யாக்குப் கோலாசு
யாக்குப் கோலாசு Яку́б Ко́лас | |
---|---|
பிறப்பு | கான்ஸ்டான்ட்சின் மிஹைலவிச் மிட்ஸ்கீவிச் நவம்பர் 3 [யூ.நா. அக்டோபர் 22] 1882 அகின்சைட்சி, பெலருஸ் |
இறப்பு | ஆகத்து 13, 1956 மின்ஸ்க், பெலருஸ் |
தொழில் | கவிஞரும் எழுத்தாளரும் |
தேசியம் | பெலருசியர் |
காலம் | 1906-1956 |
யாக்குப் கோலாசு (Yakub Kolas, அல்லது Jakub Kołas) (பெலருசிய மொழி: Яку́б Ко́лас, நவம்பர் 3 [யூ.நா. அக்டோபர் 22] 1882 – ஆகத்து 13, 1956), இயற்பெயர் மித்ஸ்கேவிச் கான்ஸ்டன்த்சின் மிக்கைலவிச் (Міцке́віч Канстанці́н Міха́йлавіч) ஒரு பெலருசிய எழுத்தாளர் மற்றும் கவிஞர். 1926இல் பெலருசின் மக்கள் கவிஞர் என்றும் பெலருசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராக 1928 முதலும் துணைத்தலைவராக 1929இலும் இருந்துள்ளார். தமது கவிதைகளில் யாகுப் கோலாசு பெலருசிய விவசாயிகளின் மீது தமக்கிருந்த அன்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது புனைப்பெயரிலுள்ள கோலாசு என்பது பெலருசிய மொழியில் தானியக் கதிர் எனப் பொருள்படும்.
அவரது கவிதைத் தொகுப்புகள் சிறைப்பட்ட பாடல்கள் (1908), துக்கத்தின் பாடல்கள் (பெலருசிய மொழி: Песьні-жальбы, 1910), ஓர் புதிய உலகம் (பெலருசிய மொழி: Новая зямля, 1923), சைமன், இசைக்கலைஞர் (பெலருசிய மொழி: Сымон-музыка, 1925) ஆகியன ஆகும். அவரது கவிதை மீனவர் குடிசை (பெலருசிய மொழி: Рыбакова хата, 1947) சோவியத் ஒன்றியத்துடன் பெலருசு இணைந்தவுடன் எழுந்த சண்டைகள் குறித்தானது. கோலாசிற்கு 1946இலும் 1949இலும் சோவியத் நாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.