இற்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம்
39Y
Sc

Y

Lu
இசுட்ரோன்சியம்இட்ரியம்சிர்க்கோனியம்
தோற்றம்
வெள்ளி
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் இட்ரியம், Y, 39
உச்சரிப்பு /ˈɪtriəm/ IT-ree-əm
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 35, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
88.90584(2)
இலத்திரன் அமைப்பு [Kr] 4d1 5s2
2, 8, 18, 9, 2
Electron shells of Yttrium (2, 8, 18, 9, 2)
Electron shells of Yttrium (2, 8, 18, 9, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு யொகான் கடோலின் (1794)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
கார்ல் குஸ்தாவ் மொசாண்டர் (1840)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 4.472 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 4.24 g·cm−3
உருகுநிலை 1799 K, 1526 °C, 2779 °F
கொதிநிலை 3609 K, 3336 °C, 6037 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 11.42 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 365 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 26.53 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1883 2075 (2320) (2627) (3036) (3607)
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 3, 2, 1 (weakly basic oxide)
மின்னெதிர்த்தன்மை 1.22 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 600 kJ·mol−1
2வது: 1180 kJ·mol−1
3வது: 1980 kJ·mol−1
அணு ஆரம் 180 பிமீ
பங்கீட்டு ஆரை 190±7 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close packed
இட்ரியம் has a hexagonal close packed crystal structure
காந்த சீரமைவு இணைக்காந்த வகை[1]
மின்கடத்துதிறன் (அ.வெ.) (αあるふぁ, poly) 596 nΩおめが·m
வெப்ப கடத்துத் திறன் 17.2 W·m−1·K−1
வெப்ப விரிவு (அ.வெ.) (αあるふぁ, poly)
10.6 µm/(m·K)
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 3300 மீ.செ−1
யங் தகைமை 63.5 GPa
நழுவு தகைமை 25.6 GPa
பரும தகைமை 41.2 GPa
பாய்சான் விகிதம் 0.243
பிரிநெல் கெட்டிமை 589 MPa
CAS எண் 7440-65-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இட்ரியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
87Y செயற்கை 3.35 நா εいぷしろん - 87Sr
γがんま 0.48, 0.38D -
88Y செயற்கை 106.6 d εいぷしろん - 88Sr
γがんま 1.83, 0.89 -
89Y 100% Y ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
90Y செயற்கை 2.67 d βべーた 2.28 90Zr
γがんま 2.18 -
91Y செயற்கை 58.5 d βべーた 1.54 91Zr
γがんま 1.20 -
·சா

இட்ரியம் (Yttrium, ஐபிஏ: /ɪˈtriəm/) என்னும் தனிமம் Y என்னும் வேதியியல் குறியீடு கொண்ட வெள்ளி போன்ற நிறம் கொண்ட தாண்டல் உலோகம் ஆகும். இதன் அணுவெண் 39. இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் சுவீடன் நாட்டில் உள்ள இட்டெர்பி (Ytterby,) என்னும் ஊரில் உள்ள ஒரு கனிமத்தில் இருந்து, 1794 ஆம் ஆண்டில் யோகான் கடோலின் என்பவர் பெற்றதால் இதற்கு இட்ரியம் எனப் பெயர் சூட்டப்பட்டது.[2]

இட்ரியம் அரிதாகக் கிடைக்கும் தனிமங்களில் எப்போதும் இலந்தனைடுகளுடன் சேர்ந்தே காணப்படும். இவை இயற்கையில் சுயாதீனமான தனிமமாக எப்போதும் காணப்படுவதில்லை. இதன் 89Y என்ற நிலையான ஓரிடத்தான் மட்டுமே இதன் இயற்கையாக உருவாகும் ஓரிடத்தான் ஆகும்.

1787 ஆம் ஆண்டில் கார்ல் ஏக்செல் அரேனியசு என்பவர் சுவீடனின் இட்டர்பி என்ற இடத்தில் புதிய கனிமம் கண்டுபிடித்து அதற்கு இட்டர்பைட்டு எனப் பெயரிட்டார். யோகான் கடோலின் என்பவர் 1789 இல் அரேனியசின் மாதிரியில் இருந்து இட்ரியத்தின் ஆகசைடைக் கண்டுபிடித்தார்.[2] ஆன்டர்சு எக்கெபெர்க் என்பவர் புதிய ஆக்சைடுக்கு இட்ரியா எனப் பெயரிட்டார். 1828 ஆம் ஆண்டில் பிரீட்ரிக் வோகலர் என்பவர் இட்ரியம் தனிமத்த முதன் முதலாகப் பிரித்தெடுத்தார்.[3]

இட்ரியம் முக்கியமாக பொசுபர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டிகளில் எதிர்மின் கதிர் குழாய் திரைகளிலும், ஒளி உமிழ் இருமுனையங்களிலும் சிவப்பாக ஒளிரும் ஒரு பொருளாக ஒளிரியம் (பொசுபர்) பயன்படுகின்றது.[4] அத்துடன் மின்வாயிகள், மின்பகுபொருட்கள், சீரொளிகள், மீக்கடத்திகள் தயாரிப்பிலும், மருத்துவம் போன்றவற்றிலும் பயன்படுகிறது.

இட்ரியம் உயிரினச் செயல்பாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இட்ரியம் சேர்மங்கள் உடலில் பட நேர்ந்தால் நுரையீரல் நோய்கள் தோன்றுகின்றன.

இட்ரியம்-90 என்ற கதிரியக்க ஐசோடோப்பு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்துகள் புற்று நோய்கள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன, இட்ரியம் சிறிய அளவுகளில் (0.1 முதல் 0.2%) குரோமியம், மாலிப்டினம், தைட்டானியம் மற்றும் சிர்க்கோனியம் போன்ற மணிகளின் அளவுகளை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் மற்றும் மெக்னீசியம் உலோகக் கலவைகளின் வலிமையை அதிகரிக்க இட்ரியம் பயன்படுகிறது. உலோகக் கலவைகளுடன் இட்ரியம் சேர்ப்பதால் அவற்றின் உயர் வெப்ப படிகமாதால், உயர் வெப்ப ஆக்சிசனேற்றம் போன்றவை தடுக்கப்படுகின்றன. இட்ரியம், பேரியம் தாமிர ஆக்சைடு மீக்கடத்திகளில் இட்ரியம் ஒரு பகுதிப் பொருளாகக் காணப்படுகிறது.

பண்புகள்[தொகு]

இட்ரியம் ஒரு மென்மையான வெள்ளியைப் போல வெண்மை நிறம் கொண்ட ஒரு தனிமமாகும். நெடுங்குழு 3 இல் உள்ள தனிமங்களில் உயர் படிகத்தன்மை கொண்டு பளபளப்புடன் காணப்படுகிறது. ஆவர்த்தனப் போக்குகளின்படி இதன் முன்னோடியான இதே குழுவைச் சேர்ந்த இசுக்காண்டியத்தைக் காட்டிலும் மின்னெதிர் தன்மை குறைவாகவும், 5 ஆவது தொடரில் உள்ள அடுத்த தனிமமான சிர்க்கோனியத்தைக் காட்டிலும் குறைவான மின்னெதிர்தன்மை தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. மேலும் இதே குழுவைச் சேர்ந்த இதன் அடுத்த தனிமமான இலந்தனத்தைக் காட்டிலும் அதிக மின்னெதிர் தன்மை கொண்டும் இருக்கிறது. லாந்தனைடு குறுக்கம் காரணமாக மற்ற லாந்தனைடுகளுடன் மின்னெதிர் தன்மையில் நெருக்கமாக உள்ளது. டி தொகுதியைச் சேர்ந்த முதலாவது 5 ஆவது தொடர் தனிமம் இட்ரியம் ஆகும். Y2O3 என்ற பாதுகாப்பு அடுக்கு உருவாதல் காரணமாக தூய்மையான இட்ரியம் நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இப்பாதுகாப்பு அடுக்கைச் 750 பாகை செல்சியசு வெப்ப நிலைக்குச் சூடாக்கும் போது இப்படலம் 10 µm அளவை அடைகிறது. பொதுவாக இறுதியாகப் பிரித்தெடுக்கப்படும் இட்ரியம் காற்றில் நிலைப்புத் தன்மை அற்றதாகவும், இதன் துருவல்கள் அல்லது சீவல்கள் 400 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தும் போது தீப்பற்றி எரிகிறது. நைட்ரசனுடன் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இட்ரியம் நைட்ரைடு தோன்றுகிறது.

லாந்தனைடுகளுடன் ஒற்றுமை[தொகு]

இட்ரியம் மற்றும் லாந்தனைடுகளுக்கு இடையில் ஏராளமான ஒற்றுமைகள் காணப்படுவதால் இதையும் அரு மண் உலோகம் என்ற வகைப்பாட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். இயற்கையில் அருமண் கனிமங்களுடன் எப்போதும் கலந்த நிலையில் இட்ரியமும் கிடைக்கிறது. இசுக்காண்டியத்தின் வேதிப் பண்புகளுடன் இதன் பண்புகளும் ஒத்ததாக உள்ளது. இதன் இரசாயன வினைத்திறனில் டெர்பியம் மற்றும் டிசிப்ரோசியத்தை ஒத்த வினை வரிசையில் இட்ரியமும் காணப்படுகிறது. இட்ரியம் குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் உருவ அளவுடன் இது ஒத்துள்ளது. அணு ஆரத்துடன் உள்ள ஒற்றுமை காரணமாக லாந்தனைடு குறுக்கம் தோன்றுகிறது. இட்ரியம் மற்றும் லந்தானைடுகள் ஆகியவற்றின் வேதியியல் பண்புகளுக்கு இடையே காணப்படும் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்று இட்ரியத்தின் மூவிணைதிறன் பண்பும் ஒன்றாகும். அதேசமயம் லந்தானைடுகளில் பாதிக்கு மேற்பட்டவை மூன்றை தவிர்த்த வேறுபட்ட இணைதிறன் மதிப்புகளை கொண்டிருக்கின்றன. ஆயினும், பதினைந்து லந்தானைடுகளில் நான்கு மட்டுமே நீர்த்த கரைசலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

தோற்றம்[தொகு]

இட்ரியம் பெரும்பாலும் அருமண் கனிமங்களுடன் சேர்ந்தே காணப்படுகிறது. சில யுரேனியம் தாதுக்களுடன் சேர்ந்தும் இது காணப்படுகிறது. ஆனால் புவியின் பரப்பில் எப்போதும் இட்ரியம் தனித்து உலோகமாக கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட புவியில் மில்லியனுக்கு 31 பங்கு இட்ரியமாக உள்ளது. புவியில் அதிகமாகக் காணப்படும் தனிமங்களின் வரிசையில் இட்ரியம் 28 ஆவது இடத்தைப் பிடிக்கிறது.இது வெள்ளி தனிமத்தைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். மண்ணில் இதன் அடர்த்தியின் அளவு மில்லியனுக்கு 10 முதல் 150 பகுதிகளாகும். கடல் நீரில் இதன் அளவு மில்லியனுக்கு 9 பகுதிகள் ஆகும். அப்போலோ திட்டத்தில் நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் அதிக அளவு இட் ரியம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
  2. 2.0 2.1 Van der Krogt 2005
  3. CRC contributors (2007–2008). "Yttrium". In Lide, David R. (ed.). CRC Handbook of Chemistry and Physics. Vol. 4. New York: CRC Press. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0488-0. {{cite book}}: |author= has generic name (help)
  4. Cotton, Simon A. (2006-03-15). "Scandium, Yttrium & the Lanthanides: Inorganic & Coordination Chemistry". Encyclopedia of Inorganic Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0470862106.ia211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-86078-2.

இணைநூல் பட்டியல்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இற்றியம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இற்றியம்&oldid=3952912" இலிருந்து மீள்விக்கப்பட்டது