புற நச்சு
புற நச்சு (exotoxin) என்பது பாக்டீரியா, பூஞ்சை, பாசி மற்றும் ஒருசெல் உயிரி (புரோட்டோசோவா) ஆகிய நுண்ணுயிரிகளால் வெளியேற்றப்படும் நஞ்சாகும். புற நச்சானது, ஓம்புயிர்களின் உயிரணுக்களை அழிக்கும் (அ) இயல்பான உயிரணு வளர்சிதை மாற்றத்திற்கு இடையூறு விளைவிக்கும் தன்மையினைக் கொண்டது. புற நச்சுகள் உயிரணுக்களிலிருந்து சுரக்கப்பட்டோ அல்லது அகநச்சுக்களைப் போன்று செல் சிதையும்போதோ வெளிபடுகின்றன.
பெரும்பாலான புற நச்சுகள் சூடுபடுத்துவத்தின் மூலம் அழிக்கப்பட்டுவிடுகின்றன. இந்த நச்சுக்கள் அண்மையிலோ அல்லது உள்பரவிய நிலையிலோ விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. உயிர்வளியற்று வளரும் நுண்கிருமியான கிளாஸ்ட்ரீடியம் பொட்டுலினம் உருவாக்கும் பொட்டுலினம் நச்சு, தொண்டை அழற்சியினை உண்டாக்கும் கார்னிபாக்டீரியம் டிப்தீரியே நுண்ணுயிரியின் தொண்டைஅடைப்பான் நச்சு ஆகியவை நன்கு அறியப்பட்ட உதாரணங்களாகும். பிற உதாரணங்கள்: (காலரா) வாந்திபேதி நச்சு, (பெர்டூசிஸ்) கக்குவான் நச்சு, (ஷிஜா) வயிற்றளைச்சல் நச்சு, ஈ.கோலை உருவாக்கும் வெப்ப-அழிவு குடல்நச்சு.
உடலின் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கும் எதிர்ப்பான்களால் புற நச்சுகள் அழிக்கப்படுகின்றன என்றாலும், இவ்வகை நச்சுகள் மிகுதியான ஆற்றல்மிக்க நஞ்சுகளாக செயலாற்றுவதால் ஓம்புயிர்களின் எதிர்ப்பு அமைப்பானது புற நச்சுகளுக்கு எதிராக பணிபுரியும் முன்பாகவே உயிர்ச்சேதத்தினை விளைவிக்கும் தன்மையினைக் கொண்டவையாகும். பல புற நச்சுகளும் இலக்கு உயிரணுக்களின் மீது செயல்படும் முறையினைக் கொண்டு பகுக்கப்படுகின்றன.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stein PE, Boodhoo A, Armstrong GD, Cockle SA, Klein MH, Read RJ (January 1994). "The crystal structure of pertussis toxin". Structure 2 (1): 45–57. doi:10.1016/S0969-2126(00)00007-1. பப்மெட்:8075982.
- ↑ Lederberg, Joshua; Schaechter, Moselio (2004). The desk encyclopedia of microbiology. Amsterdam: Elsevier Academic Press. p. 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-621361-5.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Bacterial Pathogenesis: Bacterial Factors that Damage the Host - Producing Exotoxins". Archived from the original on 2010-07-27. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.