ஷெ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷெ மக்கள் (She people) என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் 11வது பெரிய இனக்குழுவினர் ஆவர்.

இவர்கள் பெரும்பாலும் சீனாவின் புஜியான், ஜெஜியாங், ஜியாங்சி, அன்ஹுய் மற்றும் குவாங்டாங் மாகாணங்களில் வசிக்கின்றனர் . தைவானில் ஹக்கா சிறுபான்மை மக்களிடையே சில ஷெ மக்கள் வாழ்கின்றனர்.

மொழிகள்[தொகு]

புஜியான், ஜெஜியாங் மற்றும் ஜியாங்சி மாகாணங்களில் உள்ள ஏறத்தாழ நான்கு இலட்சம் பேர் ஷெ சீன மொழி பேசுகின்றனர். இது கேசிய மொழியுடன் தொடர்புடைய ஓர் வகைப்படுத்தப்படாத சீன மொழி வகையாகும். குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷெ மக்கள் ஹ்மாங்-மியன் மொழியைப் பேசுகிறார்கள்.[1][2]

வரலாறு[தொகு]

ஷெ மக்கள் குவாங்டாங்கின் ஆரம்பகால குடியேறியவர்களில் இனக்குழுக்களில் ஒன்றாவர். இவர்கள் புதிய கற்காலத்தில் மீன்பிடிக்க ஆழமற்ற கரை பகுதிகளில் குடியேறியதாக கருதப்படுகிறது. போரிடும் நாடுகளின் காலத்தில், யுயெட் மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்த பிறகு, வளங்களுக்காக இரு மக்களிடையே கடுமையான போட்டி உருவானது. மிங்-கிங் வம்சங்களின் ஆட்சியின் போது, ஷி மக்கள் வடக்கு புஜியானில் உள்ள தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, பிறகு ஜெஜியாங்கின் தெற்குப் பகுதி மற்றும் யாங்சி நதி பகுதியில் உள்ள மலை பகுதிகளுக்கு சென்று குடியேறினர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 众说纷纭てき畲族民族みんぞく起源きげん.
  2. みなみ溟網· せき於畬ぞく研究けんきゅうてき回顧かいこ.
  3. https://books.google.com/books?id=cpfgQNWXpyoC&q=The+She+had+migrated+north+in+the+late+Ming+and+Qing+from+the+hills+of+northern+Fujian+into+southern+Zhejiang%3B+some+even+moved+into+the+Lower+Yangtze+mountain&pg=PA169. {{cite book}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெ_மக்கள்&oldid=3899514" இலிருந்து மீள்விக்கப்பட்டது