(Translated by https://www.hiragana.jp/)
புரோப்பிலீன் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

புரோப்பிலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பிலீன்
Skeletal formula of propene
Skeletal formula of propene
புரோப்பைலீன்
புரோப்பைலீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Propene
புரோப்பிலீன்
இனங்காட்டிகள்
115-07-1
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் UC6740000
  • C=CC
UN number 1077
In திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு: 1075
பண்புகள்
C3H6
வாய்ப்பாட்டு எடை 42.08 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வளிமம்
உருகுநிலை − 185.2 °செ (88.0 கெ)
கொதிநிலை − 47.6 °செ (225.5 கெ)
0.61 கி/மீ3 (? °செ)
பிசுக்குமை 8.34 µPa•s 16.7 °செ இல்
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.366 D (வளிமம்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எளிதில் தீப்பற்றும்,
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் 12
S-சொற்றொடர்கள் 9-16-33
தீப்பற்றும் வெப்பநிலை −108 °செ
தொடர்புடைய சேர்மங்கள்
குழுக்கள்
தொடர்புடையவை
அல்லைல், புரோப்பீனைல்
தொடர்புடைய சேர்மங்கள் புரோப்பேன், புரோப்பைன்
அல்லீன், 1-புரோப்பனால்
2-புரோப்பனால்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோப்பீன் (Propene) என்பது C3H6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோப்பைலீன் அல்லது மெத்தில் எத்திலீன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். நிறைவுறாத கரிமச் சேர்மமான இதன் அமைப்பில் ஓர் இரட்டைப் பிணைப்பு இடம்பெற்றுள்ளது. ஆல்கீன் வகைச் சேர்மங்களில் புரோப்பீன் இரண்டாவது எளிய ஆல்கீன் சேர்மமாகும்.

பண்புகள்

[தொகு]

சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் புரோப்பீன் ஒரு வாயுவாகும். பல ஆல்கீன்கள் போல புரோப்பீனும் நிறமற்று உள்ளது. இலேசான பெட்ரோலியம் போன்ற நெடி உடையதாகவும் உள்ளது [1] அதிக நிறை காரணமாக எத்திலீனைக் காட்டிலும் புரோப்பீன் அதிக அடர்த்தியும் அதிக கொதிநிலையும் கொண்டதாக உள்ளது. புரோப்பேனைக் காட்டிலும் சற்று குறைவான கொதிநிலையை கொண்டிருக்கிறது. எனவே ஆவியாதலும் அதைவிட அதிகமாகும். வலிமையான முனைவுப் பிணைப்புகள் புரோப்பீனில் கிடையாது. இடக்குழு Cs என்ற குறைக்கப்பட்ட சீரொழுங்கில் இருப்பதால் சிறிய இருமுனைத் திருப்புத்திறனைப் பெற்றுள்ளது.

சைக்ளோபுரோப்பீன் போன்ற அனுபவ வாய்ப்பாட்டையே புரோப்பீனுக்கும் எழுதலாம். ஆனால் இதன் அணுக்கள் வெவ்வேறு வழிகளில் அணுக்களுடன் இணைந்துள்ளன. இம்மூலக்கூறுகளை கட்டமைப்பு மாற்றீயங்களாக உருவாக்குகின்றன.

தோற்றம்

[தொகு]

தாவரங்கள் மற்றும் நொதித்தல் செயல்முறையின் ஒரு உடன் விளை பொருளாக புரோப்பீன் இயற்கையில் காணப்படுகிறது. டைட்டன் துணைக்கோளின் வளிமண்டலத்தில் இயற்கையாகத் தோன்றும் புரோப்பீன் இருப்பதாக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று சனி கோளை ஆய்வு செய்யும் காசினி-ஐகென் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்ட காசினி சுற்றுப்பாதை விண்வெளிக்கலம் கண்டுபிடித்திருப்பதாக நாசா அறிவித்தது.

உற்பத்தி

[தொகு]

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மற்றும் மிகவும் குறைவான அளவிற்கு நிலக்கரி எரிபொருள்களிலிருந்து புரோப்பீன் தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பின் போதும் இயற்கை எரிவாயு செயலாக்கத்தின் போதும் ஒரு உடன் விளைபொருளாக புரோப்பீன் கிடைக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பின் பெரிய ஐதரோகார்பன் மூலக்கூறுகள் உடைந்து சிறு மூலக்கூறுகளாக மாறும் போது எத்திலீன், புரோப்பேன் மற்றும் பிற சேர்மங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாப்தாவிலிருந்து எத்திலீனை உற்பத்தி செய்யும் நோக்கில் நிகழ்த்தப்படும் வினை புரோப்பீன் உருவாதலுக்கான முக்கியமான ஆதாரமாகும். ஆனால் இவ்வினையில் வேறு பல விளைபொருட்களும் உருவாகின்றன[2]. பிளத்தல் அல்லது பிற சுத்திகரிப்பு முறைகளில் இருந்து கிடைக்கும் ஐதரோகார்பன் கலவைகளிலிருந்து பின்னக் காய்ச்சி வடித்தல் மூலம் புரோப்பீன் தனித்துப் பிரித்து எடுக்கப்படுகிறது. இச்சுத்திகரிப்பு முறையில் கிடைக்கும் புரோப்பீன் 50 முதல் 70 % தூய்மையானதாகும்[2].

ஒப்பீட்டளவில் குறைந்த புரோப்பேன் உற்பத்தியும் சில பகுதிகளில் உள்ள மோட்டார் பெட்ரோல் தேவை குறைவும் புரோப்பீன் விநியோகத்தைக் குறைத்துள்ன. பெருகி வரும் காரணம் நோக்கிய உற்பத்தி முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன [3]. இத்தகைய காரணம் தழுவிய உற்பத்தி முறைகளில் பின்வருவன அடங்கும்.

ஒலிப்பீன் மெட்டாதெசிசு எனப்படும் ஒலிப்பீனின் இரட்டைப் பிணைப்பு இடம்பெயர்தல் வினையின் போது எத்திலீன் மற்றும் பியூட்டீன் இடையே நிகழும் மீள்வினையில் முதலில் இரட்டைப் பிணைப்புகள் உடைந்து பின்னர் புரோப்பீனாக மறு உருவாக்கம் அடைகின்றன. இதை விகிதச்சமமில்லாமல் ஆதல் வினை என்றும் அழைப்பர்[3].எடையில் 90% புரோப்பீன் உற்பத்தி இலக்கு எட்டப்படுகிறது. பியூட்டீன் மூலப்பொருள் இல்லாதபோதும் இந்த வழி முறையைப் பயன்படுத்தப்படலாம். இந்நிகழ்வில் ஒரு பாதி எத்திலீன் மூலப்பொருளாகி எத்திலீன் இருபடியாக மாறுகிறது. இந்த இருபடி எத்திலீனை பியூட்டீனாக மாற்றுகிறது.

புரோப்பேன் ஐதரசன்நீக்கல்வினை புரோப்பேனை புரோப்பீனாக மாற்றுகிறது. உடன் விளைபொருளாக ஐதரசன் கிடைக்கிறது. புரோப்பேனிலிருந்து புரோப்பீன் உருவாதால் 85 மோல் சதவீதமாகும். வினை விளைபொருளாக கிடைக்கும் ஐதரசன் புரோப்பேன் ஐதரசன்நீக்கல்வினைக்கு வழக்கமாக எரிபொருளாகப் பயன்படுகிறது. இதன் விளைவாக இவ்வினையில் ஒருவேளை ஐதரசன் தேவைப்பட்டாலொழிய புரோப்பீன் மட்டுமே ஒரே உற்பத்திப் பொருளாகக் கருதப்படுகிறது. புரோப்பேன் அதிகமாக கிடைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த தயாரிப்பு முறை உகந்ததாக உள்ளது [4]. இந்த மண்டலங்களில் வெளியிடப்படும் புரோப்பேன் உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், சீனாவிலிருந்து வரும் கோரிக்கைக்கும் ஈடுகொடுக்க வேண்டியதாக உள்ளது. இதனால் புரோப்பேன் ஐதரசன்நீக்கல்வினை திட்டங்கள் தொடர்ச்சியாக திட்டமிடப்படுகின்றன. இருப்பினும், களிப்பாறை வளிமம் அதிகமாக சுரண்டப்படுவதால் அமெரிக்காவின் இயற்கை வாயு குறிப்பிடத்தக்க அதிகரித்து வருகிறது புரோப்பேன் விலையும் குறைகிறது. வேதித் தொழிற்சாலைகள் ஏற்கனவே அமெரிக்காவில் புரோப்பேன் ஐதரசன் நீக்க தொழிற்சாலைகளுக்கு திட்டமிட்டுள்ளன. களிபாறை வளிமங்களில் இருந்து மலிவாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களை பயன்படுத்துதல் அனுகூலமாகக் கருதப்படுகிறது. உலகமெங்கும் பல்வேறு புரோப்பேன் ஐதரசன் நீக்கத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. ஐந்து தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது [5]. பயன்படுத்தப்படும் வினையூக்கிகள், உலையின் வடிவமைப்பு,, அதிக உற்பத்திக்கான யுக்திகள் போன்ரவை இத்தகைய திட்டங்களின் வெற்றியை நிர்ணயிக்கின்றன [6].

மெத்தனாலில் இருந்து ஒலிபீன்கள்/ மெத்தனாலில் இருந்து புரோப்பீன்கள் செயலாக்கத்தின் போது தொகுப்பு வாயு மெத்தனாலாக மாற்றப்படுகிறது. பின்னர் அந்த மெத்தனால் எத்திலீன் அல்லது புரோப்பீனாக மாற்றப்படுகிறது. தண்ணீர் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது.

2000 முதல் 2008 வரை சுமார் 35 மில்லியன் டன்கள் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா மட்டும்) புரோப்பேன் உற்பத்தி நிலையானதாக உள்ளது, ஆனால் இது கிழக்கு ஆசியா, குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் சீனாவில் அதிகரித்து வருகிறது. புரோப்பீனின் மொத்த உலக உற்பத்தியானது தற்போது எத்திலீன் தயாரிப்பு அளவின் பாதியாக இருக்கிறது [7].

பயன்கள்

[தொகு]

பெட்ரோவேதியியல் தொழிற்சாலைகளில் எத்திலீனுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கியமான தொடக்கப்பொருளாக புரோப்பீன் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான வேதிப் பொருள்கள் தயாரிப்புக்கு தாதுப் பொருளாக புரோப்பீன் உதவுகிறது. பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் பலபடியாக பாலிபுரோப்பைலீன் தயாரிக்க இது உதவுகிறது. புரோப்பைலீன் ஆக்சைடு, அக்ரைலோநைட்ரைல், கியூமின், பியூட்டைரால்டிகைடு, சாலிசிலிக் அமிலம் உள்ளிட்ட முக்கிய வேதிப் பொருள்கள் தயாரிப்பில் புரோப்பீன் உதவுகிறது. 2013 இல் மட்டும் உலகெங்கும் 85 மில்லியன் டன் புரோப்பீன் பயன்படுத்தப்பட்டுள்ளது [8].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Propene#section=Top
  2. 2.0 2.1 "Product Safety Assessment(PSA): Propylene". Dow Chemical Co.
  3. 3.0 3.1 "Propylene Production via Metathesis, Technology Economics Program". by Intratec, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-615-61145-7, Q2 2012.
  4. Ashford’s Dictionary of Industrial Chemicals, Third edition, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9522674-3-0, pages 7766-9
  5. Giovanni Maggini (2012-06-28). "Technology Economics: Propylene via Propane Dehydrogenation". Slideshare.net. பார்க்கப்பட்ட நாள் 2013-11-12.
  6. Giovanni Maggini (2013-04-17). "Technology Economics: Propylene via Propane Dehydrogenation, Part 3". Slideshare.net. பார்க்கப்பட்ட நாள் 2013-11-12.
  7. Organic Chemistry 6th edition, McMurry,J., Brooks/Cole Publishing, Pacific Grove USA (2005)
  8. "Market Study: Propylene (2nd edition), Ceresana, December 2014". ceresana.com. Archived from the original on 2020-12-02. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பிலீன்&oldid=3638906" இலிருந்து மீள்விக்கப்பட்டது