ஜூன் 2009
<< | ஜூன் 2009 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMIX |
ஜூன் 2009, 2009 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆனி மாதம் ஜூன் 15, திங்கட்கிழமை இல் தொடங்கி ஜூலை 16 வியாழக்கிழமை இல் முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- ஜூன் 5 - வைகாசி விசாகம்
- ஜூன் 9 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை
- ஜூன் 26 - ரொறன்ரோ ஆதிபராசக்தி கோவில் உற்சவாரம்பம்
- ஜூன் 26 - ரொறன்ரோ சிவா - விஷ்ணு கோவில் உற்சவாரம்பம்
- ஜூன் 26 - நவாலி அட்டகிரி கந்தசுவாமி கொடியேற்றம்
- ஜூன் 26 - வரணி சாவிலிப்பிட்டி கந்தசுவாமி கொடியேற்றம்
- ஜூன் 27 - மாணிக்கவாசகர் குருபூசை
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- ஜூன் 30:
- இத்தாலியில் சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு வெடித்துச் சிதறியதில் 15 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்தார்கள். (பிபிசி)
- பாரிசில் இருந்து 150 பேருடன் புறப்பட்ட ஏமன் விமானம் கொமரோசு அருகில் வீழ்ந்தது. 5 வயதுக் குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது. (சீஎனென்)
- அமெரிக்கப் படைகள் பக்தாத் மற்றும் ஈராக்கின் முக்கிய நகரங்களில் இருந்து வெளியேறத் தொடங்கினர். (நியூயோர்க் டைம்ஸ்)
- மும்பையில் பந்த்ரா-ஒர்லி ஆகிய பகுதிளை இணைக்கும் வகையில் 5.6கிமீ நீள கடல்வழிப் பாலம் திறக்கப்பட்டது. (தினமலர்)
- ஜூன் 28:
- இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தினர். (தினத்தந்தி)
- ஒந்துராசில் அதன் அதிபர் மனுவேல் செலாயா இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். (பிபிசி)
- ஜூன் 27: வட அயர்லாந்தில் இரண்டு தீவிரவாதக் குழுக்கள் தமத்ஹு ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்தனர். (த டெலிகிராப்)
- ஜூன் 25: ஹொண்டுராஸ் தலைவர் மனுவேல் செலாயா இராணுவத் தளபதியைப் பதவியில் இருந்து அகற்றினார். மேல்நீதிமன்றம் உடனடியாக அவரை பணிக்குத் திரும்புமாறு கட்டளையிட்டது. (பிபிசி)
- ஜூன் 24:
- 35,000 ஆண்டுகள் பழமையான புல்லாங்குழல் ஒன்று ஜெர்மனியில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. (பிபிசி)
- பாகிஸ்தான், வசிரிஸ்தானில் அமெரிக்க வான் தாக்குதலில் குறைந்தது 43 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 22: வாஷிங்டனில் நிலத்தடி தொடருந்து] தடம்புரண்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 70 பேர் காயமடைந்தனர். (என்பிசி)
- ஜூன் 21:
- மரவள்ளி மாயா மக்களின் முக்கிய உணவாக இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளது. (லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்)
- 2009 ஐசிசி உலக இருபது20 கிண்ணத்தை இலங்கைக்கு எதிராக ஆடி பாகிஸ்தான் வெற்றி கண்டது. (கிரிக்கின்ஃபோ)
- கிரீன்லாந்து டென்மார்க்கிடம் இருந்து பிரிந்து செல்லுவதற்கான முதற்படியாக தன்னாட்சியை அறிவித்தது. (பிபிசி)
- ஈரானில் தேர்தல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதில் பலர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 20: மேற்கு வங்காளத்தில் லால்கர் நகரில் மாவோயிசவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் பெரும் தாக்குதலைத் தொடங்கியது. (பிடிஐ)
- ஜூன் 19: ஈரானிய அதிபர் தேர்தலில் மஃமூத் அஃமதிநெச்சாத் வெற்றி பெற்றதாக அயதொல்லா கொமெய்னி அறிவித்தார். (நியூயார்க் டைம்ஸ்)
- ஜூன் 17: வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ருமேனியர்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றதை அடுத்து நூற்றுக்கும் அதிகமானோர் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறினர். (பிபிசி)
- ஜூன் 14: ஐரோப்பாவின் முதலாவது H1N1 இறப்பு ஸ்கொட்லாந்தில் பதிவானது. (ராய்ட்டர்ஸ்)
- ஜூன் 12: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீரின் நகரங்களில் இருந்து தனது படைகளை இந்தியா திரும்பப்பெறுவதாக அறிவித்தது. (த டைம்ஸ்)\
- ஜூன் 11: பன்றிக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் H1N1 தீநுண்மத்தை உலகப் பரவல் தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- ஜூன் 9:
- பாகிஸ்தான் பெஷாவரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சிட்னி நகரில் இரண்டு இந்திய இளைஞர்கள் வெள்ளை இனத்தவரால் தாக்கப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 8:
- சீனாவிலிருந்து சட்டவிரோதமாக வடகொரியாவுக்குள் நுழைந்த இரு அமெரிக்க ஊடகவியலாளர்காளுக்கு 12 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. (ஸ்கை செய்திகள்)
- ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு இடம்பெற்ற தேர்தலில் லண்டன் பகுதியில் போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம் 50,014 வாக்குகளைப் பெற்றார். எனினும் நாடாளுமன்றத்துக்கு அவர் தெரிவாகவில்லை. (தமிழ்நெட்)
- ஜூன் 7: பிரேசிலில் காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த மேலும் 4 பேரின் உடல்கள் அத்திலாந்திக் கடலில் கண்டெடுக்கப்பட்டன. (பிபிசி)
- ஜூன் 6: தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் சிக்கி 76 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 5: பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 4:
- அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா எகிப்தின் கெய்ரோ நகரில் முஸ்லிம் உலகிற்கான தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். (பிபிசி)
- 1989 டியனன்மென் சதுக்கப் படுகொலைகளின் 20 ஆண்டு நிறைவை நினைவுகூர ஹொங்கொங் நகரில் 150,000 பேர் கூடினர். (பிபிசி)
- ஜூன் 3: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மீரா குமார் மக்களவையின் முதலாவது பெண் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அல்ஜசீரா)
- ஜூன் 2: காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐநாவின் சிறப்புக்குழுவினர் காசாவை வந்தடைந்தனர். (தினக்குரல்)
- ஜூன் 1: ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று 228 பயணிகளுடன் பிரேசிலுக்கு அருகில் காணாமல் போனது. (பிபிசி)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஜூன் 29: கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இராசலிங்காம் நகுலேஸ்வரன் என்ற மத போதகர் காணாமல் போயுள்ளார். (தமிழ்வின்)
- ஜூன் 27: யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பெண் தொண்டு பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். (தமிழ்வின்)
- ஜூன் 25:
- வீரகேசரி நாளிதழின் ஊடகவியலாளர் கிருஸ்னி கந்தசாமி வத்தளையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு கண்டியில் வைத்து விடுவிக்கப்பட்டார். (தமிழ்வின்)
- யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனுவும், வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பு மனுவும் தெரிவத்தாட்சி அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. (தமிழ்வின்)
- யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படும் 3 நாளேடுகளின் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் இனந்தெரியாத சில ஆயுததாரிகளால் தீ வைக்கப்பட்டது. (தமிழ்வின்)
- ஜூன் 24:
- வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப்பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்க மூலம் எடுத்து செல்லப்படும் என டில்லியில் இலங்கை-இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. (தமிழ்வின்)
- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளதாக அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் அறிவித்தது. (தமிழ்வின்)
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்