இருதயநோய்
இருதயநோய் என்பது, இருதயத்தின் பலவித நோய்களைக் குறிக்கும் ஒரு பொதுவான
சொல்லாகும். அந்நோய்களுள், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும்
நோயே (Coronary Artery Disease - சிஏடி
ஆபத்துக் காரணிகள்[தொகு]
வயது[தொகு]
வயது அதிகரிக்க அதிகரிக்க இருதயநோய் ஏற்படக் கூடிய ஆபத்தும் அதிகரிக்கிறது.
பாலினம்[தொகு]
- ஆண் - 55 வயதுக்கும் மேல்
- பெண் - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு
குடிவழி[தொகு]
நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் - பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது குழந்தைகள் - 55 வயதுக்கு முன்னரோ, பெண் உறவினர்களைப் பொறுத்தவரை மாதவிடாய் சுழற்சி நிற்பதற்கு முன்னரோ இருதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இருதயநோய் ஏற்படுவதற்கான ஆபத்து கூடுகிறது.
இனம்[தொகு]
தொல்குடிகள், ஆப்பிரிக்க, ஆசிய குடிவழியினருக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் உண்டாகக் கூடிய வாய்ப்பு கூடுதல் என்பதால், அவர்களுக்கு மற்ற மக்களை விட இருதய நோய் ஏற்படும் தீவாய்ப்பு அதிகம்.
தவிர்த்து மாற்றியமைக்கக் கூடிய ஆபத்துக் காரணிகள்[தொகு]
- உயர் இரத்த அழுத்தம்
- அதிக இரத்தக் கொழுப்பு
- புகைப்பிடித்தல்
- நீரிழிவு
- உடற்பருமன்
- உடற்பயிற்சி இன்மை
- அதிக அளவில் மது அருந்துதல்
- மன அழுத்தம்
References[தொகு]
- ↑ "Heart and stroke foundation". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-10-31.