(Translated by https://www.hiragana.jp/)
IPL 2024 : ஃபைனலுக்கு முன்னேறுமா கொல்கத்தா? ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் வெற்றிபெற 160 ரன்கள் இலக்கு... – News18 தமிழ்

PRESENTS

விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / விளையாட்டு / IPL / IPL 2024 : ஃபைனலுக்கு முன்னேறுமா கொல்கத்தா? ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் வெற்றிபெற 160 ரன்கள் இலக்கு...

IPL 2024 : ஃபைனலுக்கு முன்னேறுமா கொல்கத்தா? ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் வெற்றிபெற 160 ரன்கள் இலக்கு...

அரைசதம் விளாசிய ராகுல் திரிபாதி

அரைசதம் விளாசிய ராகுல் திரிபாதி

ராகுல் திரிபாதி – ஹெய்ன்ரிச் கிளாசன் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது.

  • 1-MIN READ News18 Tamil Tamil Nadu
  • Last Updated :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் வேகத்தில் போல்டாகி வெளியேறினார்.

விளம்பரம்

அபிஷேக் சர்மா 3 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுக்க ஐதராபாத் அணி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையடுத்து இணைந்த ராகுல் திரிபாதி – ஹெய்ன்ரிச் கிளாசன் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. கிளாசன் 32 ரன்னில் ஆட்டமிழக்க இந்த இணை 5 ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

விளம்பரம்
இதையும் படிங்க - “எலிமினேட்டரில் ஆர்சிபியை மேக்ஸ்வெல் வெற்றிபெற வைப்பார்” - வாசிம் அக்ரம் கணிப்பு!

ராகுல் திரிபாதி 55 ரன்னும், அப்துல் சமத் 16 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவர்களில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 சிக்சருடன் 30 ரன்கள் சேர்க்க, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.

.
Tags: IPL , IPL 2024
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்