(Translated by https://www.hiragana.jp/)
தஞ்சை பெரிய கோவில் கட்டிய கல்லில் உருவான மற்றொரு கோயில்...எங்கு இருக்கு தெரியுமா? – News18 தமிழ்

PRESENTS

விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தஞ்சை பெரிய கோவில் கட்டிய கல்லில் உருவான மற்றொரு கோயில்...எங்கு இருக்கு தெரியுமா?

தஞ்சை பெரிய கோவில் கட்டிய கல்லில் உருவான மற்றொரு கோயில்...எங்கு இருக்கு தெரியுமா?

சிவாலயம் 

சிவாலயம் 

Sivan temple | சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் குறித்து விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு…

  • 1-MIN READ News18 Tamil Tiruchirappalli,Tiruchirappalli,Tamil Nadu
  • Last Updated :

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எரகுடி என்னும் ஊரில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலானது அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சூரியன், சந்திரன், காலபைரவர், வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகப்பெருமான், சிவபெருமானின் அப்பு, வாயு, தேயு போன்ற தெய்வங்கள், காசி விஸ்வநாதர் கஜலட்சுமி அம்மாள், நிர்தி கணபதி, ஐயப்பன் சந்நிதி, வன்னி மர விநாயகர் ஆகிய கடவுள் சந்நிதிகளும் இங்கு உள்ளது.

ஏழு முனைவர்கள் தங்கி இருந்ததால் இந்த ஊருக்கு எரகுடி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு கல் எடுத்துச் செல்லும் பொழுது ஒரு கல் இங்கே விழுந்ததாகவும், அதை கடவுளாக பாவித்து இங்குள்ள மக்கள் வழிபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த கடவுளுக்கு சிதம்பரேஸ்வரர் என்று பெயர் வரக் காரணம் சிதம்பரத்தில் இருப்பது போல இங்கும் மக்கள் சிவபெருமானை கொண்டாட்டத்தோடு வழிபட்டு வருவதால் பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

விளம்பரம்

இந்த கோவிலில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, திருவாதிரை, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கராஷ்டமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

.
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்