(Translated by https://www.hiragana.jp/)
மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சிறுவர் சிறுமிகள் கண்ணீர் பிரார்த்தனை || Mandela health stays critical children prays for recovery
The Wayback Machine - https://web.archive.org/web/20130629183858/http://www.maalaimalar.com:80/2013/06/26165728/Mandela-health-stays-critical.html
Logo
சென்னை 29-06-2013 (சனிக்கிழமை)
மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சிறுவர்-சிறுமிகள் கண்ணீர் பிரார்த்தனை
பிரெட்டோரியா, ஜூன் 26-

தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார்.

தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.

2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலக கால்பந்து போட்டி நடந்தபோது, கடைசி முறையாக பொது இடத்தில் தோன்றிய அவர், பூரண ஓய்வில் உள்ளார். அவரது உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வைத்தியம் அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் நலமடைந்து வீடு திரும்பினார்.

கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி, 94வது பிறந்த நாளை கொண்டாடிய மண்டேலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ந்தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உறுப்புகளின் இயக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

தென் ஆப்பிரிக்காவின் ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்ட தலைவரான மண்டேலாவின் உடல்நலத்தை பேணி, பராமரிக்க தென் ஆப்பிரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்து வந்தது. தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்து வருகிறார்.

மண்டேலாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு, உறக்கத்தை துறந்து மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப கண்ணீர் மல்க பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் தலைமை ஆர்ச் பிஷப் தபோ மக்கோபா இன்று பிரெட்டோரியாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று நெல்சன் மண்டேலாவை பார்த்தார்.

அவருடன் தங்கியுள்ள கிரேசா மக்கேலுக்கு ஆறுதல் கூறிய அவர், முன்னாள் விடுதலை போராட்ட வீரரும் தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் இறுதி மூச்சு அமைதியாக பிரிவதற்கான வேத வாக்கியங்களை உச்சரித்து பிரார்த்தனை நடத்தினார்.

இன்று காலை மண்டேலா சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி வாசலில் கூடிய நூற்றுக்கணக்கான சிறுவர்-சிறுமியர் உருக்கத்துடன் பிரார்த்தனை பாடல்களை பாடல்களை பாடிய காட்சி, காண்போரின் உள்ளங்களை உருகச் செய்தது.

இதே போல் கோடிக்கணக்கான மக்களும் தங்களின் தலைவருக்காக கண்ணீர் மல்க பிரார்த்தித்து வருவதால் தென்னாப்பிரிக்கா சோகக் கடலில் மூழ்கியுள்ளது.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இந்தியாவின் முதல் வழிகாட்டி செயற்கைக்கோளை செலுத்த கவுண்ட் டவுன் தொடங்கியது

இந்திய விண்வெளி ஆராயச்சி மையம் (இஸ்ரோ), முதல் முறையாக வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோளை உருவாக்கியிருக்கிறது.  ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ ....»

Recommendations
Recent Activity