்து வல்லுநர்கள் முன்னர் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

விளம்பரம்

Also Read | 95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?

மனிதர்களில் பறவைக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்:

லேசான காய்ச்சல் போன்ற மேல் சுவாச அறிகுறிகள்
கண் சிவத்தல் (கான்ஜுன்க்டிவிடிஸ்)
காய்ச்சல் (100ºF [37.8ºC] அல்லது அதற்கு மேல் வெப்பநிலை) அல்லது காய்ச்சல் உணர்வு
இருமல்
தொண்டை வலி
மூக்கு அடைத்தல்
தசை அல்லது உடல் வலி
தலைவலி
சோர்வு
மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
வயிற்றுப்போக்கு
குமட்டல்
வாந்தி
வலிப்புத்தாக்கங்கள்

.
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்