கமாலியேல்
மூப்பர் கமாலியேல் /ɡəˈmeɪljəl/,[1] (எபிரேயம்: רבן גמליאל הזקן; கிரேக்கம்: Γαμαλιήλ
கிறித்தவ மரபுகளின் படி இவர் யூத திருச்சட்ட ஆசிரியரும், பரிசேயரும் ஆவார்.[4] திருத்தூதர் பணிகள் 5ஆம் அதிகாரத்தின்படி இவர் மக்களிடையே நன்மதிப்பு பெற்றவராக விளங்கினார். இவர் திருத்தூதர்கள் தலைமைச்சங்கத்தின் முன் விசாரிக்கப்பட்டபோது, அவர்களுக்காகப்பரிந்து பேசினார்.[5] மேலும் திருத்தூதர் பணிகள் 22ஆம் அதிகாரத்தின் படி இவர் திருத்தூதர் பவுலின் ஆசிரியர் ஆவார்.[6]
புனிதராக
[தொகு]சில கிறித்தவ மரபுகள் இவர் பின்நாட்களின் கிறித்தவத்தை தழுவினார் எனவும் பேதுரு மற்றும் புனித யோவானால், தனது மகன்களோடும் நிக்கதேமோடும் திருமுழுக்கு பெற்றார் என்பர்.[7] மேலும் இவர் கிறித்தவர்களுக்கு உதவுவதற்காக இதனை மறைவாக வைத்திருந்தார் என்பர்.[8] சில அறிஞர்கள் இம்மரபுகளை வெறும் புணைவுகளாகக் கருதுகின்றனர்.[9]
கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் ஆகஸ்ட் 2 ஆகும். புனித மரபின் படி இவரின் மீபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பர். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் ஆகஸ்ட் 3 ஆகும்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jones, Daniel; Gimson, A.C. (1977). Everyman's English Pronouncing Dictionary. London: J.M. Dent & Sons Ltd. p. 207. – மேலும் யூதவழக்கில் /ɡəˈmeɪli.əl/; /ɡəˈmɑːli.əl/ அல்லது /ˌɡæməˈliːəl/ என்றும் ஒலிக்கப்படலாம்.
- ↑ The Jewish Encyclopedia article on Gamliel I by Solomon Schechter and Wilhelm Bacher.
- ↑ 'Abodah Zarah 3:10
- ↑ "Gamaliel." Catholic Encyclopedia. http://www.newadvent.org/cathen/06374b.htm
- ↑ Raymond E. Brown, A Once-and-Coming Spirit at Pentecost, page 35 (Liturgical Press, 1994). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8146-2154-6
- ↑ Andreas J. Köstenberger, L. Scott Kellum, Charles Quarles, The Cradle, the Cross, and the Crown: An Introduction to the New Testament, page 389 (B & H Publishing Group, 2009). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8054-4365-3
- ↑ Paton James Gloag, A Critical and Exegetical Commentary on The Acts of the Apostles, Volume 1, page 191, citing Photius, Cod. 171 (Edinburgh: T & T Clark, 1870).
- ↑ Recognitions of Clement 1:65-66
- ↑ Geoffrey W. Bromiley (editor), The International Standard Bible Encyclopedia: Volume Two, E-J, page 394 (Wm B. Eerdmans Publishing Co., 1915; Fully Revised edition, 1982). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-3782-4
- ↑ Catholic Encyclopedia, Gamaliel the Elder