(Translated by https://www.hiragana.jp/)
செக்கரியா (குரு) - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

செக்கரியா (குரு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்கரியா
திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு (1490, சுதை ஓவியம் பிலாரன்சு நகர்)
குரு, இறைவாக்கினர்
பிறப்புஎபிரோன்
இறப்புஎருசலேம்
ஏற்கும் சபை/சமயங்கள்கிறித்தவம்
இசுலாம்
திருவிழாசெப்டம்பர் 5 – கிழக்கு மரபு வழி
செப்டம்பர் 5 – லூத்தரன்
செப்டம்பர் 23 – உரோமன் கத்தோலிக்கம்

செக்கரியா விவிலியம் மற்றும் திருக்குரானில் குறிப்பிடப்படும் நபர் ஆவார். விவிலியம் இவரை திருமுழுக்கு யோவானின் தந்தை எனவும் ஆரோன் குலத்தவர் எனவும் இறைவாக்கினர் எனவும் குறிக்கின்றது.[1] இவர் இயேசுவின் தாய் மரியாவின் உறவினராகிய எலிசபெத்தின் கணவராவார்.

விவிலியத்தில்[தொகு]

லூக்கா நற்செய்தியின் படி முதலாம் ஏரோதின் ஆட்சியின் போது இவர் வாழ்ந்தவர். இவர் அபியா வகுப்பைச் சேர்ந்த குரு ஆவார்.. இவர் மனைவி எலிசபெத்து. இவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள் எனவும் ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள் எனவும் விவிலியம் குறிக்கின்றது. இவர்கள் பிள்ளை இல்லாதிருந்தனர்; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் தேவதூதர் தோன்றி அவருக்கு ஒரு மகன் பிறப்பார் என அறிவித்தார். இதனை நம்பாமல் செக்கரியா சந்தேகித்ததால் தாம் அறிவித்தவை நிறைவேறும் வரை செக்கரியாவை பேச்சற்றவராய் மாற்றினார். தம்முடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் செக்கரியா வீடு திரும்பினார். அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்றார்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின் போது கபிரியேலின் மூலம் எலிசபெத்து கருவுற்றிருப்பதை அறிந்த மரியா அவரை காண வந்தார். மரியா அவரொடு ஆறு மாதம் தங்கி உதவிபுரிந்தார் என விவிலியம் குறிக்கின்றது.

லிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுத்தார். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ' வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்' என்றார். 'குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன? ' என்று செக்கரியா நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ' இக்குழந்தையின் பெயர் யோவான் ' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Luke 1:67–79
  2. Luke 1:80, Luke 3:2–3, Matthew 3:1


"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கரியா_(குரு)&oldid=1704744" இலிருந்து மீள்விக்கப்பட்டது