(Translated by https://www.hiragana.jp/)
தாய்மொழி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை "முதல் மொழி" பற்றியது. தாய்லாந்து நாட்டின் முதல் மொழி பற்றி அறிய தாய் (மொழி) கட்டுரையைப் பார்க்க.

தாய்மொழி (Mother Tongue) என்பதற்குப் பல விதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கிவரும் இச்சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான வரைவிலக்கணம் கொடுப்பது எளிதானதல்ல.

ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்மொழி&oldid=3392590" இலிருந்து மீள்விக்கப்பட்டது